குண்டு குண்டுனு ஆயிட்டீங்களா.. அப்ப இந்த மேஜிக் "இலையை" சாப்பிடுங்க.. மின்னலென வெயிட் குறையுதாமே
சென்னை: ஒரே வாரத்தில் உடல் எடை குறையலாம், 10 நாளில் உடல் எடை குறைக்கலாம் என்ற கூற்றுக்கள் எல்லாம் சாத்தியமுமில்லை.. உண்மையுமில்லை.. ஆரோக்கியமானதுமில்லை.
எளிய வழியில், இயற்கையான முறையில், உடற்பயிற்சி + உணவுப்பழக்கத்தின் மூலம் மெல்ல மெல்ல உடல்எடை குறைக்கலாம். இதற்கு பலவகையான உணவுகள் தூண்டுகோலாக இருந்தாலும், கொய்யாவை மறந்துவிடக்கூடாது..

மிக குறைந்த கலோரி கொண்ட பழம் கொய்யா.. ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாமல், ரத்தத்தின் அளவை கட்டுப்படுத்தும்... நிறைய நிறைய நார்ச்சத்து கொண்டது இந்த பழம்..
செரிமானம்: செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும்... கொய்யா பழத்தின் இலை, கனி, பட்டை என்று அதனுடைய எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. கொய்யாக்காயை தினமும் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.. உடல் எடையை குறைப்பதற்கும் இந்த கொய்யா மட்டுமல்லாமல், கொய்யா இலையும் உதவுகிறது.
இந்த இலையில், புரோட்டீன்கள், வைட்டமின் B6, C, கோலைன், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன..
கொய்யாவின் கொழுந்து இலையை வெறுமனே வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இதனால், பற்கள் சுத்தமாகும்.. பல்வலி நீங்கும்.. ஈறு பிரச்சனைகள் சரியாவதுடன், ஈறுகள் பலப்படும்.. வாய்ப்புண், தொண்டைப் புண் முழுமையாக ஆறிவிடும்.
சிறப்பு தண்ணீர்: கொய்யா இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். பொதுவாக உடல் எடை குறைய வேண்டுமானால், நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.. அப்படி சாதாரண தண்ணீருக்கு பதில், இந்த இலையை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், இன்னும் சிறப்பு..
கசாயம்: கொய்யா இலையில் கசாயம் போல செய்து குடிக்கலாம்.. இதனால், தொண்டை வலி நீங்குவதுடன், சுவாச பிரச்சனைகளும் தீரும்.. அதேபோல நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த கொய்யா இலை மிகவும் நல்லது.. தண்ணீரிலும், கசாயம் போல செய்தும் இலையை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாம்.
கொய்யா இலையில் டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறைய உறுதுணையாக இருக்கும்.. கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும்.. வயிறு உபாதைகள் உள்ளவர்களும் இந்த டீயை குடிக்கலாம்..
தலைமுடி வளர்ச்சி: இந்த இலையை நசுக்கி, அதன் சாறு மட்டும் எடுத்து, சருமத்தில் தேய்த்து வந்தால், சரும பிரச்சனைகள் மறைந்துவிடும்.. தலைமுடி வளர்ச்சிக்கும் இந்த இலையின் சாற்றை பயன்படுத்தலாம்.. குளிக்க வெந்நீர் பயன்படுத்தும்போது, இந்த இலையையும் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த நீரில் தலையை அலசினால், பொடுகு நீங்கி, தலைமுடி வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications