மாதவிடாய்.. ரத்தப்போக்கை குறைக்கும் பொட்டுக்கடலை.. ஜஸ்ட் கைப்பிடி போதும்.. பட்டு பட்டுனு நோயை ஓடும்
சென்னை: ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை, தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது என்கிறார்கள்.. அந்த அளவுக்கு பொட்டுக்கடலையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
பொரிகடலை என்று சொல்லப்படும் பொட்டுக்கடலையில், வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் அதிகமாக உள்ளன.. அதுமட்டுமல்ல, புரோட்டீன்கள் இந்த பொட்டுக்கடலையில் அதிகம். அதாவது, 100கிராம் பொட்டுக்கடலையை 480 கலோரிகள் உள்ளன. இரும்பு சத்து அதிகமாக உள்ளது. 100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் இருக்கிறதாம்.

எனவே, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்கள், இந்த பொட்டுக்கடலை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மிகவும் குறைந்த கலோரிகளை கொண்ட உணவாக உள்ளதால், அனைவராலுமே வரவேற்கத்தக்க உணவாக இந்த பொட்டுக்கடலை உள்ளது.. ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும் பொட்டுக்கடலை, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலன்களை தரக்கூடியது.
சத்துக்கள்: எனவே வளரும் குழந்தைகளுக்கு பொட்டுக்கடலை மிகவும் நல்லது.. அதிலும் இந்த பொட்டுக்கடலையுடன் வெல்லம் கலந்து தரும்போது கூடுதல் சத்துக்கள் கிடைக்கின்றன..
பெண்களுக்கு இந்த பொட்டுக்கடலை ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. காரணம், மாதவிலக்கு நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருப்பவர்கள், ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே ரத்தப்போக்கு கட்டுக்குள் வருமாம்..
கர்ப்பிணி பெண்கள் சத்தான உணவுகளை எடுத்து கொள்வது அவசியம் என்பார்கள், அந்த சத்தான உணவில் பொட்டுக்கடலையும் என்று. கர்ப்பிணிகள், சிறிது பொட்டுக்கடலை சாப்பிட்டு வந்தாலும், வயிற்றிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்குமாம். பெண்களின் ஹார்மோன் சுரக்கும் அளவை கட்டுப்படுத்துகிறது. மற்றும் இரத்த சர்க்கரை அளவை சரியான விகிதத்தில் வைக்கிறது.
உடல் எடை: அதேபோல, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களும் பொட்டுக்கடலையை தவறவிடக்கூடாது. நார்ச்சத்து அதிகம் என்பதால், நச்சுக்களும், கெட்ட கொழுப்புக்களும் கரைந்துவிடுகின்றன.. கெட்ட கொழுப்பை நீக்கினாலே, இதயம் ஆரோக்கியமாக காக்கப்படும்.. அஜீரண பிரச்சனைகளை இந்த பொட்டுக்கடலை சரி செய்வதால், குடல், வயிறு பகுதிகளின் ஆரோக்கியமாக உறுதியாகிறது.
வறுத்த பொட்டுக்கடலையை நீரிழிவு நோயாளிகள் சாப்படும்போது, குளுக்கோஸ் சமநிலை பெறுகிறது.. அதுமட்டுமல்ல, வயதானவர்களுக்கு எலும்பு தேய்மானங்கள் அதிகமாகும்.. அதேபோல, தசைகள், நரம்புகள் வலுவிழந்து விடும். இதற்கெல்லாம் பொட்டுக்கடலை சிறந்த உணவாகிறது. இந்த பொட்டுக்கடலையில், பாஸ்பரஸ் உள்ளதால் ரத்த அழுத்த பிரச்சனையை சீர்செய்கிறது..
தலைமுடி: சருமத்திற்கும், தலைமுடிக்கும்கூட இந்த பொட்டுக்கடலை நன்மை தருகிறது.. பொட்டுக்கடலையை சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை.. படை, சொறி, அரிப்புகள் அண்டுவதுமில்லை.. இளநரையை போக்கி, அடர்த்தியான தலைமுடிகள் வளர இந்த பொட்டுக்கடலை தூண்டுகோலாகிறது.
மொத்தத்தில் பொட்டுக்கடலையின் ஸ்பெஷாலிட்டியே இதிலிருக்கும் புரோட்டீன்கள்தான்.. எனவே, இறைச்சியை சாப்பிடாதவர்கள், அதற்கு பதிலாக பொட்டுக்கடலையை சாப்பிடலாம்.. அந்த அளவுக்கு புரதம் உள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications