கல்லீரல் பிரச்சனையால் இறந்த மனோபாலா.. கல்லீரல் பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி?
சென்னை: இயக்குனரும், நடிகருமான மனோபாலா கல்லீரல் பிரச்சனை காரணமாக உயிரிழந்த நிலையில், கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? கல்லீரல் பாதிப்பின் ஆரம்ப அறிகுறிகள் என்பது பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
கல்லீரலை பொறுத்தவரை மது அருந்துபவர்களுக்கு நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தும். மது அருந்தாதவர்களுக்கு கூட பாதிப்புகள் வேறுவகையில் ஏற்படலாம். என்ன மாதிரியான பாதிப்புகள் வரும். இதில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பதை பார்ப்போம்.
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜாயு வர்கீஸ் தனியார் ஊடகம் ஒன்றுக்கு முன்பு பேட்டி அளித்திருந்தார். அதை இப்போது பார்ப்போம்.

லிவர் பிரச்சனை என்றாலே எல்லாரும் நினைப்பது என்னவென்றால் டிரிங்க்ஸ் (மது) அருந்துவதால், ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் இந்த காலக்கட்டத்தில் லிவர் பிரச்சனை என்று அணுகுபவர்களை பார்த்தால் 50 சதவீதம் பேருக்கு ஆல்கஹால் பிரச்சனையே இல்லை. அவர்கள் குடிபழக்கம் உள்ளவர்கள் இல்லை.
ஆல்கஹால் அல்லாத 50 சதவீதம் பேரின் கல்லீரல் பாதிப்பு என்பது தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதிற்குமான கணக்கு.
ஆல்கஹால் காரணமாக லிவரில் பிரச்சனை வரும் என்பது பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆனால் ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கும் லிவர் பிரச்சனை வரும் என்பது குறித்து மக்கள் இன்னமும் சரியாக அறிந்திருக்கவில்லை. ஆல்கஹால் அருந்தாதவர்களுக்கு வரும் லிவர் பிரச்சனையை நாங்கள் non alcoholic fatty liver என்று அழைப்போம். மது அருந்தாவிட்டாலும் லிவர் கொஞ்சம் கொஞ்சமாக கெட்டுபோகும். உணவு பழக்கமும் கல்லீரல் பாதிப்புக்கு முக்கிய காரணம். கண்ட உணவை சாப்பிடுவதால் லிவரில் அதிகரிக்கும் கொழுப்பு காரணமாக லிவர் கேன்சர் கூட வரலாம்.
உடலில் அதிகரிக்கும் கொழுப்பு காரணமாக வரும் லிவர் பாதிப்பு என்பது இன்னும் ஒரு 10 வருடத்தில் இந்தியாவில் 30 சதவீதம் மக்களுக்கு (2019) ம் ஆண்டு கணக்குப்படி) இருக்கும் என்று கருதப்படுகிறது. அது சின்ன வயசாக இருக்கலாம். வயதானவர்களாக இருக்கலாம். மொத்தமாக வர வாய்ப்பு உள்ளது.
அதேநேரம் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து பாதிப்பு ஏற்படுதை தடுக்க உணவு பழக்கத்தை மாற்றினாலே போதும். கல்லீரல் பாதிப்பு என்பது நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்று தான். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதை தெரிந்து சாப்பிட வேண்டும். ருசிக்காக சாப்பிடக்கூடாது. ஹெல்தியான டயட்டை கடைபிடித்து சாப்பிட வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒரு மணி நேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதை செய்வதன் மூலம் உங்கள் அடிவயிற்றில் கொழுப்பு டெபாசிட் ஆயிருந்தால் கூட எதை எரித்துவிடலாம். இந்த பேட்டி லிவர் வந்தால் லிவரை மட்டும் பாதிக்கப்போவது இல்லை. கார்டியாக் பிரச்சனையையும் உண்டாக்குகிறது. இதனால் பைப்பாஸ் சிகிச்சை வரை எல்லாம் கொண்டு போய்விடுகிறது.
எனவே மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் மது அருந்தாமல் இருப்பது நல்லது. அதேநேரத்தில் என்ன சாப்பிட வேண்டும் என்று தெரிந்து சாப்பிட வேண்டும். அதேபோல் தினமும் வாக்கிங் போக வேண்டும். இப்படி செய்தால் எதிர்காலத் தலைமுறையை கல்லீரல் நோயில் இருந்து நாம் காப்பாற்ற முடியும்" இவ்வாறு மருத்துவர் கூறினார்.
இந்த கல்லீரலை பொறுத்தவரை 70 சதவீதம் பாதிக்கப்படும் வரை அறிகுறியே காட்டாது. நல்லா இருக்கு அப்படீன்னு தான் நாம நினைச்சுகிட்டு இருப்போம். ஆனால் உள்ளே பாதிப்பு இருந்தாலும் வெளியே காட்டாது. 70 சதவீதத்தை தாண்டும் போது சிக்கல் நிச்சயம். மது அருந்தினால் கல்லீரல் நிச்சயமாக கெட்டுப்போகும். மது அருந்தாவிட்டால் கூட உணவு பழக்கம் சரியில்லை என்றால் கல்லீரல் பாதிக்கப்படும்.
பாஸ்புட், காரசாரமான உணவுகள் என கண்டதை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது போன்றவை கல்லீரல் பாதிப்பை அதிகரித்துவிடும். குடிப்பழக்கம் உள்ளவர்கள் தினமும் குடிப்பார்கள், அவர்கள் கல்லீரல் தினமும் மதுவை சமாளித்து அவர்களை காப்பாற்றும். ஆனால் ஒரு நாள் மொத்தமாக அதன் செயல் திறனை நிறுத்திவிடும். அதாவது 70 சதவீதம் பாதிக்கப்பட்ட பின்னர் பிரச்சனை தெரியவரும். அதாவது ஆபத்தான நிலைக்கு பின்னரே நமக்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவரும். எனவே மக்களே கவனமாக இருங்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications