மாம்பழத்திலிருந்து 5 பெரிய நன்மை.. மாம்பழத்துடன் சாப்பிடக்கூடாத உணவு இதுதான்.. பழத்தை நோட் பண்ணுங்க
சென்னை: மாம்பழத்தை அதிகம் விரும்பி சாப்பிடுகிறீர்களா? அப்படியானால், இந்த 5 முக்கிய விஷயங்களையும் தெரிந்து கொள்வது நல்லது.
மாம்பழத்தில் வைட்டமின் A, நார்சத்து, கார்போஹைட்ரேட், சர்க்கரை சத்து போன்றவை உள்ளன.. எனவே, நமக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவையும் கிடைக்கிறது.

அந்தவகையில், மாம்பழங்கள் சுவை தருவதுடன் அதிக ஆரோக்கியத்தையும் தரக்கூடியவை.. குறிப்பாக, உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரால்களை குறைக்கும் சக்தி இந்த மாம்பழங்களுக்கு உள்ளது.. இதற்கு காரணம், இப்பழத்தில் பெக்டின், வைட்டமின் C, நார்ச்சத்து அதிக நிறைந்துள்ளதுதான். உடலில் தேங்கிக்கிடக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்துவிடுகிறது இந்த மாம்பழங்கள்..
செரிமான மண்டலம்: அதேபோல, அஜீரண பிரச்சனை உள்ளவர்கள் இந்த மாம்பழத்தை கட்டாயம் சாப்பிடலாம். இதிலிருக்கும் பயோஆக்டிவ் கலவைகள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகின்றன.. அஜீரணம், அசிடிட்டி பிரச்சனையை சரி செய்யக்கூடியது என்பதால்தான், உணவு சாப்பிட்டதுமே, மாம்பழங்களை பலரும் சாப்பிடுவார்கள்.
டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் மாம்பழத்தில் ஜிங்க் சத்து நிறைய உள்ளது.. எனவே, விறைப்புத்தன்மையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக மாம்பழங்கள் உள்ளன.. அதுமட்டுமல்ல, மக்னீசியம் என்ற கனிமச்சத்துக்கு, மன அழுத்தம், மனக்கவலையை போக்கி சாந்தப்படுத்தும் குணம் உள்ளது.. மாம்பழத்தில் பொட்டாசியம் நிறைய உள்ளதால், ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவில் வைத்திருக்க உதவுகிறது..
தவிர்க்கலாம்: அதேசமயம், மாம்பழத்தை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது.. உடல்சூடு அதிகமாவதால், முகப்பரு ஏற்படலாம். நெஞ்சு எரிச்ச்சலும் வரலாம்.. பற்களில் கேவிட்டி பிரச்சனையும் வரலாம்..
நிறைய மாம்பழங்களை சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு, உப்புசம், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படலாம்.. இயற்கை சர்க்கரைகள் மற்றும் கலோரிகள் இந்த பழத்தில் அதிகம் என்பதால், உடல் எடை கூடிவிடும்.. அதுவும் சர்க்கரை நோயாளிகள் இதை தொடவே கூடாது.. மாம்பழங்கள் அதிகம் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக கூடும். எனவே, ஆரோக்கியமானவர்களாக இருந்தாலும், 300 கிராம் அளவு சாப்பிடுவது மட்டுமே நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்..
குளிர்ச்சி + சூடு: அதுமட்டுமல்ல, மாம்பழத்துடன் தவிர்க்க வேண்டிய சில உணவுகளும் உள்ளன.. மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு தயிர்சாப்பிட கூடாது.. தயிர் குளிர்ச்சியை தரக்கூடியது, மாம்பழம் உடல் உஷ்ணத்தை ஏற்படுத்துவது.. எதிரெதிர் பண்புகளை இந்த உணவுகள் கொண்டிருப்பதால் ஒன்றாக சேர்த்து சாப்பிடக்கூடாது. இது செரிமானத்துக்கும், வயிறு உபாதைகளுக்கும் வழிவகுத்துவிடும்..
மாம்பழத்துடன் காரமான உணவு வகைகளை சாப்பிடக்கூடாது.. இது அசிடிட்டி பிரச்சினையை தந்துவிடும்.. மாம்பழத்துடன் பாகற்காய் சேர்த்து சாப்பிடக்கூடாது.. மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.. 15 நிமிஷம் கழித்தே குடிக்க வேண்டும்.
ஐஸ்கிரீம்: மாம்பழத்துடன் ஐஸ்கிரீம் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவையும் குளிர்ச்சி + உஷ்ணம் தன்மை கொண்டவை என்பால் செரிமான பாதிப்பு ஏற்படும்.. மாம்பழங்களுடன் ஆரஞ்சு, பெர்ரி, கிவி போன்ற சிட்ரஸ் வகை பழங்களை சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. அப்படி சாப்பிட்டால் உடலின் பி.எச். சமநிலையில் ஏற்றத்தாழ்வு வரும்..
கார்பனேற்றப்பட்ட பானங்களையும் தவிர்க்கலாம்.. இரண்டிலும் சர்க்கரை உள்ளதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென அதிகரிக்கும். மாம்பழத்துடன் மது அருந்தக்கூடாது!
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications