சிக்கன் ஈரல் vs மட்டன் ஈரல்.. இரண்டில் எது பெஸ்ட்.. கர்ப்பிணி பெண்கள் "இந்த" ஈரலை தொடவே கூடாது
சென்னை: நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ரொம்பவே முக்கியமானது. அதன்படி அசைவ உணவு சாப்பிடுவோருக்குக் கட்டாயம் வரும் அட்வைஸ்களில் ஒன்று ஈரலை வாங்கி சாப்பிடுங்கள் என்பது தான். இதில் சிலருக்கு சில சந்தேகங்கள் இருக்கலாம்.. சிக்கன் ஈரல், மட்டன் ஈரல் இரண்டில் எது நல்லது.. எத்தனை கிராம் வரை சாப்பிடலாம் எனப் பல கேள்விகள் இருக்கும். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
அசைவ உணவு சாப்பிடுவோர் வாரா வாரம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே சிக்கன் அல்லது மட்டன் கடைக்குச் சென்றுவிடுவார்கள். அசைவம் இல்லாமல் ஞாயிற்றுக்கிழமை என்பது இவர்களுக்கு முழுமையடையாது.

ஈரல்: அதேநேரம் நாம் சிக்கன் வாங்கினாலும் சரி, மட்டன் வாங்கினாலும் சரி அதன் ஈரலை வாங்குவதே ஒரு பெரிய போராட்டமாக இருக்கும். குறிப்பாக மட்டன் கடையில் ஈரலைக் கேட்டால் அவர்கள் விடும் ரியாக்ஷன் ஏதோ நாம் இலவசமாக கேட்பது போல இருக்கும். ஏனென்றால் ஈரல் என்பது அசைவம் சாப்பிடுவோர் இடையே மிகவும் சத்தான உணவுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைவரும் ஈரல் கேட்பதால் கடைக்காரர்களும் விழிபிதுங்கிப் போவார்கள்.
சிக்கன் ஈரல் vs மட்டன் ஈரல்: சரி விஷயத்திற்கு வருவோம். சிக்கன் ஈரல், மட்டன் ஈரல் இரண்டில் எது சிறந்தது.. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். சிக்கன், மட்டன் இரண்டு ஈரலிலும் கலோரி, புரதச் சத்து, கொழுப்பு, கொலஸ்ட்ரால் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே அளவு தான் இருக்கும். இரண்டு ஈரல்களிலும் கொலஸ்ட்ரால் மட்டுமே அதிகமாகவே இருக்கும். இதில் முக்கிய வேறுபாடே இதில் உள்ள வைட்டமின்களில் தான் உள்ளது.
இரண்டு ஈரல்களில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் பி 12 இருப்பதாகக் கூறுகிறார் பிரபல ஊட்டச்சத்து வல்லுநர் அருண்குமார். இது குறித்து அவர் தனது யூடியூப் சேனலில் மேலும் கூறுகையில், "மட்டன் ஈரலில் 100 கிராமுக்கு 6000 யூனிட் வைட்டமின் ஏ இருக்கிறது. இது நமது தினசரி தேவைக்கு போதுமானது. அதேநேரம் சிக்கன் ஈரலில் 100 கிராமுக்கு சுமார் 16000 யூனிட் வைட்டமின் ஏ இருக்கிறது. இது சராசரி தேவையை விட 3 மடங்கு அதிகம்.
இதுதான் மேட்டர்: மறுபுறம் வைட்டமின் பி 12ஐ பொறுத்தவரை சிக்கன் ஈரலில் 100 கிராமில் 16 மைக்ரோகிராம் வைட்டமின் பி 12 இருக்கிறது. இது சராசரி தேவையை விட 5 முதல் 6 மடங்கு அதிகம். மறுபுறம் மட்டன் ஈரலில் 100 கிராமில் சுாமர் 85 மைக்ரோகிராம் வைட்டமின் பி 12 இருக்கிறது. இது தினசரி தேவையைக் காட்டிலும் 30 மடங்கு அதிகம் அதிகமாகும். இந்த மட்டன் ஈரல் முக்கியமானது. இதன் குறைபாடு ஏற்பட்டால் நரம்பியல் பிரச்சினைகளும், ரத்த சோகையும் ஏற்படும். சைவ உணவு சாப்பிடுவோருக்கு இந்த வைட்டமின் பி 12 குறைபாடு தான் அதிகம் ஏற்படும்.
வைட்டமின் பி 12 என்பது தண்ணீரில் கரையக்கூடியது. எனவே, உடல் தேவையை விட அதிகளவில் வைட்டமின் பி 12ஐ நாம் எடுத்துக் கொண்டால் அது சிறுநீர் மூலம் வெளியே வந்துவிடும். அதேநேரம் வைட்டமின் ஏ கொழுப்பில் தான் கரையக்கூடியது. எனவே, அது மூளை, லிவரில் அதிகளவில் சென்று சேர வாய்ப்பு இருக்கிறது. இதனால் நமக்குப் பல வித பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே, நாம் அதில் கவனமாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிப் பெண்கள்: பெரியவர்கள் வாரம் ஒரு முறை எந்த ஈரலாக இருந்தாலும் தாராளமாக 100 கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் 50 கிராம் எடுத்துக் கொள்ளலாம்.
அதேநேரம் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். முதல் 3 மாதங்கள் வைட்டமின் ஏ அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இது குழந்தையின் கருவில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, முதல் 3 மாதங்கள் கர்ப்பிணிப் பெண்கள் வாரத்திற்கு 50 கிராம் மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஆனால், 3 மாதத்திற்குப் பிறகு பிரச்சினை இல்லை.. வாரம் 100 கிராம் எடுத்துக் கொள்ளலாம்" என்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications