சுக பிரசவம் ஆக, பின்பற்றவேண்டிய உணவு, உடற்பயிற்சி, ஆலோசனை மற்றும் குறிப்புகள்!
சுக பிரசவம் ஆக, அசைவ மற்றும் சைவ கர்ப்ப உணவு முறைகள், உடற்பயிற்சி, தாம்பத்திய உறவு, ஆகியவற்றை பின்பற்றவேண்டிய சில குறிப்புகளும், வழிமுறைகள், பற்றிய தகவல்கள்
சென்னை: திருமணமான பெண்களுக்கு வாழ்க்கையில் மிக முக்கிய இரண்டு கட்டங்கள், ஒன்று கர்ப்ப காலம், இரண்டு பிரசவ அனுபவம். இயல்பாக எல்லா பெண்களுக்கும் முதல் கருவுற்றியிருக்கும்போது எதை சாப்பிடவேண்டும், எதை தவிர்க்கவேண்டும், வாந்தி, மயக்கம், உடல் ஆரோக்கியமாகவும், கருவில் வளரும் குழந்தைக்கு நல்ல வளர்ச்சி கிடைக்க எவ்வித ஊட்டச்சத்துள்ள உணவு என்பதான கேள்விகள் ஏராளமாக இருக்கும். முக்கியமாக முதல் பிரசவத்திற்கு பயம் ஆட்கொள்வது இயல்பானதே, யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. முதல் குழந்தை பெற்றுக்கொள்ளும்போது கிடைக்கும் அனுபவத்தை வைத்து இரண்டாம் பிரசவத்திற்கு மிக எளிதாக தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம்.
பொதுவாக எல்லா பெண்களும் சுக பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக பல முயற்சிகள் எடுப்பதுண்டு. எளிய முறையில் சுக பிரசவம் வேண்டி முயற்சிக்கும் பெண்களுக்கு, இந்த குறிப்புக்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். சுக பிரசவம் ஆக, பின்பற்றவேண்டிய உணவு முறை, உடற்பயிற்சி, தாம்பத்தியம், சிறந்த ஆலோசனைகள் மற்றும் சில வழிமுறைகளை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் உணவு முறை
ஒரு நாளைக்கு குறைந்தது 5-8 டம்ளர் வரை திரவ ஆகாரம் பருகவேண்டும். வைட்டமின் ஏ, சி நிறைந்த பழ வகைகள்,உட்கொள்ளவேண்டும். மாதுளை பழம், அன்னாசி, மாம்பழம், பப்பாளி இவற்றில் ப்ரோமிலென் இருப்பதால் கர்ப்பப்பை வாயில் தொற்று வராமல் பாதுகாத்து, அவற்றை மென்மையாக்கும். மாதுளை பழம் சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும். மேலும் காய்கறிகள் (கருவேப்பிலை, புதினா, முள்ளங்கித் தழைகள்), விதை பயறுகள், பருப்பு வகைகள், தானியங்கள் (கேழ்வரகு, சோயாபீன்ஸ், ரஜ்மா,வெந்தயம், கருப்பு உளுந்தப்பருப்பு) ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூடுதலாக பால், பாலில் தயாரிக்கப்படும் உணவு, இறைச்சி, மீன், முட்டை ஆகியற்றை சாப்பிடவேண்டும். போஷாக்கு தேவை என்பதற்காக இவை அதிக அளவில் உண்பது நல்லதல்ல. சில பெண்களுக்கு பால் மற்றும் முட்டை ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்படுமானால், இவற்றை தவிர்த்து, பால் பொருட்கள், அல்லது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.

சைவ கர்ப்ப உணவு முறை
முழு சைவ உணவுகளை மட்டும் உண்பவர்களுக்கு, சிறந்த உணவாக தானியங்கள், பயறு வகைகள், காய்கறிகள், பழங்கள், உலர் பழ வகைகள், பால் மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை கொண்ட ஒரு சமச்சீரான உணவு கர்ப்பிணி பெண்களுக்கு எல்லா தேவைகளையும் பூர்த்திசெய்ய, இந்த வகை உணவு போதுமானதாக இருக்கிறது. ஆனால் குறிப்பாக வைட்டமின் பி 12 சத்து குறைவாகவே இருக்கும், பி 12 சத்து குறைபாடு இரத்த சோகை, ஞாபக மறதி, மூளை மற்றும் நரம்புகள் பலவீனத்துக்கும் வழிவகுக்கும். எனவே பி 12 அதிகம் உள்ள காளான், சோயா பால், பாதாம் பால், இவற்றை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இதில் கலோரிகள் குறைவாகவும், பி 12 சத்து அதிகம் இருப்பதால், மேல்சொல்லிய குறைபாடு நீக்கி, சிறப்பாக செயல்பட உதவுகிறது.

வாந்தி, தலைசுற்றல் கட்டுப்பட
எதை சாப்பிட்டாலும் வாந்தி அதிகம் இருந்தால், ஏலக்காயை அடுப்பில் சூடேற்றி பொடியாக்கி சிறிது தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி கட்டுப்படும். கொதிக்கவைத்து பார்லி தண்ணீரில் சிறிது உப்பு, சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், தலைசுற்றல் குறையும்.

தவிர்க்கவேண்டிய உணவுகள்
அதிக உப்பு உள்ள பிஸ்கட், வேர்க்கடலை, வறுவல்கள், ஊறுகாய், அஜினமோட்டோ, மேலும் டீ, காபி அதிக அளவு குடிப்பதை தவிர்க்கவேண்டும் ( காபியில் உள்ள காபின் என்ற மூலப்பொருள் குழந்தையின் எடை குறைவாகவும், குறைப் பிரசவத்திற்கு வழி வகுக்கும்).

உடற்பயிற்சி
சுக பிரசவம் ஆக, 7 மாதத்திற்கு மேல் தினமும் காலையிலும், மாலையிலும் 1/2 மணி நேரம் நடைபயிற்சி செய்யவேண்டும், முடியாதவர்கள் தினமும் படிக்கட்டுகளில் 1/2 மணி நேரம் ஏறி இறங்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் உடலை சரியானபடி சீரமைக்கும், முதுகு வலி குறையும், மன அழுத்தம், மனக் கவலை, மனச் சோர்வு, மலச்சிக்கல் ஆகியவற்றை குறைத்து, செரிமான சக்தியை அதிகப்படுத்தி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இந்த உடற்பயிற்சியின் பலன், பிரசவ அறையில் இருக்கும்போது நல்ல பலன் தருவதை தெளிவாகத் தெரியவரும். பிரசவத்திற்கு பிறகும் வெகு விரைவில் அந்த சோர்விலிருந்து மீளமுடியும். கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது, ஆனால் நிறைமாதத்தில் உடலுறவின் போது, யோனிக் குழாயிலிருந்து இரத்தம் கசிதல், முன்கூட்டியே பிரசவ வலி, ஆகிய நிலையில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்கவேண்டும்.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications