இட்லி, தோசைக்கு மாவு அரைக்கிறதை விட ! இந்த பயறு போட்டு தோசை செய்தால் ஆரோக்கியம் 100%
சென்னை: பச்சை பயறு தோசையின் ஆரோக்கிய குறிப்புகள் என்னென்ன தெரியுமா. இந்த பெசரட்டு தோசையை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், எடை குறைக்க விரும்புவோர் எந்த உணவை உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம் என்பதை தேடி தேடி அலைகிறார்கள். அதற்கேற்ப பல்வேறு யூடியூப் சேனல்களும் நிறைய ரெசிபிகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் பச்சை பயறை வைத்து ஒரு தோசையை தயார் செய்யலாம். அதற்கு பெசரெட்டு தோசை என்றும் பெயர் உண்டு. இது ஆந்திராவின் பிரபல உணவாகும். பச்சை பயறுக்கு தெலுங்கி பெசரெட்டு பப்பு என்ற அர்த்தம் உண்டு.
அந்த பெசரட்டு தோசையை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதாவது இந்த பச்சை பயறை முளைக் கட்டியும் செய்யலாம். பச்சை பயறை 6 மணி நேரம் ஊற வைத்துவிடவும், அதில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத அளவுக்கு ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டவும்.
பிறகு அதை 10 மணி நேரத்திற்கு மேல் ஏதாவது ஒரு பாத்திரம் போட்டு மூடி வைத்திருங்கள். அந்த நேரம் முடிவடைந்ததும் அதில் சிறிய சிறிய முளைகள் கட்டியிருக்கும். அந்த முளை கட்டிய பயிறை வைத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு டம்ளர் பயறை எடுத்தால் அரை கப் பச்சை அரிசியை எடுத்து கழுவி ஊற வைத்திருக்க வேண்டும்.
அவ்வாறு ஊறியதும் பச்சை பயறு, அரிசி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றுடன் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும், நைசாக அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இதை புளிக்க வைக்க தேவையில்லை, அந்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கேரட் துருவல், முட்டை கோஸ் உள்ளிட்டவைகளை சேர்த்து தோசையாக வார்த்து சாப்பிடலாம்.
இதற்கு தொட்டுக்க எதுவும் தேவையில்லை, தேவைப்பட்டால் கார சட்னி, தேங்காய் சட்னி பயன்படுத்தலாம். அது போல் முளைகட்டாமல் பயன்படுத்த வேண்டுமென்றால், அரிசியையும் பச்சை பயறையும் சேர்த்து ஊற வைத்து மற்றவைகளை மேலே குறிப்பிட்டது போல் பின்பற்றவும்.
பச்சை பயறில் புரதச்சத்து இருக்கிறது. ஆரோக்கியத்தை தரக் கூடிய நார்ச்சத்தும் இருக்கிறது. இது கேன்சரை தடுக்கும் வல்லமை கொண்டது. உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியது, முடி உதிர்வை தடுக்க கூடியதாகும். வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.
உடல் பருமனைக் குறைக்கவும் உடல் எடையை சீராக பராமரிக்கவும் பச்சை பயறு பெரிதும் உதவுகிறது. பச்சை பயறை பொடியாக்கி முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும். மேலும் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications