மீனுடன் தயிர் சாப்பிடுபவரா நீங்கள்.. அப்படின்னா அந்த பழக்கத்தை இப்பவே விட்டுடுங்க! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன் சாப்பிடும் போதெல்லாம் தயிரை சாப்பிடக் கூடாது என பெரியவர்கள் கூறி நாம் கேட்டுள்ளோமே அது ஏன் தெரியுமா?

ஆதி காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் எந்த பொருளை எந்த பொருளுடன் சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என்பதை சொல்லி சொல்லியே வளர்ப்பார்கள்.

 Curd should not be taken along with fish

ஆனாலும் சிலர் பாட்டி சொல்லை தட்டாதே என்ற சொலவடைக்கு ஏற்ப நடந்து கொள்வார்கள். சிலர் இந்த பாட்டிகளே இப்படித்தான் எஜமான் எனும் ரேஞ்சுக்கு சலித்து கொண்டு அவர்கள் சொல்லும் அறிவுரைகளை கேட்காமல் அலட்சியப்படுத்துவார்கள்.

சிக்கன், மட்டன் ஆகிய பிரியாணிகளை சாப்பிடும் போது தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடுகிறோம். ஆனால் மீன் பிரியாணி, இறால் பிரியாணி ஆகியவற்றை சாப்பிட்டால் தயிர் பச்சடி சாப்பிடக் கூடாது என்பதுதான் மூதாதையர்களின் அறிவுரை. அது போல் சிலர் சிக்கன், மட்டன் குழம்பு சாப்பிட்டவுடன் ரசம், மோர் அல்லது தயிர் சாதம் சாப்பிடுவார்கள்.

ஆனால் மீன் குழம்பு, இறால் தொக்கு சாப்பிடும் போது தயிரோ மோரோ சாப்பிடக் கூடாது. மீனிலும் தயிரிலும் நிறைய ஊட்டச்சத்துகள் உள்ளன. மீனில் ஒமேகா 3 அமிலங்கள், புரதம், வைட்டமின்கள் உள்ளன. தயிரில் கால்சியம், புரதம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இரண்டிலுமே புரதம் இருக்கிறது.

எனவே அளவுக்கு மீறிய புரதத்தை ஒன்றாக சாப்பிடுவது செரிமானத்தில் பாதிப்பை உண்டாக்கும். இப்படி இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூகிறார்கள். இரண்டிலும் புரதங்கள் இருந்தாலும் வித்தியாசமானவை. எனவே அமிலத்தன்மை ஏற்படும். இதனால் வாந்தி ஏற்படும்.

அது போல் கண்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தலாம் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே எப்போதும் மீனுடன் தயிரை நினைத்துக் கூட பார்க்காதீர்கள். அவர்கள் சாப்பிடுகிறார்கள், ஒன்றும் ஆகவில்லை, எனக்கு மட்டும் என்ன ஆகிவிட போகிறது என விதண்டாவாதம் செய்யக் கூடாது. தயிரையும் மீனையும் ஒன்றாக சாப்பிட்டு அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றால் அவர்கள் உடற்பயிற்சி, யோகா, செய்து ஜீரண சக்தியை நன்றாக வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

இந்த கலவையானது ஒவ்வாமையை கூட ஏற்படுத்தும். தோலில் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே பெரியவர்கள் சொன்னால் அதில் நிச்சயம் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை உணர்ந்து மீனுடன் தயிரை சேர்த்து சாப்பிட வேண்டாம் என்பதே நிபுணர்களின் கோரிக்கையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+