கணுக்கால் வீக்கம், வீங்கிய கால், பாத வெடிப்பை போக்க சூப்பர் ஹெல்த் டிப்ஸ்.. முட்டைகோஸ் இலை பேண்டேஜ்.
சென்னை: பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் உறுப்பு பாதங்கள் ஆகும்.. நம்முடைய பாதங்கள் ஆரோக்கியமாகவே இருந்தாலே, உடலில் பாதி நோய்களை தடுத்துவிடலாம். அதேசமயம், பாதங்களில், கணுக்காலில் வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அவைகளை அலட்சியப்படுத்தக்கூடாது.. அந்தவகையில், பாதங்களில் காணப்படும் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதற்கு காரணங்கள் என்ன? தடுப்பதற்கான எளிய முறைகள் என்னென்ன? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
இதய நோயின் ஆரம்பமே பாதம் வீக்கம்தான் என்கிறார்கள்.. பாதத்தில் வீக்கம் குறையாவிட்டால், இதயம் ரத்தத்தை சரியாக பம்ப் செய்ய முடியவில்லை என்று அர்த்தம். இதுவே நீர் சேர்ந்து பாதங்களில் வீக்கத்தை தந்துவிடுகிறது..

ரத்த சர்க்கரை மாறுபாடு
கணுக்கால்களில் காயம் எதுவுமே இல்லாமல் வீக்கம் வந்தாலும், அதுவும் ஆபத்துதான்.. எப்போதுமே பூஞ்சை தொற்றுகள் பாதத்தை தாக்காதவாறு காக்க வேண்டும. குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அதிகமாக இருந்தால், அது தோலில் வெளிப்பட்டு விடுமாம்.. ரத்த சர்க்கரையின் ஏற்றத்தாழ்வாக இருந்தாலோ அல்லது வியர்வையுடன் அணியும் செருப்புகளை அணிவதாலோ பாதங்களில் இப்படியான பிரச்சனை ஏற்படும..
அயோடின், இரும்புச்சத்து குறைவாக இருந்தால் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கலாம்.,.. குதிகாலில் வெடிப்புகள் இருந்தால், அது கல்லீரல் செயலிழப்பில் போய் முடியலாம்.. எனவே பாதங்களில் விரிசல் ஏற்பட்டால், கால்களில் கூச்ச உணர்வு, மரத்துப் போதல் உள்ளிட்ட அறிகுறி தெரிந்தால் கவனமாக இருக்க வேண்டும்..
பாதங்களில் வீக்கம் குறைய டிப்ஸ்
அதேபோல பாதம் மற்றும் கணுக்கால் வீக்கத்தினால் பெருமளவு பாதிக்கப்படுவது கருவுற்ற பெண்கள்தான். கருவுற்ற காலத்தில் ஏற்படும் அதிகப்படியான உடல் எடை, நீண்ட நேரம் நின்று கொண்டே இருத்தல், அதிக தூரம் பயணித்தல், மாதவிடாய், பொட்டாசியம் பற்றாக்குறை, நீர்த்தேக்கம் போன்ற காரணங்களால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில எளிய டிப்ஸ்கள் உள்ளன.
அரை ஸ்பூன் வெல்லப் பாகுடன், 1 ஸ்பூன் சோம்பு சேர்த்து 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அது அரைப்பங்காக சுண்டி வந்ததும் வடிகட்டி ஆற வைத்து தினமும் 3 வேளை குடித்து வந்தால், பாதங்களில் வீக்கம் குறையும்.
முட்டைகோஸ் பேண்டேஜ்
வெள்ளரிக்காய்க்கு தண்ணீரை உறிஞ்சி கொள்ளும் சக்தி இருப்பதால், வெள்ளரிக்காய் துண்டுகளை காலில் வைத்து கட்டி பேண்டேஜ் மாதிரி கட்டிக் கொள்ளலாம். அரை மணி நேரம் இப்படி கட்டி வைக்கும்போது, வீக்கத்திலுள்ள நீர் முழுக்க உறிஞ்சப்பட்டு பாதத்தில் வீக்கம் குறைய ஆரம்பிக்கும்.
முட்டைக்கோஸ் இலைகளுக்கு, உடலிலுள்ள அதிகப்படியான நீர்ச்சத்தை உறிஞ்சும் தன்மை உள்ளது.. எனவே பாதங்களை முட்டைகோஸ் இலைகளால் மூடி பேண்டேஜ் போட்டு கொள்ளலாம்..
1 ஸ்பூன் பாலில் ஆலிவ் ஆயில், சிறிது பட்டை பொடி சேர்த்து விழுதாக்கி பாதங்களில் தேய்த்துவிட்டு அப்படியே 15, 20 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும்.. இப்படி தினமும் செய்து வந்தால் பாதங்களில் ஏற்பட்டுள்ள அழற்சி வீக்கம் குணமாகும்.
அல்லது கடுகு எண்ணெய்யை லேசாக சூடு செய்து பாதங்களில் மசாஜ் செய்யலாம்.. இதனால் குளிரால் உண்டாகும் வீக்கமும் குறையும்
கொத்தமல்லி விதைகள்
தினமும் உணவு சாப்பிட்டு முடித்தபிறகு 2 அல்லது 3 பூண்டு பற்களை பச்சையாக மென்று சாப்பிடும்போது, திசுக்களில் உள்ள தேவையில்லாத கெட்ட நீர் ஊறிஞ்சப்படும். இது பாத வீக்கத்தை தடுக்க செய்யும்.. கெட்ட கொழுப்புகளையும் குறைக்கும்..
மல்லி விதைகள் அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்படக்கூடியது.. எனவே ஒரு கப் தண்ணீரில் 3 டீ ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை சேர்த்து கொதிக்க வைத்து பாதியாக சுண்ட காய்ச்சி ஆறியதும் வடிகட்டி தினமும் 2 வேளை குடித்து வரலாம்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications