சூப்பர் ஹிட் அடித்த திட்டம்.. குவியும் சென்னை மக்கள்.. அது என்ன மாலைநேர கிளினிக்? ஏன் முக்கியம்?
சென்னை: சென்னையில் இயங்கி வரும் மாலைநேர கிளினிக் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த கிளினிக் எண்ணிக்கை 30க்கும் மேல் அதிகரித்து உள்ளது. முதியவர்கள், பெண்கள் பலர் இந்த கிளினிக்குகளுக்கு அதிகம் வருகின்றனர்.
இந்தியாவில் இரண்டு முன்னேறிய மாநிலங்கள் என்றால் அது தமிழ்நாடும் மகாராஷ்டிராவும் தான். இந்த இரண்டு மாநிலங்கள்தான் இந்தியாவின் ஜிடிபிக்கும் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. இந்த இரண்டு மாநிலங்கள்தான் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு முதுகெலும்பாக உள்ளது.

மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால் அந்த மாநிலம் மும்பை, புனே என்ற இரண்டு நகரங்களை கொண்டு உள்ளது. மற்ற மகாராஷ்டிரா பகுதிகள் இன்னும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடையவில்லை. ஆனால் தமிழ்நாடு பரந்துபட்ட வளர்ச்சியை பெற்றுள்ளது.
முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று ஒவ்வொரு மாவட்டமும், மண்டலங்களும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழ்நாடு முக்கியமாக ஆட்டோமொபைல் துறையிலும் மருத்துவ துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்று அழைக்கப்படும் அளவிற்கு மருத்துவ துறைக்கு தமிழ்நாடு மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுத்து உள்ளது.
தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு என்றால் தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய மருத்துவ பயணிகளின் வருகைதான். தமிழ்நாட்டிற்கு வருடா வருடம் வரக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை உயர்வதற்கு மிக முக்கியமான காரணம் சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக இருப்பதுதான்.
சென்னையில் சமீபத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் கலைஞர் உயர்நோக்கு மருத்துவமனையை தொடங்கி வைத்தார். சென்னையில் மக்கள் எளிமையாக மருத்துவத்தை பெறுவதற்காக ஏகப்பட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன.
அந்த வகையில் சென்னையில் இயங்கி வரும் மாலைநேர கிளினிக் மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் இதை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
மாலைநேர கிளினிக்: மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நகரின் 160 வார்டுகளில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆரோக்கிய மையங்களில் மாலை நேர கிளினிக்குகள் செயல்படுகின்றன. இந்த மாலை நேர கிளினிக்குகள்தான் சென்னையில் தற்போது சூப்பர் ஹிட்.
மாலை நேர கிளினிக்குகள் இரத்தப் பரிசோதனை, பொதுவான நோய்களுக்கான பரிசோதனை மற்றும் பல், மனநலம், மகளிர் மருத்துவம் மற்றும் தோல் மருத்துவம் போன்ற சிறப்புப் பரிசோதனைகள் அனைத்தையும் இலவசமாக வழங்குகின்றன.
எத்தனை இடங்கள்: சென்னையில் முதலில் 8 இடங்களில் மாலைநேர மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டது. ஆலந்துார், ஷெனாய் நகர், போரூர், செம்மஞ்சேரி, அயனாவரம், சஞ்சீவராயன் பேட்டை பகுதிகளில் முதலில் இந்த கிளினிக் தொடங்கப்பட்டது.
தற்போது இந்த கிளினிக் எண்ணிக்கை 30க்கும் மேல் அதிகரித்து உள்ளது. முதியவர்கள், பெண்கள் பலர் இந்த கிளினிக்குகளுக்கு அதிகம் வருகின்றனர்.
அதேபோல் பள்ளி செல்லும் சிறுவர், சிறுமியர் பலரும் இங்கே அடிக்கடி வருகின்றனர். இது போக பணிக்கு செல்வோர், எளிதாக சிகிச்சை பெற வசதியாகவும், குடிசை பகுதி மக்களின் வசதிக்காகவும் இந்த கிளினிக்குகள் செயல்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் இதை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த கிளினிக்குகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications