கோழிக்கறி, மட்டன், மீனை சாப்பிட்டதுமே "பால்" குடிக்கலாமா? இதை மறந்தும் செய்யாதீங்க.. சூப்பர் டிப்ஸ்
சென்னை: கால்சியம் சத்துக்கள் நமக்கு கிடைக்க வேண்டுமானால் "பால்" கட்டாயம் நாம் சேர்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.. பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன தெரியுமா?
1 கப் பாலில் 5 கிராம் கொழுப்பும், 152 கலோரிகளும் உள்ளதால், குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக்கொள்வதை பெரும்பாலும் தவிர்த்து வருவார்கள்.

ஆனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், முற்றிலும் பாலை தவிர்க்க தேவையில்லை.. ஒரு கிளாஸ் குளிர்ந்த பாலை குடிக்கும்போது, அதிலுள்ள கால்சியம் சத்தானது, மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை எரிக்க உதவுகிறது.. இதனால் வயிறு நிரம்பும் உணர்வு கிடைப்பதால், மற்ற உணவுகளை சாப்பிடுவது தவிர்க்கப்படும் என்று மாற்று கருத்தை முன்வைக்கிறார்கள்.
ஆய்வு: கடந்த 2004ம் ஆண்டு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், குறைந்த கலோரி டயட்டை பின்பற்றுவோர் தினமும் 3 முறை பால் அல்லது பால் சார்ந்த உணவு பொருட்களை சாப்பிட்டதால், உடல் எடையை குறைக்க பால் அதிகம் உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளதாம். எனவே, பாலை தவிர்ப்பவர்களை விட, பால் வருவோர் சீக்கிரத்தில் உடல் எடையை குறைக்கலாம் என்கிறார்கள்.
உடல் பருமன்: அதுமட்டுமல்ல, 250 மி.லி பால் தினமும் குடித்து வந்தால், மெட்டபாலிசம் அதிகரிக்கும்.. செரிமான கோளாறுகள் நீங்கும், சரும அழகுக்கு உதவும்.. உடல் பருமன், டைப் 2 வகை சர்க்கரை நோய், இதய பாதிப்புகள், உடல் செயல்திறன் பாதிப்பு போன்ற பிரச்சனைகளை முன்கூட்டியே தடுக்க முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எலும்புகளுக்கும், பற்களும் வலு சேர்ப்பதில் பாலுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது.
அதேசமயம், சர்க்கரை நோயாளிகள் பாலை தவிர்க்கலாம் என்கிறார்கள்.. அந்தவகையில், பால் குடிப்பது நல்லதா? கெட்டதா? என்ற விவாதங்கள் தொடர்ந்து எழுந்தபடியே உள்ளது.. ஆனால், பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளையும் நாம் அறிந்து வைத்து கொள்ள வேண்டும். காரணம், எளிதில் ஜீரணமாகாத பாலுடன் சேர்த்து சில உணவுகளை நாம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இது பல்வேறு உடல் உபாதைகளை நமக்கு ஏற்படுத்திவிடும்.
பாலும் கீரையும்: குறிப்பாக, பாலும் கீரையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இரண்டுமே செரிமானம் ஆகாது.. வயிறு வலி, மந்தம் போன்றவை வந்துவிடும். .. அதேபோல, மட்டன், சிக்கன், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் அது அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும்..
அதேபோல, தர்பூசணி பழம் சாப்பிட்ட பிறகு பால் குடித்தால் வாயு தொல்லையை தந்துவிடுமாம். வாழைப்பழத்துடன் சேர்த்து பால் குடித்தாலும் அஜீரணம், மந்தம், நெஞ்செரிச்சலை தந்துவிடும்.
புளிப்பு: ஆரஞ்சு, எலுமிச்சை என வைட்டமின் சி நிறைந்த பழங்களுடன் சேர்த்து பால் குடித்தாலும், அசிடிட்டி உட்பட வயிறு கோளாறுகளை ஏற்படுத்திவிடும்.. அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். புளிப்பு உணவுகள் சாப்பிட்டால், அடுத்த அரை மணி நேரத்துக்கு பால் சம்பந்தப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால் வயிற்றுப்போக்கு பாதிப்பு வரும்.












Click it and Unblock the Notifications