Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை! கிட்டயே நெருங்கவிடாது இன்சுலின் செடி! யாரெல்லாம் சாப்பிட கூடாது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை நம்மை அண்டவே விடாமல் செய்வதுதான் இன்சுலின் செடியாகும். இதை மருத்துவரின் ஆலோசனைபடி எடுத்துக் கொண்டால் நல்ல பலன்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதே வேளையில் நன்மையிலும் தீமை இருக்கும் என்பதை போல் இந்த செடியை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

insulin plant

இதுகுறித்து அத்திமரக்காடு எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சர்க்கரை நோய்யை கட்டுக்குள் கொண்டு வரும் இன்சுலின் செடி குறித்து பார்க்கலாம். இந்த செடி சர்க்கரை நோய் மட்டுமல்லாமல் சிறுநீரகக் கற்கள், இரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளையும் சரி செய்யும்.

இயற்கை மருத்துவம், சித்தா, ஆயுர்வேத மருத்துவத்தில் உணவு மற்றும் பல்வேறு மருத்துவ முறைகளின்மூலம் நோயைக் கட்டுக்குள் வைத்து வருகின்றனர். முறையாக இந்த மருத்துவத்தைப் பின்பற்றுபவர்களுக்கு நோயை வென்றெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட சூழலில், சர்க்கரை நோயைக் குணப்படுத்தக்கூடிய மருந்துகளின் வரிசையில் இன்சுலின் செடி.

காஸ்டஸ் இக்னியஸ் (Costus igneus) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இது இஞ்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் அமெரிக்காவின் 'ஃப்ளோரிடா' மாகாணமாகும். இன்சுலின் செடியின் மகத்துவம் பற்றி அறிந்த ஐரோப்பியர்கள் இதன் பயனை முழுமையாக அனுபவித்து வருகின்றனர்.

இந்தியாவில், கேரள மாநிலத்தின் கொச்சியிலும், தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திலும், இதற்கான நர்சரிகள் உள்ளன. வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் மிக எளிதாக வளர்க்கலாம். இலையின் சுவை சிறிது புளிப்பாக இருக்கும்.

சர்க்கரை நோய் என்றாலே 'அது பணக்காரர்களுக்கு வரும் நோய்' என்பார்கள். ஆனால் தற்போது அது எல்லா தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த சர்க்கரை நோய் வேகமாக பரவி வருகிறது என்பது தான் உண்மை. அதிலும் இந்தியாவில் ஏராளமான மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைந்துள்ளனர்.

இன்சுலின் செடி

காஸ்டஸ் பிக்டஸ் என்ற இந்த இன்சுலின் செடியின் தேவையும் இப்பொழுது அதிகரித்து வருகிறது. இந்த இன்சுலின் செடி இருந்தாலே போதும் உங்கள் சர்க்கரை நோய்க்கு பை பை சொல்லிடலாம் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்களும் பரவி வருகிறது.

இது நீரழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்லாது ஆரோக்கியமாக உடலை பேண விரும்புவர்களுக்கும் பயன்களை அள்ளித் தருகிறது.

இன்சுலின் செடியில் உடம்புக்கு தேவையான இரும்புச் சத்து, புரோட்டீன் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான டோகோபரோல், அஸ்கார்பிக் அமிலம், ஸ்டீராய்டுகள், பீட்டா கரோட்டின், டெர்பெனோயிட்கள் மற்றும் ஃபிளவனாய்டுகள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

இந்த செடியின் சாற்றில் பைக்டோ கெமிக்கலான கார்போஹைரேட்ஸ், புரோட்டீன்ஸ், டிரைட்டர் ரெனாய்டுகள் அல்கலைடுகள், சபோனின்கள், டானின்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் அடங்கியுள்ளன.

இலையில் உள்ள சத்துக்கள்

21.2% - நார்ச்சத்து

5.2%-பெட்ரோலியம் ஈதர்

1.33% - அசிடோன்

1.06%-சைக்ளோஹெக்சன்

2.95%-எத்தனால்

டெர்பெனாய்டு, லுபேல் கலவை

அதன் தண்டுப் பகுதியில் ஸ்டீராய்டு கலவை (ஸ்டிக்மாஸ்டரோல்) ரைசோம் பொருட்களான (க்யுர்செடின் மற்றும் டயோசினீன்) தாதுக்கள் உள்ளன. இதைத் தவிர தாதுக்களான பொட்டாசியம், கால்சியம், குரோமியம், மாங்கனீஸ், காப்பர் மற்றும் ஜிங்க் உள்ளிட்டவையும் காணப்படுகின்றன.

இன்சுலின் செடியின் பயன்கள்

இந்த செடி இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அளவை குறைக்கிறது. இதன் இலையில் உள்ள ப்ரக்டோஸ் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. எனவே இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாவது மட்டுமல்லாது அதனால் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடு, உறுப்புகள் செயலிழப்பு போன்றவையும் வராமல் தடுக்கிறது.

ஜீரண சக்தி

பலவிதமான சத்துக்கள் அடங்கிய இதன் இலை, நமது குடலில் வாழும் ஈகோலி பாக்டீரியா மாதிரியே செயல்படுகிறது. இதனால் நமது சீரண சக்திக்கு துணை புரிகிறது. இதன் புரோபயோடிக் தன்மை உணவை எளிதாக சீரணிக்கச் செய்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது. இலையில் உள்ள ப்ரக்டோஸ் குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

ஆரோக்கியமான சிறுநீரகம்

இதிலுள்ள சோடியம் மற்றும் நீர்ச்சத்து நமது சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இதன் இலைகள் மற்றும் ரைசோம் இந்த தன்மையை கொண்டுள்ளது.

ஆன்டி பாக்டீரியல் தன்மை

இந்த தாவரத்தின் மெத்தனோலிக் சாறு பாசிலஸ் மெக்டேரியம், பேசில்லஸ் செருஸ், ஸ்டாஃபிலோகோக்கஸ் ஆரியஸ் மற்றும் எஸ்கெரிச்சியா கோலி, சூடோமோனாஸ் ஏருகினோசா, க்ளெப்சியேலா நிமுனோனியா மற்றும் சால்மோனெல்லா டைஃபைமூரியம் போன்ற கெட்ட பாக்டீரியாக்களை அழித்து கழிவுகளை வெளியேற்றுகிறது.

கல்லீரல் பிரச்சினைகள்

கல்லீரலில் படிந்து இருக்கும் கொழுப்புகள் மற்றும் நச்சுக்களை உடைத்து வெளியேற்றுகிறது. எனவே இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் வராது.

புற்றுநோய் வராமல் தடுக்க

இந்த செடியில் புற்று நோயை எதிர்க்கும் தன்மை மற்றும் புற்று நோய் செல்களின் பெருக்கத்தை தடுக்கும் பண்பு உள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் புற்று நோய் செல்களை எதிர்த்து போரிடுகிறது. குறிப்பாக HT 29 மற்றும் A549 புற்று நோய் செல்களுக்கு பயனளிக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கலாம்.

கொலஸ்ட்ராலை குறைக்க

இந்த செடியின் நீரில் கரையும் தன்மை இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது. இதனால் போதுமான இன்சுலின் சுரப்பு ஏற்படுகிறது. கொழுப்பும் உறிஞ்சப்படுவது மெதுவாகி,இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடுகிறது. இதனால் இதய நோய்கள், பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் இல்லாமல் வாழ முடியும்.

ஆஸ்துமா

இந்த செடியின் அழற்சி எதிர்ப்பு தன்மை சுவாச பாதையில் ஏற்படும் அழற்சியை போக்கி ஆஸ்துமாவை குணப்படுத்துகிறது. நுரையீரல் தசைகளை இறுக்கமாக்காமல் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் தருகிறது.

சாப்பிடும் அளவு

இந்த செடியை சாப்பிடும் அளவு ஒவ்வொருத்தர் உடல் நிலையை பொருத்து மாறுபடுகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை இதை சாப்பிடலாம். அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. காலையில் ஒரு வேளையும் இரவில் படுப்பதற்கு முன்பும் எடுத்து கொள்ளுங்கள். இலைச் சாறு அல்லது இலைகளைக் கொண்டு தேநீர் தயாரித்து கூட பருகி வரலாம்.

கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த செடியை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இது ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். இலையை அப்படியே பச்சையாக சாப்பிடுவதை தவிருங்கள். இதன் கடினமான தன்மை எரிச்சலை உண்டு பண்ணக் கூடும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+