கல்லீரல் நோயை விரட்டும் தேங்காய் பூ.. கேன்சரை நெருங்க விடாமல் தடுக்கும் தேங்காய் முட்டையின் அதிசயம்
சென்னை: தேங்காய் முட்டை என்றால் என்ன? இதனை எப்படி தயாரிக்கலாம் தெரியுமா? தேங்காய் பூக்களால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தேங்காய் பூவில் உள்ள சத்துக்கள் என்னென்ன? இவைகள் அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
தேங்காயை பொறுத்தவரை, கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள் போன்றவை நிரம்பியிருக்கின்றன.

தேங்காயிலுள்ள அளவுக்கு அதிகமான நார்ச்சத்துதான், ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்க உதவுகின்றன.. முதுமையை தள்ளி போட்டு சருமத்தையும் காக்கின்றன. அல்சர், வயிற்றெரிச்சல், அல்சீமர் நோய் போன்ற பாதிப்புகளையும் தடுக்கின்றன.
தேங்காய் சத்துக்கள்: தேங்காயிலுள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை என்பதால், கொழுப்புகள் உடலில் தேங்குவதில்லை.. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை கூட்டும் சக்தி இந்த தேங்காய்களுக்கு உண்டு.
அதேபோல, தேங்காயைவிட தேங்காய்ப்பூவில் இன்னும் ஏராளமான சத்துக்கள் இருக்கிறதாம்.. காப்பர், இரும்புச்சத்து, தாமிரம் போன்றவை இந்த தேங்காய் பூவில் உள்ளன.
தேங்காய் முட்டை: தேங்காய் தண்ணீரே, தேங்காய் பூக்களாக மாறுகின்றன. இதை நாமும் தயாரிக்கலாம். ஒரு சாக்குப்பையில் சிறிது மண் போட்டு, சிறிது தண்ணீரையும் ஊற்றி அதற்குள் தேங்காய்களை காற்று படாதவாறு, 3 மாதங்களுக்கு வைத்துவிட வேண்டும். அதுவரை அதை திறக்கக்கூடாது.. பிறகு, 2 துண்டாக பிரித்து பார்த்தால் தேங்காயின் உள்ளே முழுவதும் தேங்காய் முட்டையாக அதாவது தேங்காய் பூக்களாக பூத்திருக்கும்.. மண்ணில் புதைந்து கிடக்கும் காலத்தில் தென்னையின் அனைத்து சத்துக்களையும் இந்த பூ உறிஞ்சிவிடுகிறது..
இந்த தேங்காய்பூக்கள், ரத்தத்தின் சிவப்பணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்க செய்கிறது.. கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தேங்காய்பூக்களை சாப்பிட்டால், பால் அதிகமாக சுரக்குமாம்.. அத்துடன், கர்ப்பப்பையில் உள்ள கழிவுகளும், நச்சுக்களும் வெளியேறிவிடும்.
நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு கணையத்தில் இன்சுலின் அளவை அதிகமாக சுரக்க வைத்து, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க இந்த தேங்காய் பூக்கள் உதவுகின்றதாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகவும், ஜீரண சக்தியை பெருக்கவும், தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும், இந்த தேங்காய் பூக்களே மருந்தாகின்றன.
அடிக்கடி தேங்காய் பூக்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு புற்றுநோய் வருவதில்லையாம்.. இதனுடைய முக்கியமான தன்மையே, நம்முடைய உடம்பில் உள்ள செல்களை புதுப்பிக்க செய்கிறது.. இதன்காரணமாகவே, புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகின்றன. நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் அபரிமிதமாக இந்த பூக்களில்தான் உள்ளன.. நீர்ச்சத்துக்கள், உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமமாக வைத்திருக்க உதவுகிறது... நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது..
சிறுநீரக பாதிப்பு: சிறுநீரக பாதிப்புகளால் அவதிப்படுபவர்கள், தேங்காய்பூக்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த தேங்காய்பூக்களை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் கற்களே சேராது என்கிறார்கள். சிறுநீரக நோய் மற்றும் சிறுநீர்பையில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும் பயன்படுகிறது...
தேங்காய் பூவை சாப்பிடுவதால் உடம்பில் சிதைவு ஏற்படாமலும், பிரீரேடிக்கல்ஸை வெளியேற்றுவதற்கும், இளமையை மீட்டு தருவதற்கும் உதவியாக இருக்கும். அதேபோல, கல்லீரல், பிரச்சனைகளையும், நுரையீரல் பிரச்சனைகளையும் இந்த தேங்காய் பூக்கள் தீர்க்கின்றன..!!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications