Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 நிமிஷத்துக்கு மேல் கழிவறையில்.. இந்த தப்பை மட்டும் பன்னாதீங்க.. மருத்துவர்கள் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பத்து நிமிடத்திற்கு மேல் கழிவறையில் உட்காருவதால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

மனுஷன் நிம்மதியா இருக்க இடமே கழிவறை ஒன்றுதான் என்ற நகைச்சுவையை அனைவரும் ரசித்திருப்போம். சமீபகாலமாக செல்போனில் ஸ்கிரால் செய்து கொண்டே அதிக நேரத்தை கழிவறையில் கழிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. பாடல் கேட்பது, ரீல்ஸ் ஸ்கிரால் செய்வது, யூடியூப் பயன்படுத்துவது போன்ற அனைத்து வேலைகளையும் கழிவறையில் தான் செய்கின்றனர்.

bathroom smartphone health

சிலர் கழிவறையில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படிக்கும் பழக்கத்தை வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். இதனால் 5 நிமிடத்தில் முடிய வேண்டிய விஷயம் பல மணி நேரத்தை விரயம் செய்துவிடும். இப்போதெல்லாம் இந்தியன் டாய்லெட்டுகள் இருப்பதில்லை. பல வீடுகளில் வெஸ்டர்ன் டாய்லெட்தான். அதனால், கழிவறை செல்போன் பிரியர்களுக்கு கழிவறை கண்ட இடம் சொர்க்கம் என்பதுபோல உட்கார்ந்து கொள்கின்றனர்.

ஒரு பக்கம் ஜாலியாக இருந்தாலும், கழிவறையில் வெகு நேரம் உட்கார்ந்திருப்பதால் ரத்த ஓட்டம் பாதிக்கும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள். புவி ஈர்ப்பு விசை உடலின் கீழ்ப்புறத்தை கீழே இழுப்பதால் இது அழுத்தத்தை அதிகரித்து ரத்த ஓட்ட பாதிப்பை ஏற்படுத்திவிடுமாம். அதுமட்டுமல்ல பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர் மருத்துவர்கள்.

இதுகுறித்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பெருங்குடல் அறுவை சிகிச்சை நிபுணர் லாய் க்ஸூ கூறுகையில், என்னிடம் வரும் நோயாளிகள் நான் பலரிடம் பேசும்போது அவர்கள் கழிவறையில் அதிக நேரம் செலவழிப்பதாகக் கூறியுள்ளனர். நாம் எல்லோருமே அடிப்படை இயல்பியல் குறித்து அறிந்து கொள்வது அவசியம்.

நாம் பூமியில் இருப்பதற்கு மிக முக்கிய காரணம் புவி ஈர்ப்பு விசை. அந்த விசைதான் பூமியில் நம்மை நிலைநிறுத்த உதவுகிறது. அந்த விசை தான் இதயத்திற்கு ரத்தத்தை முறையயாக அனுப்புவதற்கு நம் உடலைத் தூண்டிவிடுகிறது. பலரும் கழிவறையில் அதிக நேரம் உட்காருவதால் புவி ஈர்ப்பு விசை நம் உடலின் கீழ்ப் பாதியை கீழ்ப்புறமாக இழுக்கும்.

இதனால் உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை கடுமையாக பாதிக்கும். செரிமானப் பிரச்னை உள்ளவர்கள் அதிக நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்தினால் செரிமானப் பிரச்னையை கூடுதலாக அதிகரிக்கச் செய்யும். ஆசனவாய் மற்றும் கீழ் மலக்குடலை சுற்றியுள்ள நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பெரிதாகி பைல்ஸ் நோய் வரும் ஆபத்தும் அதிகரித்துவிடும். மேலும், அதிக நேரம் அமருவதால் இடுப்புத் தசைகளும் மிகவும் பலவீனமாகிவிடும் என்று கூறினார்.

கலிபோர்னியா இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் லான்ஸ் உராடோமோ கூறுகையில், கழிவறைக்குச் செல்லும்போதே அங்கு அதிக நேரம் செலவிட வேண்டும் எண்ணத்துடன் செல்வதைத் தவிர்க்க வேண்டும். செல்போன், புத்தகம், நாளிதழ், இதழ்கள் என எந்தவொரு பொருளையும் கழிவறைக்குள் எடுத்துச் செல்லாதீர்கள் என்றார்.

நான் செல்போன் பயன்படுத்துவதற்காக அதிக நேரம் கழிவறையில் செலவிடுவதில்லை. மலச்சிக்கல் காரணமாகத்தான் இருக்கிறேன் என்றால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது மிகவும் அவசியம். இது பல்வேறு பிரச்னைகளில் இருந்து உங்களைக் காக்க உதவும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+