Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊளி மீன்கள்.. நீங்க மீனை வாங்கினால் இதை மட்டும் மறக்காதீங்க.. அதென்ன "சீலா புட்டு".. அல்டிமேட் பலன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நல்லதுதான்.. அதிலும் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள் அதைவிட நல்லது.. அப்படிப்பட்ட மீன்தான் ஊளி மீன்கள்.. ஊளி மீன்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

ஊளி மீன்களை ஷீலா அல்லது மாவுலா மீன் என்பார்கள். சிலர் இதை நெய் மீன் என்றும் சொல்வார்கள்.. மிக மிக குறைந்த கலோரிகளும், அளவுக்கு அதிகமான புரதமும் கொண்டதுதான் இந்த ஊளி மீன்கள்..

Do you know about Health benefits of Barracuda Fish and How to prepare Ooli Meen Fry

மூளை வளர்ச்சி: மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது இந்த ஊளி மீன்கள்.. கொழுப்பு குறைவாக உள்ளதாலேயே, இதயத்துக்கு பாதுகாப்பாக திகழ்கிறது.. இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

அடிக்கடி ஊளி மீன்களை சாப்பிட்டு வந்தால், உடலில் வீக்கத்தை குறைத்துவிடலாம்.. ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுப்பதில் ஊளி மீன்கள் சிறப்பாக செயல்புரிகின்றன. பக்கவாதம் அபாயமும் இதனால் குறைகின்றன.. பாக்டீரியா, வைரஸ் போன்ற உணவுகளினால் ஏற்படும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.. அந்த தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அருமருந்துதான், ஊளி மீன்..

நீரிழிவு நோயாளிகள்: நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகிறது.. நீரிழிவு நோயை தடுக்க உதவு புரிவதுடன், உடல் சோர்வை நீக்குவதிலும் பெரும் பங்காற்றுகிறது ஊளிகள். நுரையீரலுக்கும் நல்லது. ஆஸ்துமாவையும் சரிசெய்கிறது. ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு பெரும்பங்கு உள்ளது..

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த மீன் பெஸ்ட் சாய்ஸ்.. இதிலுள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களுக்கு பேருதவி புரிகின்றன.. இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மனச்சோர்வு, பதட்டம் நீங்கும்.. பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சருமத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த மீன் மிகவும் நல்லது.. இதிலுள்ள வைட்டமின் பி 12- நரம்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.. ஹை புரோட்டீன் உள்ள மீன் இந்த ஊளி மீன்.. அதாவது, 3-அவுன்ஸ் சுமார் 22 கிராம் புரோட்டீனை கொண்டிருக்கிறதாம். இதயத்துக்கு வலு சேர்க்கக்கூடிய, இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த உணவுதான் இந்த மீன்...

பக்கவாதம்: ரத்த அழுத்தத்தை குறைக்கவும், ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுக்கவும் இந்த மீன்கள் உதவுகின்றன.. அத்துடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயத்தையும் தடுத்து நிறுத்துகிறது.

கண்களை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. மீன் வகைகளிலே இந்த மீனில்தான் கொழுப்பு சத்து குறைவாக இருக்கிறது.. குடல் புண்களை சரிசெய்யக்கூடியது.. பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊளி மீன்களை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள். அதுமட்டுமல்ல, கண்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும், இந்த ஊளியை சாப்பிட்டுவந்தால், அதுவும் சீராகும்.

Do you know about Health benefits of Barracuda Fish and How to prepare Ooli Meen Fry

எப்படி சாப்பிடலாம்: பொதுவாக, இந்த ஊளியை வறுவல் அல்லது குழம்பு செய்வார்கள்.. ஆனால், ஊளி மீனை சுத்தம் செய்து, உப்பு, மிளகு, ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிடுவார்கள்.. குறைவான மசாலா பொருட்களை மேரனேட் செய்து, கிரில் செய்து சாப்பிட்டால், முழு சுவையும் கிடைக்கும்.. அல்லது நெருப்பில் சுட்டும் சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்தும் சாப்பிடலாம்.

ஊளி மீன் புட்டு: இந்த ஊளி மீனில் புட்டு செய்தால் இன்னும் ருசியாக இருக்கும். இதற்கு ஊளி மீன் துண்டுகளை கழுவி சத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சிறிது மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து, இந்த மீன் துண்டுகளையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். 3 நிமிடங்களில் மீன் வெந்ததும், அவைகளை வெளியே எடுத்து ஒரு தட்டில் ஆற வைத்து, உதிர்த்து கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு வாணலில் எண்ணெய், சோம்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி, அதனுடன் உதிர்த்து வைத்துள்ள மீன் துண்டுகளை கொட்டி கிளற வேண்டும்.. பிறகு, உப்புத்தூள், சீரகத்தூள், மிளகு தூள், துருவிய தேங்காய் சிறிது சேர்த்து 2 நிமிடம் வதக்கிவிட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால், ஊளி மீன் புட்டு ரெடி.

ஊளி ஃப்ரை: அதேபோல, குழந்தைகளுக்கு ஊளி மீனை ஃப்ரை செய்து தரலாம்.. இதற்கு ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், சிறிது எள், முட்டை, உப்புத்தூள், சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் ஊளி மீன்களை, இந்த மசாலாவில் ஊறவைத்து, பொரித்து தந்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+