மக்களே கவனம்.. மாம்பழம் சாப்பிட்ட கையோடு தப்பித்தவறி இந்த உணவையெல்லாம் தொட்டுறாதீங்க.. லிஸ்ட் இதோ!
சென்னை: மாம்பழம் சாப்பிட்ட உடன் சாப்பிடக்கூடாத சில உணவு பொருட்கள், மற்றும் பானங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும்.. சாப்பிட்டால் என்ன மாதிரியான பிரச்சினை வரும் என்பதை இங்கே பார்க்கலாம்.
முக்கனிகளில் ஒன்று மாம்பழம்... மாம்பழத்தின் இனிப்புச்சுவை பிடிக்காதவர்களே இல்லை எனலாம். வெறும் சுவை மட்டும் கிடையாது. இதில் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களும் உள்ளன. முக்கியமாக விட்டமின் சி, பெக்டின், நார்ச்சத்து உள்ளிட்டவையும் இரும்பு பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் உள்ளன.

மாம்பழம் கொழுப்பை கரைப்பதோடு, சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மாம்பழம் இதய நோய்களுக்கான ஆபத்தையும் குறைக்கிறது. இப்படி மாம்பழத்தின் பயன்களே அடுக்கிக் கொண்டே போகலாம். கோடைக்காலம் தான் மாம்பழத்திற்கான சீசன் ஆகும். இந்த கால கட்டத்தில் மாம்பழத்தின் விலை மலிவாக இருப்பதோடு அதிகமாகவும் கிடைக்கும்.
பழக்கடைகளுக்குள் சென்றதும் மாம்பழம் தான் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருக்கும். இதனால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாம்பழத்தை பார்த்ததும் வாங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு விடும். வீட்டிற்கும் கொண்டு சென்று குடும்பத்துடன் இணைத்து மாம்பழத்தை வெட்டி சாப்பிட்டு மகிழ்வதை நம்ம ஊரில் எங்கும் காணலாம். சரி இங்கே விஷயத்திற்கு வரலாம்.
மாம்பழம் சாப்பிட்டவுடன் சில உணவு வகைகளையும் பானங்களையும் தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் அறிவுரையாக உள்ளது. அது என்னவென்று இங்கே பார்க்கலாம். மாம்பழம் சாப்பிட்ட உடன் இனிப்புச்சுவை அதிகம் கொண்ட குளிர்பானங்களை குடிக்கக் கூடாது.
ஏனெனில் மாம்பழமும் இனிப்புச்சுவை கொண்டது என்பதால் அதை சாப்பிட்டு விட்டு உடனடியாக கூல்டிரிங்ஸ் போன்றவைகளை குடித்தால் உடலில் உள்ள சர்க்கரை அளவு கூடும். மாம்பழம் சாப்பிட்ட பிறகு வெயிலின் தாக்கத்தை தவிர்க்கிறேன் என்ற பெயரில் குளிர்பானங்களையும் உடனே எடுத்து குடித்து விடாதீர்கள்..
மாம்பழம் சாப்பிட்ட உடன் தயிர் சாப்பிடக்கூடாது. மாம்பழத்தை சாப்பிட்ட உடன் தயிர் சாப்பிடும் பட்சத்தில் சில வயிறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதாவது செரிமான பிரச்சினைகள் உள்பட சில பிரச்சினைகள் வரலாம். எனவே மாம்பழம் சாப்பிட்ட வாசனை கூட கையை விட்டு அகல மறுப்பதற்குள் போய் தயிர் போன்றவற்றை சாப்பிட்டு விடாதீர்கள்.
மாம்பழம் சாப்பிட்ட உடன் சாப்பிடக்கூடாத மற்றொரு உணவு பொருள் என்னெவென்றால் பாகற்காய். கசப்புத்தன்மை கொண்ட பாகற்காய் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. ஆனாலும் மாம்பழம் சாப்பிட்ட உடன் இதை சாப்பிட்டால் குமுட்டல் ஏற்படும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால் மாம்பழம் சாப்பிட்ட உடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கக் கூடாது. அதேபோல பிற பழங்களையும் மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இதனால், வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மாம்பழம் சாப்பிட்ட உடன் பால் குடிக்கக் கூடாது. அப்படி குடிக்கும் பட்சத்தில் செரிமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாம்பழம் சாப்பிட்ட உடன் காரமான உணவு வகைகளை சாப்பிடக்கூடாது. இப்படி காரமான உணவு பொருட்களை சாப்பிடுவதால் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால், மாம்பழம் சாப்பிட்டு விட்டு இந்த உணவையெல்லாம் உடனே சாப்பிட்டு விடாதீர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications