அர்த்தராத்திரியில் நீங்க பரோட்டோ சாப்பிடறீங்களா? மைதா மாவு உணவுகளில் இத்தனை ரகசியமா? அடேங்கப்பா
சென்னை : மைதா உணவுகளை ஆசையாக சாப்பிடுகிறீர்களா? இரவில் பரோட்டா சாப்பிடுகிறீர்களா? அப்படியானால், உடல்நலனில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டியிருக்கிறது.
கோதுமை மாவை பதப்படுத்தி, அதிலிருந்து தவிடு, என்டோஸ்பெர்ம் போன்றவற்றை நீக்கிவிடுவார்கள்.. அதாவது, கோதுமை மாவிலிருக்கும் நார்ச்சத்துக்கள், ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் நீக்கிவிட்டால், அதுதான் மைதா. வெள்ளை கலர் மாவு கிடைக்கும். இப்படி எந்தவிதமான சத்துக்களும் இல்லாத மைதாவை, நாம் சாப்பிட கூடாது என்கிறார்கள்..

இதில், கிளைசெமிக் குறியீடு நிறைந்திருக்கும் என்பதால் ரத்த சர்க்கரை அளவையும் உயரச்செய்துவிடும்.. இதனால், இன்சுலின் எதிர்ப்பையும் ஏற்படுத்திவிடும்.. உடலில் நீரிழிவு நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக இந்த மைதா திகழ்கிறதாம்.
ஆய்வுகள்: அதாவது, மைதா சம்பந்தப்பட்ட உணவினை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு 90 சதவீதம் சர்க்கரை நோய் வரவாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆய்வு ஒன்று கூறுகிறது.
அதாவது, 100 கிராம் மைதாவில் 351 கலோரிகள் உள்ளது. மேலும் 10.3 கிராம் புரதம், 0.7 கிராம் கொழுப்பு, 2.76 கிராம் நார்ச்சத்து, 74.27 மாவுச்சத்து இருக்கிறதாம்.. இப்படி எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதாவில் செய்த உணவை, மிக குறைவாக சாப்பிட்டாலும்கூட, ரத்த சர்க்கரை அளவு உடனே கூடிவிடுமாம்.
மைதா: அதுமட்டுமல்ல, மைதாவில் எந்த உணவு செய்தாலும் அதிகமான எண்ணெய் பயன்படுத்தியே செய்யப்படுகிறது.. இதனால், மைதாவுடன் சேர்த்து எண்ணெய்யும் நமக்கு கெடுதலை தந்துவிடுகிறது.. கொழுப்பு அதிகமாகி உடல் எடை கூடிவிடும்.. இது இதயத்துக்கு பாதிப்பை தந்துவிடும்.. ரத்த அழுத்தத்தையும் அதிகப்படுத்திவிடும்...
நார்ச்சத்து உட்பட எந்த சத்துமே இலலாத இந்த மைதா உணவுகள் எளிதில் ஜீரணமாகாது.. செரிமான கோளாறையும் உண்டாக்கிவிடும்.. மைதா உணவை சாப்பிடும்போது, குடல் பகுதியில் பசைபோல உருவாகி, செரிமானத்துக்கு தடங்கலை ஏற்படுத்துவதால், மைதாவை "Glue of the gut" என்று கிண்டலாக சொல்வார்கள். அதாவது, குடலின் இயக்கத்தை முற்றிலுமாக மந்தப்படுத்தி மலச்சிக்கலை மைதா உணவுகள் தந்துவிடும்.
இதற்கு இன்னொரு காரணம், ஏகப்பட்ட ரசாயனங்கள், வேதிப்பொருட்களை கொண்டுதான், அந்த வெள்ளை வெளேர் நிறம் கொண்டுவரப்படுகிறது. எனவே, இந்த மருந்துகளும் வயிற்றுக்குள் சென்று செரிமானத்தை தடைசெய்துவிடும்.
எலும்புகள்: அதுமட்டுமல்ல, இந்த கெமிக்கல்கள், உடலிலுள்ள எலும்புகளையும் பலவீனமடைய செய்கிறது.. அதாவது, கால்சியம் சத்துக்களை அழித்துவிடுவதால், எலும்பின் அடர்த்தியும் குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
அதனால்தான், மைதாவில் செய்யும் பரோட்டாவை தவிர்க்க சொல்கிறார்கள்.. அதுவும் இரவு நேரத்தில் எண்ணெய்யால் பிசைந்து தயாரிக்கப்பட்ட மைதாவை சாப்பிடும்போது, அது எளிதில் ஜீரணமாவதில்லை.. உடலுழைப்பு இல்லாமல் அப்படியே சாப்பிட்டுவிட்டு தூங்கும்போது, கூடுதல் பாதிப்பை தந்துவிடுகிறது. பெரும்பாலானோர் இரவில்தான் பரோட்டோவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால், அதனை தவிர்ப்பதே நல்லது என்கிறர்கள்.
தவிர்க்கலாம்: யார் யார் மைதாவை தவிர்க்கலாம்? சர்க்கரை நோயாளிகள், கீல் வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், உடல்பருமன் உள்ளவர்கள் மைதாவை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.. இதில், எடை அதிகமாக உள்ள பெண்களும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், எடை இன்னும் அதிகமாகிவிட்டால், மாதவிடாய் தள்ளிப்போவது முதல் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரலாம் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
அதேசமயம், பரோட்டோ போன்ற உணவுகளை அளவுடனும், அதிக இடைவெளி விட்டும், சாப்பிடலாம் என்றும் இதுகுறித்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஒருசாரார் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications