கோடை காலத்தில் குளிர்ந்த நீர் பருகலாமா? வெந்நீர் பருகலாமா? எது உடலுக்கு நல்லது?
கோடை காலத்தில் குளிர்ந்த நீர் அல்லது வெந்நீர் பருகலாமா? யார் குளிர்ந்த நீர் பருகலாம், யார் வெந்நீர் பருகலாம், அதனால் ஏற்படும் நன்மைகளும், பக்க விளைவுகளும் பற்றிய பயனுள்ள தகவல்கள்
சென்னை: நாம் வாழும் பூமியின் பரப்பில் சுமார் 71% நீரால் சூழப்பட்டுள்ளது, அது போல நம்முடைய உடலில் 80% வரை தண்ணீர் நிறைந்துள்ளது. ஒவ்வொருவருடைய உடலிலும் போதுமான தண்ணீர் அளவு இருந்தாலே, நல்ல ஆரோக்கியத்துடன், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். நமக்கு உயிர் வாழ உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடலுக்கு தண்ணீர் இன்றியமையாததாய் இருக்கிறது. உடலில் தேவையான அளவு தண்ணீர் இருந்தால், பல நோய்கள் வராமல் தடுக்கலாம். அதிலும் கோடை காலத்தில் நாவறட்சி ஏற்படாமல், தினமும் தண்ணீர் குடித்துவந்தால், நோயின்றி வாழலாம்.
குளிர்ந்த நீரை குடிப்பது நல்லதா?அல்லது வெந்நீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்வி இன்றும் பலருடைய மனதில் எழக்கூடும். இவ்விரு கருத்துக்களும் வேறுபட்டிருந்தாலும், இரண்டிலுமே பல உண்மைகள் மறைந்திருக்கிறது. குளிர்ந்த நீரை அருந்துவதாலும், வெந்நீர் அருந்துவதாலும் கிடைக்கும் நன்மைகள் என்ன என்ன என்று இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குளிர்ந்த நீரின் நன்மைகள், யாரெல்லாம் குடிக்கலாம்?
பொதுவாகவே குளிர்ந்த நீர் குடிப்பதால் உடலில் உள்ள வெக்கை தணியும். உடல் உழைப்பு மிகுந்தவர்கள் குளிர்ந்த நீரை குடிப்பதே சிறந்தது. உடலை வருத்தி உழைப்பவர்களுக்கு அதிக வியர்வையும், இரத்த கொதிப்பும் மிகுதியாகும், எனவே குளிர்ந்த தண்ணீர் குடிப்பதால் விரைவில் இரத்த கொதிப்பு அடங்கும். உடலில் அடிப்பகுதியின் சூட்டைத் தணிப்பதற்கும், உழைப்புக்கு ஏற்ப உடல் உள்ளுறுப்புகள் இறுகி வலிமை பெற குளிர்ந்த நீர் குடிப்பதே நல்லது. உடலின் நிலைமையை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தண்ணீர் குடித்தால், மன சமநிலைப்படும், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

வெந்நீர் நன்மைகள், யாரெல்லாம் குடிக்கலாம்?
மூளையுழைப்பு மிகுந்தவர்கள் வெந்நீரை குடிப்பது சால சிறந்தது. ஏனெனில் இரைப்பையில் மற்றும் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கிவிடும், மேலும் உண்ட உணவும் நன்றாக செரித்துவிடும். அஜீரண கோளாறு ஏற்படவே படாது. மன முயற்சி, கற்றல், எழுதுதல், பேசுதல் ஆகிய செயல்களில் அதிகம் ஈடுபடுவோர், உடலின் அடிப்பகுதியில் உண்டாகும் சூட்டை தணிப்பதற்கு, இரைப்பையில் சூடு உண்டாவதற்கு வெந்நீர் குடிப்பது மிக அவசியமாகும்.

மூளையுழைப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்
மன முயற்சி, மூளையுழைப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரை குடித்தால் சில நோய்களை கொண்டுவரும், எப்படியெனில், அவர்கள் அறிவு முயற்சியால் இரைப்பையில் உள்ள இரத்தம் மேலேறி மூளைக்கு செல்லும், மேலும் குறைந்த அளவே இரத்தம் இருப்பதால், தலைவலி, பசியின்மை, ஜீரண கோளாறு, மலக்கட்டு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். எனவே வெந்நீர் அருந்துவதே மிகவும் நல்லது. ஒவ்வொருவரின் உடல் மற்றும் மூளை உழைப்பு கேற்றபடி தண்ணீர் குடித்தால் நோயின்றி வாழலாம்.

நீரை எப்படி குடிக்கவேண்டும்?
குளிர்ந்த நீர் அல்லது வெந்நீர் எது குடித்தாலும், ஒரே மூச்சில் கடகடவென்று குடிப்பது தவறாகும், இதனால் மாரடைப்பு, காதடைப்பு, மேலும் உடல் உள்ளுறுப்புகளில் வீக்கத்தை உண்டாக்கும். சிறிது சிறிதாக குடிக்கும்போது அவை உமிழ்நீருடன் கலந்து குடித்தால், இரைப்பையை அடைந்து உணவு நன்றாக செரித்து, இரத்தமாக மாறும், உடலுக்கு சக்தியும் கொடுக்கும். பிறர் குடித்த கிண்ணத்தில், அல்லது எச்சில் வைத்த நீர் குடித்தால், தொற்று நோய்கள் வருவதற்கான வழிவகுக்கும். கண்ணாடியாலான கிண்ணம், குவளை போன்றவை நன்கு கழுவி பயன்படுத்துவது நல்லது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications