பூண்டை தேனில் ஊற வெச்சு பாருங்க.. ஓவர்நைட்டில் ஆச்சரியம்.. பல மருத்துவ பயன்கள்.. ஆனால் ஒரு கண்டிஷன்
சென்னை: தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இதிலுள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன? எந்த நேரத்தில் இதனை நாம் சாப்பிட வேண்டும் தெரியுமா? இதோ குட்டி டிப்ஸ்
தேனில் B1, B2, B3, B5, B6, C, E போன்ற வைட்டமின்களும், அயோடின், கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற எண்ணற்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

அதனால்தான் பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை, தேனை தவிர்க்க முடிவதில்லை... நம்முடைய ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க செய்வதுடன்,ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டவை தேன். இதயத்தின் தசைநார்களுக்கு வலிமையை தந்து, இதயத்தை சீராக இயங்க துணைபுரிகிறது.
கல்லீரல் செயல்பாடு: கிளைகோஜன் உருவாக்கத்துக்கு நச்சுப்பொருள்களை கல்லீரல் மூலம் வெளியேற்றி, கல்லீரல் செயல்பாட்டையும், குடல் செயல்பாட்டையும் காக்கிறது. தேன் சாப்பிடுபவர்கள் எப்போதுமே சுறுசுறுப்பாக காணப்படுவார்கள்.
பூண்டுகளை பொறுத்தவரை, இதய ஆரோக்கியத்துக்கு சிறந்த மருந்தாகும்.. ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் பூண்டுகள் குறைக்கின்றன.
ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்கும் தன்மை பூண்டுகளுக்கு உள்ளது.. இதய நோய் முதல் புற்றுநோய் வரை ஆபத்தான நோய்களின் அபாயத்தையும் பூண்டுகள் குறைக்கின்றன. குறிப்பாக உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல் புற்றுநோய் போன்ற புற்றுநோய் வளர்ச்சியின் அபாயத்தை பூண்டுகள் குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. பாக்டீரியாவை எதிர்த்துப் போராடவும், உணவு நச்சுத்தன்மையை அகற்றவும் பூண்டுகள் உதவுகின்றன.. வாத நோயை குணப்படுத்துவதில் பூண்டு சிறந்த மருந்தாகிறது.
இந்த மருத்துவ குணம் நிறைந்த பூண்டு + தேன் இவை இரண்டையும் ஒன்றுசேர்த்து சாப்பிடும்போது, கூடுதல் நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.. அதிலும் ஊறவைத்த பூண்டுகள் மூலம் பலன்கள் இரட்டிப்பாகின்றன.
பூண்டுகள்: பூண்டுகளை தோல் உரித்து, நன்றாக மசித்து தேனில் ஊறவைத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவிட வேண்டும். அப்படியே 15 நாட்கள் விட்டுவிட வேண்டும்.. பிறகு இதிலிருந்து வெறும் வயிற்றில் 4 முதல் 5 பூண்டுகளை சாப்பிடலாம்.. சில நாட்களுக்கு பிறகு 2 முதல் 3 பூண்டுகள் என்று குறைத்து கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இது சாப்பிட்டால் அரை மணி நேரத்துக்கு வேறு எதையும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும் என்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்தது.
எதிர்ப்பு சக்தி: ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த தேனும், பூண்டும் சேர்ந்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றன.. எனவே தேனில் ஊறவைத்த பூண்டினை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். இதனால், உடலிலுள்ள கொலஸ்ட்ரால் குறைய துவங்கும்.. இதனால் இதய நோய்கள் நம்மை நெருங்காது. உடலிலுள்ள தொற்றுக்கள் வெளியேறும்.. அஜீரண கோளாறுகள் நீங்கும்.. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும்..
தேனில் ஊறவைத்து பூண்டு சாப்பிடுவது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்து, நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க செய்கிறது..
நரம்புகள்: தேன் மற்றும் பூண்டை சேர்த்து சாப்பிடும்போது, நல்ல தூக்கம் கிடைக்கும்.. மூளை சேதமடைவதில் இருந்தும் பாதுகாக்கலாம். இவை இரண்டுமே சருமத்துக்கும் நல்லது. சருமத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை புத்துயிர் பெற செய்கிறது.. ஒற்றை தலைவலி, நரம்பு வலி போன்ற போன்ற பிரச்சனைகளும் தீரும்.. உடல் வலி, மூட்டு வலி உள்ளவர்கள் இதை தாராளமாக சாப்பிடலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications