குடலை காக்கும் குடவாழை.. நோய்களை அசால்ட்டா விரட்டும் சிவப்பு கலர் குடவாழை அரிசி.. சூப்பர்
சென்னை: மறந்துபோன பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றுதான், இந்த குடவாழை அரிசி.. அந்த காலத்திலிருந்தே, தமிழ்நாட்டில் பயிரிடப்பட்ட முக்கியமான அரிசி இதுவாகும்.
இந்த நெல்வகை, பார்ப்பதற்கு சிவப்பு அரிசியை போலவே, ரெட் கலரில் இருக்கும்.. உப்புத் தன்மை மிகுந்த கடலோரப்பகுதிகளில் மட்டுமே பயிரிடப்படும்.. நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதிகளில் இந்த குடவாழை அரிசி அதிகம் பயிரிடப்படுகிறது... இதனுடைய கதிர்கள் நாலாபக்கமு விரிந்து, குடை போல காணப்படும். அதனால்தான், இதற்கு குடவாழை அரிசி என்று பெயர் வந்ததாம்.

கொழுப்புகள், சோடியம், பொட்டாசியம், அதிக அளவு கார்போஹைட்ரேட், டயட்டரி ஃபைபர், நியாசின், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, C, B-6 போன்றவை உள்ளன.
நன்மைகள்: இந்த அரியை சாப்பிடும்போது, ஜீரண சக்தி பெருகுகிறது.. இதனால் மலச்சிக்கல் எளிதாக தீர்கிறது.. குடல் ஆரோக்கியம், வயிறு பிரச்சனையும் இந்த இந்த குடவாழை அரிசி தீர்க்கிறது.. சருமத்துக்கு ஆரோக்கியம் தருகிறது.. வயதான தோற்றத்தை தள்ளிப்போடக்கூடிய தன்மைகளை இந்த அரிசி பெற்றுள்ளது.. உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.. உள் உறுப்புகள் பலம்பெறும்..
பெரும்பாலும் அரிசி என்றாலே சர்க்கரை நோயாளிகளை குறைவாக சாப்பிட சொல்வார்கள். ஆனால், இந்த அரிசியில் மட்டும் புரோட்டீனும் + நார்ச்சத்தும் + தாதுச்சத்தும் + உப்புச்சத்தும் அதிமாக உள்ளதால் அதனால்தான் சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடக்கூடிய அரிசியாக இது உள்ளது.. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருக்க இந்த அரிசி உதவுகிறது. குழந்தைகளுக்கும் நல்லது.. உடல் வலிகளையும், எலும்புகள் சம்மந்தமான மூட்டு வலிகளையும் போக்கி நிவாரணம் தரக்கூடியது.
நுரையீரல்: நுரையீரலின் செயல்பாட்டை அதிகரிக்க செய்யும் இந்த அரிசி, நுரையீலுக்கு நண்பன் என்றே சொல்லலாம்.. ஆஸ்துமாவையே விரட்டக்கூடியது குடவாழை.. முக்கியமாக கொழுப்பு இல்லாதது.. இதய நோய்களை தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது..
எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்: வழக்கமாக நாம் பயன்படுத்தும் அரிசியை போலவே, இதிலும், இட்லி, பொங்கல், தோசை, பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் என செய்து சாப்பிடலாம். சிலர் இந்த அரிசியில் அல்வா செய்வார்கள்.

3 மணி நேரம் இந்த அரிசியை ஊறவைத்து, வடித்து எடுத்துக் கொண்டு, அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, வெல்லம் போட்டு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இப்போது அந்த தண்ணீரை மட்டும் மீண்டும் கொதிக்க வைத்து, தயாராக வைத்துள்ள அரிசி, தேங்காய் விழுதை சேர்த்து கிளற வேண்டும். வாணலில், நெய், முந்திரி, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி கொட்டினால், அல்வா ரெடி.
பச்சைப்பயிறு: இதுபோலவே, இந்த அரிசியில், பச்சைப்பயிறையும் கலந்து பொங்கல் செய்யலாம்.. பச்சை பயிறு, குடவாழை அரிசி இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு இரண்டையும் குக்கரில் போட்டு, அதனுடன் வெல்லத்தையும் சேர்த்து வேக வைக்க வேண்டும். பொங்கல் என்பதால் நான்கைந்து விசில் தாராளமாகவே விட்டு இறக்கினால் பொங்கல் ரெடி.












Click it and Unblock the Notifications