மாம்பழம் விரும்பி சாப்பிடுறீங்களா.. ஒரு நிமிஷம் இதை படிங்க.. அய்யோ.. இப்படி ஒரு விஷயமும் இருக்குதா?
சென்னை: கோடைக்காலங்களில் அதிகம் கிடைக்கும் மாம்பழங்களில் பல நன்மைகள் இருப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதேவேளையில் அதிகமாக மாம்பழங்களை சாப்பிடுவதும் நல்லது இல்லையாம்.அதிகமாக மாம்பழங்களை எடுத்துக் கொண்டால் ஏற்படும் உடல் உபாதைகள் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
முக்கனிகளில் ஒன்று மாம்பழம். தேன் போன்ற இனிப்புச்சுவை கொண்ட மாம்பழத்தை விரும்பாதவர்களே இருக்க மாட்டார்கள். பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்திற்கான சீசன் கோடைக்காலம் தான். கோடைக்காலம் வந்து விட்டால் போதும் பழக்கடைகளுக்குள் என்ட்ரி கொடுத்ததும் முதலில் கண்ணில் படுவது மாம்பழமாகத்தான் இருக்கும்.

கடைகளில் மலைப்போல் அடுக்கி வைத்திருக்கும் இந்த மாம்பழங்களை பார்த்ததுமே நாக்கில் எச்சில் ஊறும். மாம்பழங்களில் வெறும் சுவை மட்டும் இல்லை. ஏராளமான சத்துக்களும் உள்ளது. அதாவது வைட்டமின் ஏ, நார்சத்து, கார்போஹைட்ரேட், சர்க்கரைசத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது. குறிப்பாக பழத்தின் தோல்பகுதியில் வைட்டமின் சி சத்து உள்ளது. நம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவையும் கிடைக்கிறது.
மாம்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. இப்படி மாம்பழத்தின் பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு என நம்மூரில் ஒரு பழமொழி உண்டு அல்லவா... அது மாம்பழத்திற்கு மட்டும் பொருந்தாமல் போயிவிடுமா? என்ன.. ஆமாங்க.. மாம்பழங்களையும் அளவுக்கதிமாக சாப்பிட்டால் சில உடல் உபாதைகள் ஏற்படுமாம்.
அதாவது அதிக அளவு சாப்பிட்டால் அதுவே வயிற்று போக்கையும் உண்டாக்கிவிடும். இப்படி வயிற்றுப்போக்கு ஏற்படுவது அரிதானது என்றே சுகாதார வல்லுனர்கள் கூறுவது சற்று ஆறுதலாக இருந்தாலும் மாம்பழத்தில் தீங்கை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியா அல்லது நோய்க்கிருமிகள் இருந்தால் கண்டிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை உண்டாக்கி விடும் என்கிறார்கள் சுகாதார வல்லுனர்கள்.
மாம்பழங்களில் விலங்குகளின் எச்சங்களின் வழியாக சல்மோனெல்லா அல்லது E. coli போன்ற பாக்டீரியா இருக்க வாய்ப்பு உள்ளது. அதுபோக மாம்பழங்களை பறிக்கும்போதும், அதை எடுத்து செல்லும் போதும் இதுபோன்ற பாக்டீரியாக்களால் மாம்பழங்கள் மாசுபட வாய்ப்பு உள்ளது. மாம்பழங்களை அசுத்தமான உணவு பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழிகள் உள்ளிட்டவைகளுடன் வைத்திருந்தால் மாம்பழங்கள் அசுத்தம் ஆகி மேற்கூறிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாம்.
மேலும், மாம்பழங்களை பழுக்க வைக்க பல்வேறு யுக்திகளை விற்பனையாளர்கள் கையாளுகிறார்கள். குறிப்பாக ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்கள் உடலுக்கு தீங்கை ஏற்படுத்தக் கூடியது. எனவே, மாம்பழங்களை அளவோடும் கவனமாகவும் நன்கு கழுவியும் சாப்பிட வேண்டும் என்கிறார்கள் சுகாதார வல்லுனர்கள். மாம்பழங்களை பொறுத்தவரை அதிகமாக சாப்பிட்டால் ட்ரைகிளிசரைடுகள் லெவல், சர்க்கரை அளவு, வயிறு உப்புசம், வயிற்று வலி, அஜீரண கோளாறு, வயிற்றுப்போக்கு போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
மக்கள் பலரும் மாம்பழங்களை இரவில் சாப்பிடுவதை பார்க்க முடிகிறது. ஆனால், மாம்பழங்கள் இரவில் சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மாம்பழங்களை காலை உணவுக்கு பிறகு சாப்பிடுவது சிறந்தது. அல்லது மதிய உணவுக்கு பிறகு சாப்பிடலாம். அதிகமான மாம்பழங்களை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதுபோக உடலின் வெப்ப அளவையும் அதிகரிக்கும்.
எனவே மாம்பழங்களை கொஞ்சம் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதே சுகாதார வல்லுனர்களின் வாதமாக உள்ளது. அதுபோக மாம்பழங்கள் அதிகம் எடுத்துக் கொண்டால் உடலில் பருக்கள், முகப்பருக்கள் ஆகியவை ஏற்படலாம். எனவே இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் மாம்பழங்களை சாப்பிடுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மாம்பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications