ஊளி மீன்.. நுரையீரல் தொற்றை விரட்டியடிக்கும் ஊளி மீன்கள்.. உடல் எடை அசால்ட்டா குறையுமாம் பாருங்க
சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நல்லதுதான்.. அதிலும் ஒமேகா 3 அதிகமுள்ள மீன்கள் அதைவிட நல்லது.. அப்படிப்பட்ட மீன்தான் ஊளி மீன்கள்.. ஊளி மீன்களின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- மீன் வகைகளிலே குறைவான கொழுப்பு சத்துள்ளது இந்த ஊளி மீன்கள்தான்.

- குடல் புண்களை சரி செய்யக்கூடியது ஊளி மீன்கள்
- மாதவிடாய் காலத்தில் ஊளி மீன்களை பெண்கள் அதிகம் சாப்பிடுவது சிறந்தது
- ஊளி மீன்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தமான எந்த பிரச்சனைகளும் வருவதில்லை
- மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஊளி மீன்களில் கொழுப்பு குறைவாக உள்ளது. இதனால், இதயத்துக்கு மிகவும் நன்மையை தருகிறது. இதயத்தை பாதுகாக்கக்கூடிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த உணவுதான் இந்த மீன்...- தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஊளி மீன்கள் அருமருந்தாகின்றன
- சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை சாப்பிடுவதால் உடல் சோர்வு நீங்குகிறது
- நுரையீரலுக்கு ஏற்படும் தொற்றுகளை நீக்குகிறது இந்த ஊளி மீன்கள். அந்தவகையில் ஆஸ்துமாவையும் சரிசெய்கிறது.
- ஆண்களின் உயிரணுக்களின் எண்ணி்க்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு பெரும்பங்கு உள்ளது..
- ஊளி மீன்கள் சரும பாதுகாப்பையும், தலைமுடி உறுதித்தன்மையையும் தருகின்றன












Click it and Unblock the Notifications