மீனுடன் முட்டை சாப்பிடலாமா? மீன்களுடன் "இதை" மட்டும் சேர்க்காதீங்க.. எல்லாருக்கும் பெஸ்ட் உணவு மீன்
சென்னை: மீனுடன் முட்டையும் சேர்த்து சாப்பிடலாமா? மீனுடன் சாப்பிடலாமா? மீனுடன் சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாமா?
சாப்பிடும் விஷயத்தில் சரியான வழிமுறைகளை கடைப்பிடித்தாலே, பாதி நோய்கள் நம்மை அண்டாது என்கிறார்கள்.. அதிலும் மீன் என்பது மிக முக்கியமான, சத்துக்கள் நிறைந்த பொருள்.

வாரம் 1 முறையாவது மீன் சாப்பிடுவது நல்லது என்று டாக்டர்களே பரிந்துரைக்கிறார்கள். அதேசமயம், கடல்வாழ் உயிரினம் என்பதால், மீன், கருவாடுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்றும் அறிவுறுத்துகிறார்கள்,
அறிவுறுத்தல்: குறிப்பாக, மீனுடன் தயிரை சேர்த்து சாப்பிடக்கூடாது.. மீனுடன் பால், தயிர் போன்ற லாக்டிக் பொருட்கள் கலந்து சாப்பிடக்கூடாது. மீனுடன் கீரைகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.. இதற்கெல்லாம் அடிப்படை காரணம், செரிமான பிரச்சனைதான்.. செரிமானத்தை மந்தப்படுத்திவிடும் தன்மைகள் கொண்ட 2 உணவுகளையும் ஒன்றாக சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.
மீன் + தயிர், மீன் + கீரை, மீன் + பால், மீன் + முட்டை இவைகள் எல்லாமே சத்துக்கள் நிறைந்தவை.. புரோட்டீன்கள் அதிகமாக உள்ளவை. நார்ச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ளவை.. எனவே, இவைகளை ஒன்றாக சாப்பிடும்போது செரிமானம் தாமதமடைந்து, சத்துக்கள் முழுமையாக கிடைக்காமல் போய்விடும்... தனித்தனியாக சாப்பிடுவதே ஆரோக்கியம் என்கிறார்கள்.
முள்ளங்கி: அதேபோல, மீன்களுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிட்டாலும், சளி, மலச்சிக்கல் தொந்தரவுகள் வரலாம். மீனும், முள்ளங்கியும் ஒன்றுக்கு, ஒன்று எதிர் எதிர் குணங்களைக் கொண்டவை. திப்பிலியுடன் மீன் சேர்த்து சாப்பிட்டாலும் குடல் பாதிப்புகள் வரலாம்..
மீனுடன் முட்டையையும் சேர்த்து சாப்பிடக்கூடாதாம்.. ஒன்றன் பின் ஒன்றாகவும் சாப்பிடக்கூடாதாம்.. இரண்டுமே புரோட்டீன் நிறைந்த உணவு என்பதால், புரத ஒவ்வாமையை இவைகள் ஏற்படுத்திவிடுவதுடன், தோல் வெடிப்புகளையும் தந்துவிடும். அதனால்தான், மீன், முட்டையை ஒருசேர சாப்பிடுவதை தவிர்க்க சொல்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், ஒரே குணங்களை கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும்.
சிட்ரஸ் பழங்கள்: மீனுடன் சிட்ரஸ் பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. காரணம், சிட்ரஸ் பழங்களில் அமிலம் இருப்பதால், இது மீன்களில் உள்ள புரோட்டீன்களுடன் சேர்ந்து வினைபுரியும்.. இதுவும், அஜீரண பாதிப்பை தந்துவிடும். தேன் குடித்துவிட்டும் மீன் சாப்பிடக் கூடாது... இதனால் சுவாசப்பிரச்சனைகள் வரும்.
அதேபோல, அதிகமாக பதப்படுத்தப்பட்ட அல்லது வறுத்த உணவுகளுடனும் கலந்து சாப்பிடக்கூடாது. இதனால், மீனிலுள்ள ஊட்டச்சத்து குறைந்துவிடும்.. அதுவும் இல்லாமல், வறுத்த உணவுகளில் ஏகப்பட்ட நிறைவுற்ற கொழுப்புகளும், டிரான்ஸ் கொழுப்புகளும் உள்ளதால், இதயத்துக்கு கெடுதலை தந்துவிடும்.
காரமான உணவு: அதேபோல, காரமான உணவுகளுடன் மீனை சாப்பிடக்கூடாது. இது இரைப்பைக்கும், குடலுக்கும் கோளாறை உண்டுபண்ணிவிடுமாம்.. குறிப்பாக, வீக்கம் போன்ற பிரச்சனை வந்துவிடும் என்று அறிவுறுத்துகிறார்கள் உணவு நிபுணர்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications