நீண்ட நாள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ....இதை செய்யுங்க!
சென்னை: மனிதனுக்கு வாழ்வில் மிக முக்கியமான ஒன்று ஆரோக்கியம். சாதாரணமாகவே நாம் எல்லாரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்போது, அதை பற்றி அக்கறை காட்டுவது கிடையாது. ஆனால் உடல் நலம் குறைந்து, நோய் மற்றும் வியாதிகள் வரும்போது தான், உடலை எப்படி பாதுகாப்பது என்றும், நோயினால் வரும் வலி, வேதனைகளை சரிசெய்ய வழிமுறைகளை தேடி செல்கிறோம். நம்முடைய ஆரோக்கியம் கெட்டு விட்டால், எளிதில் அதை திரும்ப பெற முடியாது. சில நோய்களிலிருந்து குறுகிய காலத்தில் மீண்டு வந்துவிடலாம், ஆனால் பெரும்பாலான வியாதிகளை குணப்படுத்த சில மாதங்கள், அல்லது நீண்ட நாட்கள் கூட எடுக்கும், இதற்கு ஆரோக்கியத்தில் கவனக்குறைவே முதல் காரணம். உடல் நலத்தை நன்றாக கவனித்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது ஒவ்வொருவரின் முதல் கடமையாகும்.
இதற்கு நம்முடைய உடல் கூறுகளையும், உடல் அமைப்புகளையும் நன்கு அறிந்து, சரியான உணவு விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும். நோய் மற்றும் தீராத வியாதிகள் வருவதற்கு ஆரோக்கிய விதிகளை மீறி நடப்பதே, இதற்கு முக்கிய காரணமாய் இருக்கிறது. எனவே நம்முடைய ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து, சிலவற்றை பின்பற்றினாலே குறைந்த பட்ச நோய், வியாதிகளை தவிர்த்து, நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நோயின்றி வாழலாம். நோய்களை தடுத்து, எப்படி ஆரோக்கியமாக வாழலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

மனித உடல் அமைப்பு: முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது, நம்முடைய உடல் அமைப்பும், உடல் உள்ளுறுப்புகளின் அமைப்பும் அதின் செயல்பாடுகளை நன்கு அறிந்து, அதற்கு ஏற்றவாறு செயல்பட்டால், நல்ல முறையில் ஆரோக்கியத்தை பேணி காக்கலாம். நமது உடலை தலை, நடு உடல், மற்றும் கை கால் என்று மூன்று பாகங்களாக பிரிக்கலாம். உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் வெவ்வேறு வேலை உண்டு, ஆனால் அனைத்து உறுப்புகளும் சேர்த்து செயல்படும். நடு உடலில் முக்கிய உறுப்புக்கள் மார்பு, மற்றும் வயிற்று பகுதியாகும். மார்பு பகுதியில் இதயம், நுரையீரல், மூச்சு நுரைப்பை குழாயும் அமைந்திருக்கின்றது. வயிற்று பகுதியில் கல்லீரல், இரைப்பை, மண்ணீரல், கணையம், சிறுகுடல், பெருங்குடல், இரைப்பையின் பின்புறம் சிறுநீரகங்கள் இருக்கின்றது.
உள்ளுறுப்புகளின் வேலை: ஒவ்வொரு உறுப்புகளும் தனி தனியே வேலை செய்கின்றன. மூச்சு உறுப்பு என்று சொல்லப்படும் மூக்கு, தொண்டை, மூச்சுக்குழல், நுரையீரல், சுத்தமான காற்றை உட்கொள்ளவும், வெளியேற்றவும் உதவுகின்றன. இரத்த ஓட்ட உறுப்புகள், இதயம், இரத்த நாடிகள் உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்து செல்ல உதவுகின்றன. ஜீரண உறுப்புகள் வாய், பல், உணவுக்குழல், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கணையம், உணவை ஜீரணம் பண்ண ஒன்று சேர்ந்து செயல்படுகின்றன. கழி உறுப்புக்கள் சிறுநீரகங்கள், நுரையீரல், கல்லீரல் பெருங்குடல் ஆகியவை உடலில் சேர்கின்ற கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது. இதை தவிர உடலுக்கு வடிவம் தருகின்ற எலும்புகள், உடலில் உள்ள உறுப்புகளையும், தசைகளையும், மற்ற எல்லா பக்கங்களையும் இணைத்து உடலினை இயக்க உதவுகின்றது.
உடம்பிலுள்ள கூறுகள்: நமது உடலில் அமைத்திருக்கும் கூறுகளை பார்க்கும்போது, நரம்பும், தசையும், மூளையும், சிறு சிறு நரம்புகளும், கொழுப்பும், எலும்பும், இரத்தமும், ஆகிய எல்லாம் ஒன்றொன்று இணைந்து இவை யாவும் வலிமையுடன் வளர்வதற்கு தேவையான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், உப்பு, நீர், இவை அனைத்தும் மிக முக்கிய உணவுகள் ஆகும். இவையாவும் உடல் சீராக செயல்படுவதற்கும், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் தேவைப்படுகின்றது. இவைகளில் குறைபாடு காணப்படும்போது, உடல் பாகங்களில் செயல்பாடுகள் குறைந்து, நோய் மற்றும் வியாதிகள் ஏற்படுகின்றது.
தவிர்க்கவேண்டிய உணவு: உடம்பை பாதுகாக்க ஊட்டச்சத்துள்ள உணவுகளும், தேவையான உணவு, தேவையுள்ள நேரத்தில் உட்கொள்வது அவசியம். முக்கியமாக உணவுக்கு முன் இனிப்பு தின்பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். முதலில் தித்திப்பு பதார்ப்தங்களை சாப்பிடுவதால், பசியை அடக்கிவிடும், இதனால் சரியான பசி இல்லாமல் கடமைக்கே சாப்பிட நேரிடும். இதனால்தான் பெரும்பாலான குழந்தைகள் இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதால், உணவினை சரிவர சாப்பிடுவதில்லை. அளவுக்கு மீறி இனிப்பு தின்பண்டங்களை குழந்தைகளின் உணவுக்குமுன் கொடுப்பதை கட்டாயம் தவிர்க்கவேண்டும். சரியான அளவில் எல்லா வகை உணவுகளை காரம், புளிப்பு, இனிப்பு கலந்து கொடுப்பது அவசியமாகும். சில வகையான கலந்த உணவு ஜீரணசக்தியை மந்தப்படுத்தும். பாலில் சமைக்கப்பட்ட பழ வகைகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள் போன்றவை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும்.

ஆரோக்கியமான உணவு: நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளும்போது, சில உள்ளுறுப்புகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும். உதாரணம் அதிக டீ, காபி குடிப்பவர்களுக்கு பித்தம் உண்டாகும், இதை சரிசெய்ய பித்தத்தை முறிக்கும் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால், ஆரோக்கியத்திற்கு நல்லது. பயிறு வகைகள், கொட்டைகளும், பழங்கள், தானிய வகைகள், காய்கறிகள், இவைகளோடு குறைவான அமில சத்துள்ள பழங்கள் எடுத்துக்கொள்வதால், ஜீரணசக்திக்கு சிறந்த உணவாகும்.
சிறந்த உணவுகள்: உடல் வலிமையுடன் வளர்வதற்கு தேவையான புரதங்கள், கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், உப்பு, நீர் ஆகியவை உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளவேண்டும். புரதசத்து (Proteins) பால், தயிர் கோதுமை, பருப்பு, கடலை, இறைச்சி, மீன், முட்டை, பீன்ஸ் மற்றும் கடல் உணவுகள்,போன்றவையாகும். கொழுப்புகள் (Fats) அவகோடா, சாக்லேட், வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், கோதுமை. கார்போஹைட்ரேட்டுகள் (carbohydrates) சர்க்கரை, பசை மாவு, உருளைக்கிழங்கு, ஸ்ட்ராபெர்ரி, கேக். உப்பு (Salts) ஏரிகந்தக சுண்ணமும், அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பு. நீர் (Water) உள்ள உணவுகள், வெள்ளரி, ஆப்பிள், கோஸ், கீரை, திராட்சை பழம், தர்பூசணி ஆகும். எனவே இந்த 5 வகையான உணவுகளை தினமும் சேர்த்துக்கொண்டு, நம் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து, உடல் நலத்தை காப்போம்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட்












Click it and Unblock the Notifications