கரும்பு கசக்காது.. இனிப்பு கரும்பு ஜூஸில் இந்த ஆச்சரியமா? கிட்னி முதல் தோல் வரை அசத்தும் கரும்பு சாறு
சென்னை: கோடை காலம் துவங்கிவிட்டது.. கரும்பு ஜுஸ் கடைகள் சாலையோரங்களில் முளைக்க துவங்கிவிட்டன. கரும்பு சாறு குடிப்பது நல்லதா? கெட்டதா?ஐஸ்கட்டி சேர்த்து குடிக்கலாமா? சர்க்கரை நோயாளி கரும்பு ஜூஸ் குடிக்கலாமா?
இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்ததுதான் இந்த கரும்பு சாறு.. இவை அனைத்தும் நிரம்பியிருப்பதால்தான், நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

இதனால், நோய்கள் நம்மை அண்டாதவாறு எதிர்த்து போராடுகிறது.. மலச்சிக்கலை போக்குவதுடன், வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களையும் இந்த கரும்பு சாறு தடுத்து நிறுத்துகிறது.
மாதவிடாய் கோளாறு: மாதவிடாய் கோளாறுகள் இருக்கும் பெண்கள், மாதவிடாய் ஏற்படுதற்கு ஒரு வாரம் முன்பேயே, கரும்பு சாறு குடித்து வரவேண்டும். இதனால், மாதவிடாய் சீராகி, உபாதைகளும் அண்டாது.
கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக்கு கரும்பு மிகவும் நல்லது.. அவ்வளவுஏன்? மஞ்சள் காமாலைக்கு கரும்பு ஜூஸ் தீர்வை தருகிறது..
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று முதல், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வரை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது கரும்பு. கல்லீரல், சிறுசீரகங்களை வலிமையாக்குகிறது... சிறுநீரகத்தில் உள்ள கற்களையும் கரைத்து வெளியேற்றும்.. கல்லீரலில் தேங்கி கிடக்கும் நச்சுக்களை வெளியேற்ற தூண்டுகிறது.. இதனால், உடல்எடையும் குறையும்..
சரும நோய்கள்: வைட்டமின் C நிறைந்துள்ளதால், தொண்டைப்புண், வயிற்றுப்புண்களை இந்த ஜூஸ் ஆற்றுகிறது. தொண்டையில் அரிப்பு, எரிச்சல் போன்ற உணர்வு இருந்தால், கரும்பு சாறு குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்..
கரும்பு ஜூஸ் குடித்து வந்தால், பற்களும், ஈறுகளும் உறுதியாகிறது.. பற்களில் ஏற்படும் சேதாரங்கள் தடுக்கப்படுகின்றன.. மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நம்மை சுறுசுறுப்புடன் இயங்க செய்ய கரும்பு சாறு உதவுகிறது.. சரும பாதுகாப்பை மேம்படுத்துகிறது கரும்பு சாறு.. கரும்பு சாறை குடித்து வருபவர்களுக்கு எளிதில் தோலில் சுருக்கங்கள் ஏற்படாது.. முகப்பருக்களும் நீங்கிவிடும். பொடுகு தொல்லை இருந்தால், கரும்பு சாற்றினை தலைக்கு தடவி வரலாம்..
கரும்பு சாறு: தித்திப்பு நிறைந்த இந்த கரும்பு சாறுகள், குறைந்த அளவிலான கிளைசெமிக் பண்புகளை கொண்டிருக்கின்றன.. இயற்கையான சர்க்கரை நிரம்பியிருப்பதால், சர்க்கரை உடலில் மெதுவாக உறிஞ்சப்படுகிறது... உயர் கிளைசெமிக் பானங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதால், டைப் 2 சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறை மிதமான அளவில் குடித்து வந்தால், சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறதாம்..
ஆனால், கரும்பு சாறு அதிகமாக குடிக்க கூடாது.. இதனால், நம்முடைய உடலிலிருந்து பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெளியாகின்றன. இதனால் கணையம் தேவைக்கு அதிகமாக இன்சுலினை உற்பத்தி செய்யும் என்பதால், பிரஷ்ஷான கரும்பு ஜூஸை, வாரம் ஒருமுறை அரை கிளாஸ் மட்டுமே குடிக்க வேண்டுமாம். அதுவும் டாக்டர்களின் ஆலோசனைபேரில் குடித்தால் ஆரோக்கியம் தழைக்கும்.
தேங்காய் தண்ணீர்: உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், ஒரு நாளைக்கு 2 முறை கரும்பு சாறு குடிக்கலாம்.. தேவைப்பட்டால், எலுமிச்சை சாறு அல்லது இளநீருடன் கலந்து குடித்தால் கூடுதல் நலன் கிடைக்கும்.
தற்போது வெயில் காலம் துவங்கிவிட்டதால், கரும்பு ஜூஸ்களின் தேவை அதிகரித்துள்ளது.. ஆனால், சுகாதாரமற்ற நீர் அல்லது சுகாதார குறைவான ஐஸ்கட்டிகளை பயன்படுத்தும்போது உருவாகக்கூடும். இதுபோன்ற ஜூஸ்களை குடித்தால், வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்படும்.. ஜூஸில் ஐஸ் சேர்ப்பதால் எந்த சத்துகளும் கிடையாது.. அதிலும் சுகாதாரமற்ற முறையில் ஜூஸ் தயாரிக்கப்பட்டால், பெருந்தொல்லைதான் உடலுக்கு ஏற்டும்.
வாட்டர் பாட்டில்: பெரும்பாலும், வாட்டர் பாட்டிலில் தண்ணீர் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து ஐஸ் கட்டியாக மாற்றி அதனை பயன்படுத்துவது சரியானது.. எனினும், ஐஸ் கட்டி சேர்க்காமல், தண்ணீர் சேர்க்காமல், கரும்பு ஜூஸ் உட்பட எந்த ஜூஸ்களையும் குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள் உணவுத்துறை அதிகாரிகள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications