"குப்பை கீரை".. குப்பை போன்ற உடலை தேற்றும் இலை.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் குப்பைக்கீரை..சூப்பர்
சென்னை: பெயரை மட்டுமே நினைத்து எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.. வந்துவிடவும் கூடாது.. மருத்துவமும், மகத்துவமும் இரண்டும் ஒருசேர அமைந்துள்ளதுதான் குப்பைக்கீரை.
எங்கும் பரவலாகவும், இயல்பாகவும் கிடைக்கக்கூடியது இந்த கீரை.. சிவப்பு நிறத்தில் இதற்கு பூக்கள் இருக்கும். இந்த கீரையின் பெயர் குப்பை கிடையாது.. குப்பைகளில் வளர்ந்தாலும், குப்பை போன்ற உடம்பை தேற்றுவதால்தான், குப்பைகீரை என்று பெயர் வந்ததாம். குப்பைகீரைக்கு முள்ளிக்கீரை என்ற பெயரும் உண்டு. குப்பைகீரையானது தண்டுக்கீரை வகையைச் சார்ந்த கீரை வகையாகும்.

கண் பார்வை: வைட்டமின்கள் A, C சத்துக்கள் உள்ளதால், நோயெதிர்ப்பு செயல்பாடு சற்று அதிகமாகவே இதில் இருக்கும்.. தோல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. கண் பார்வை கூர்மையாகின்றன.. உடற்சூடு தணியும்.. சொறி சிரங்குகள் அகலும்.. நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நிங்கும்.. வயிற்றுப் புண்ணையும், வாய்ப்புண்ணையும் ஆற்றும்.
இந்த இலைகளில் இரும்புச்சத்து, கால்சியமும் அபரிமிதமாகவே நிரம்பு உள்ளன.. ரத்தசோகை உள்ளவர்கள், அடிக்கடி இந்த கீரையை சாப்பிட்டால், ஹீமோகுளோபின் பிரச்சனை தீரும்.. அதேபோல, பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலத்தையும், ஆரோக்கியத்தையும் தருகிறது இந்த குப்பைக்கீரை. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளதால், வயதான தோற்றம் தள்ளிப்போடப்படுவதுடன், இளமையான தோற்றத்தை நீடிக்க வைக்கிறது.
ஆரோக்கியமான குடல்: அளவுக்கு அதிகமான நார்ச்சத்துக்களை கொண்ட கீரை இதுவாகும்.. மலச்சிக்கல் இருந்தாலே, கீரையை சாப்பிட சொல்வார்கள்.. ஆனால், இந்த கீரையோ, செரிமானத்திற்கு பேருதவி புரிவதுடன், ஆரோக்கியமான குடலையும் பராமரிக்க உதவுகிறது.
உடலிலுள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க இந்த கீரைகள் உதவுகின்றன.. தொடர்ந்து இந்த கீரையை சாப்பிடும்போது நரம்பு மண்டலம் வலுப்பெறும். நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.. சிறுநீர் நன்றாக பிரியும்.
உடலில் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு இருந்தாலும், இந்த கீரையை அரைத்து தடவினால் கட்டிகள் கரைந்துவிடும். அதேபோல, உடலில் எங்காவது வீக்கம் ஏற்பட்டாலும், இந்த கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் குறைந்துவிடுமாம். அவ்வளவு ஏன், விஷ ஜந்துக்களான பாம்பு மற்றும் தேள் கடிக்கு விஷ முறிவு மருந்தாக பேருதவி புரிந்து உயிரை காக்கிறது இந்த குப்பை கீரை.
கீரை பொரியல்: வழக்கமான கீரைகளை போலவே, இந்த கீரையையும் பொரியல் செய்யலாம். ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, அதில், சுத்தம் செய்யப்பட்ட கீரையையும் கொட்டி, சிறிது உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். இறுதியில் துருவிய தேங்காய் சேர்த்து இறக்கிவிடலாம்.
அல்லது வேகவைத்த பருப்பு சேர்த்து கூட்டு போல செய்யலாம்.. இந்த குப்பை கீரையில் சூப் செய்து குடிக்கலாம். சத்தான அடை செய்து சாப்பிடலாம். சாலட் செய்யலாம்.. கேரட், வெள்ளரிக்காய்,, குப்பைக்கீரை இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி, மிளகுத்தூள், உப்புத்தூள் கலந்து சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications