சத்தமே இல்லாமல் வரும் ஆபத்து.. சில மாநிலங்களில் உச்சக்கட்ட பாதிப்பு! சுகரை சாதாரணமா நினைக்காதீங்க
சென்னை: இந்தியாவில் நீரிழிவு குறுந்தொற்று நோயின் பரவல் வேகமும் முறைகளும் சில மாநிலங்கள் உச்சக்கட்டமாகி இருப்பதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள்.
நீரிழிவு சிறப்பு மையத்தின் (DMDSC) நிர்வாக இயக்குநரும், மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF) தலைவருமான மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா இந்தியாவில் நீரிழிவு நோய்கள் தொடர்பாக தன்னுடைய கவலையை வெளிப்படுத்தி உள்ளார். "இந்தியாவில் வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களின் (NCDs) பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் நீரிழிவு குறுந்தொற்று நோயின் பரவல் வேகமும், பரவல் முறைகளும் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

சில மாநிலங்கள் ஏற்கனவே உச்ச கட்ட விகிதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள் இப்போதுதான் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அனைத்து வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களும் (NCDs) நகர்ப்புறங்களில் அதிகம் காணப்பட்டாலும், கிராமப்புறங்களில் முன்பு கண்டறியப்பட்டதை விடக் கணிசமான அளவுக்கு அதிகப் பரவல் விகிதங்கள் இருப்பதாக ஆய்வு காட்டுகிறது." என குறிப்பிட்டு உள்ளார்.
நீரிழிவு சிறப்பு மையம் மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் ஆகியவற்றின் தலைவரும், ஆய்வின் மூத்த ஆசிரியருமான டாக்டர் வி.மோகன் கூறியதாவது, "மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் (MDRF) உறுப்பினர்களின் அர்ப்பணிப்புமிக்க, பாராட்டத்தக்க முயற்சிகளால், தற்போது உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்களை அதிகம் பாதிக்கும் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றா நோய்களின் அதிகரிப்பை எங்களால் வெற்றிகரமாக மதிப்பீடு செய்ய முடிந்து உள்ளது.
எங்கள் ஆய்வின் முடிவுகள் இந்தியாவின் சுகாதாரப் பராமரிப்பை திட்டமிடுவதற்கும், அது மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுள்ளன. இந்தத் தொற்றா நோய்கள் பற்றிய விரிவான மாநில அளவிலான தரவுகள், தொற்றா நோய்களின் பாதிப்பை வெற்றிகரமாக நிறுத்துவதற்கும், அவற்றின் சிக்கல்களைத் திறம்படக் கட்டுக்குள் வைத்திருப்பதற்கும், இந்தியாவில் உள்ள மாநில நிலை தரவு சான்றுகள் மூலம் இடையீட்டுச் சேவைகளை உருவாக்கி, அந்தந்த மண்டலங்களில் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதற்குப் பெருமளவில் உதவும்." என்று கூறினார்.
"மக்கள் தொகையில் கணிசமான பகுதி மக்கள் வளர்சிதை மாற்ற தொற்றா நோய்களால் ஏற்படும் கார்டியோவாஸ்குலர் (இதயம் மற்றும் இரத்தக்குழல்) நோய் மற்றும் பிற நீண்ட கால உறுப்புக் கோளாறுகளால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது." என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) தொற்றா நோய் பிரிவின் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். தாலிவால் தெரிவித்து உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications