நெற்றியில், முகத்தில், கழுத்தில் வரும் தேவையற்ற முடி! ஒரு முட்டை போதுமே! பெண்களுக்கு பியூட்டி டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகத்தில் தேவையற்ற முடிகள் வளர என்ன காரணம்? இந்த முடிகளை போக்கும் எளிய டிப்ஸ்கள் என்னென்ன தெரியுமா?

ஹார்மோன் குறைபாடுகள் காரணமாக முகம், கழுத்து, தாடை பகுதிகளில் பெண்களுக்கு முடிகள் வளர்ந்துவிடுகின்றன.. ஒருசில மாத்திரைகளை உட்கொள்வதாலும், பெண்களுக்கு முகத்தில் முடி வளரலாம். அல்லது உடல் ரீதியிலான மாற்றங்கள் போன்ற காரணங்களினாலும், முடிகள் முகத்தில் வளரலாம்.

Health Health tips Egg Egg White Beauty Tips

இதனை தவிர்க்க நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியது கிழங்கு மஞ்சள்தான்.. மிகச்சிறந்த கிருமிநாசினியான இந்த மஞ்சளில், ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் பண்புகள் உள்ளதால், சருமத்துக்கு போதுமான பாதுகாப்பை மஞ்சள்கள் ஏற்படுத்திவிடுகின்றன.

மஞ்சள்: இந்த மஞ்சளை தேய்த்து, அதில் எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால், முகத்தில் முடி வளர்வது கட்டுப்படும்... கஸ்தூரி மஞ்சளையும் அரைத்து பயன்படுத்தலாம். அதில் சிறிது பாலாடையையும் சேர்த்து கலந்து பூசவேண்டும்.

எலுமிச்சம் சாறுடன் சிறிது சர்க்கரையை சேர்த்து லேசாக சூடாக்கவும். இந்த விழுதினை, முகம், கழுத்து உட்பட மீசை போன்று வளர்ந்திருக்கும் முடிகளின் மீது தேய்த்து மசாஜ் செய்தால் போதும்.. முடிகள் பேஸ்ட் இறுக்கத்தில் இணைந்து வெளியே வந்துவிடும்.

முட்டையின் கரு: முட்டையின் வெள்ளைக்கரு சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகின்றன.. குறிப்பாக முகத்திலுள்ள இறந்த செல்களை நீக்கும் தன்மை முட்டையின் வெள்ளைக்கருவுக்கு உண்டு.. எனவே, முட்டையின் வெள்ளைக்கருவுடன், 2 ஸ்பூன் கான்பிளார் மாவு, 1 ஸ்பூன் சர்க்கரை கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவிட வேண்டும். பிறகு காய்ந்ததுமே அந்த வெள்ளைக்கருவை உரித்தால், முடியுடன் சேர்த்து வெளியே உதிர்ந்துவிடும்.

கடலைமாவு சருமத்துக்கு மிகவும் நல்லது.. எந்தவிதமான பக்கவிளைவையும் உண்டுபண்ணாது.. இந்த கடலை மாவில் எக்ஸ்ஃபோலியேட் பண்புகள் இருப்பதால், தாராளமாக முகத்துக்கு பயன்படுத்தலாம்..

கடலை மாவு: இந்த கடலை மாவில் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தடவலாம்.. காரணம், தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளதால் சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகின்றன.. எனவே, தயிர், கடலை மாவு இந்த இரண்டையும் பேஸ்ட் போல கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் போதும்..

பச்சை பயிறு தோலை பசும்பாலில் கலந்து, அதில் சிறிது எலுமிச்சம் சாறு கலந்து முகத்தில் பூசினாலும் முடிகள் வளர்ச்சி தடைபடும். அல்லது தக்காளி சாறுகளை பூசிவந்தாலும் முடி வளர்ச்சி கட்டுப்படும்.

வசீகரம்: முகத்தின் வசீகரத்துக்கும், தேவையற்ற முடிவளர்ச்சியை தடுக்கவும், பப்பாளி பெரிதும் பயன்படுகிறது.. காரணம் இந்த பழத்தில் பாபைன் என்ற முக்கிய பொருள் உள்ளது.. இதைத்தவிர வைட்டமின் A, C, உட்பட நிறைய என்சைம்கள் உள்ளதால், சருமத்தை பேணி காக்கின்றன.. பப்பாளிப்பழத்தை பாலில் மசித்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊறவிட்டு கழுவி வரலாம்.

மஞ்சளை, பப்பாளி காய்களுடன் சேர்த்து அரைத்தும் முகத்தில் பயன்படுத்தலாம.. கஸ்தூரி மஞ்சள் தூளுடன் பாசிப்பயிறு பவுடரை சேர்த்தும் குழைத்து முகத்தில் தடவலாம். ஓட்ஸ் பொடியுடன் வாழைப்பழத்தை சேர்த்து மசித்து, முகத்தில் தடவினாலும் முடி உதிரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+