சூப்பர்! மாரடைப்பை விரட்டும் புதிய மருந்து.. இளம்வயது மாரடைப்பை தடுக்கும்.. பக்கவிளைவே கிடையாதாமே!
எடப்பாடி பழனிசாமியின் படங்களை பாஜகவினர் எரித்துள்ளனர்.
வாஷிங்டன்: மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கவும், இதய மற்றும் கொலஸ்ட்ரால் பாதிப்புகளை குறைக்கவும் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏனெனில் தற்போது உள்ள ஸ்டேடின்கள் எனப்படும் மருந்துகள் அதிக கொலஸ்ட்ராலுக்கான முதல்-தேர்வு சிகிச்சையாக இருந்தாலும், அதிகப்படியான பக்கவிளைவுகள் காரணமாக பலரால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
இன்றைய நவீன உணவு பழக்கத்தின் காரணமக அதிக உயிர்களை காவு வாங்கும் நோயாக இதயநோய் பாதிப்பு பார்க்கப்படுகிறது. சமீப காலங்களில் 12 வயது சிறுவர் கூட மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்திகளை பார்த்திருப்போம். அமெரிக்காவை பொறுத்தவரை ஒவ்வொரு 34 நொடிக்கு ஒருவர் இதய பாதிப்பால் உயிரிழக்கிறார்.
2020இல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் ஏராளமானோர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் மட்டும் 2020ம் ஆண்டு இதய நோய் பாதிப்பால் 697000 பேர் பலியாகி உள்ளனர். உடலில் அதிக அளவு கொழுப்பு சத்தால் அதிக அளவில் அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 90 சதவீதம் அமெரிக்கர்கள் ஸ்டேடின் (statins) என்ற மருந்துகளை மாத்திரை வடிவில் உட்கொண்டு வருகிறார்கள்.

கல்லீரலில் கொழுப்பு
உடலில் கொழுப்பு அதிகரிப்பது இதய பாதிப்பை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும் நிலையில், கல்லீரலில் இருந்து உருவாகும் கொழுப்பு தான், இரத்தத்தில் கலக்கிறது. இந்நிலையில் கல்லீரலில் கொழுப்பு உற்பத்தியாகும் வேலையை செய்யவிடாமல் தடுக்கும் மருந்துதான் இந்த ஸ்டாட்டின்ஸ் (statins) மருந்து.

தசைபிடிப்பு
ஆனால் ஸ்டாட்டின்ஸ் (statins) மருந்தை உட்கொள்ளும் போது, தசைப்பிடிப்பு, தசைவலி, சோர்வு, ரத்தத்தில் உள்ள பிளேட்களின் எண்ணிக்கை குறைவது போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதால், மருந்து எடுத்துக்கொள்வோர் அவதிக்குள்ளாக நேர்கிறது.

பக்கவிளைவு இல்லை
இந்நிலையில் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படுத்தாமல், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை 20 சதவீதம் வரை குறைப்பதோடு, இதய பாதிப்பில் கார்டியோ வாஸ்குலர் சிக்கல்கள் ஏற்படுவதை 13 சதவீதம் குறைப்பதோடு, மாரடைப்பு ஏற்படுவதை 23 சதவீதமும் குறைக்கும் மருந்தை கண்டுபிடித்துள்ளனர் ஆராயச்சியாளர்கள். பம்பெடிக் ஆசிட்டான (bempedoic acid) அந்த மருந்தின் பெயர் நெக்ஸ்லிடோல் (Nexletol) ஆகும். இந்த நெக்ஸ்லிடோல் (Nexletol) மருந்து கல்லீரலில் உற்பத்தியாகும் கொலஸ்ட்ராலை தடுக்கிறதாம்.

ஆஸ்திரேலியா அனுமதி
இந்த மருந்து 2020ம் ஆண்டே அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதாம். தற்போது தான் இந்த மருந்து எந்த அளவிற்கு கைகொடுக்கிறது என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பயன்பாட்டில் உள்ள நெக்ஸ்லிடோல் (Nexletol) மருந்து, விரைவில் ஆஸ்திரேலியாவும் அனுமதி அளிக்க உள்ளதாம். ஆனால் ஸ்டாட்டின்ஸ் மருந்தை விட நெக்ஸ்லிடோல் (Nexletol)மருந்து பலமடங்கு விலை உயர்ந்தது என்கிறார்கள் மருத்துவர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications