விரால் மீனை செய்றீங்களா.. விராலை இப்படி சுத்தம் செய்யுங்க.. தாய்மார்களின் வரப்பிரசாதம் விரால் மீன்கள்
சென்னை: மீன்கள் எப்போதுமே நல்லதுதான் என்றாலும் விரால் மீனுக்கு ஒரு தனிசிறப்பு உண்டு.. இந்த மீனை அசைவ பிரியர்கள் வேண்டாம் என்று சொல்லவே மாட்டார்கள்.
சிலவகை மீன்களில் மட்டுமே அதிகளவில் ஒமேகா 3 நிறைந்துள்ளதால்தான், அந்த மீன்களை சாப்பிடுமாறு மருத்துவர்களே பரிந்துரைக்கின்றனர்.
அப்படி ஒமேகா அதிகமுள்ள ஒருமீன்தான் விரால் மீன். பார்ப்பதற்கு, உருண்டையாகவும், நீளமான உடலையும் பெற்றிருக்கும். .. இதன் தலையை பார்த்தால், பாம்பின் தலையை போலவே இருக்கும்.

100 கிராம் விரால் மீனில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சோடியம் - 62 mg, கொழுப்பு - 1 g, புரோட்டீன் - 18 கிராம், கொலஸ்ட்ரால் - 44 mg, கால்சியம் - 1%, வைட்டமின் C - 2%, இரும்பு சத்து - 2% அடங்கியுள்ளன.
தாய்ப்பால்: தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு ஒமேகா 3 ஊட்டச்சத்து கிடைக்குமாம்.. அத்துடன் குழந்தைகளின் கண்பார்வை திறன் அதிகரித்து, மூளை வளர்ச்சியும் அதிகரிக்கும்.. கர்ப்பத்திலுள்ள குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்..
இந்த மீன் சாப்பிடுவதால், காது கேளாமை மற்றும் அல்சைமர் நோயின் அபாயங்கள் குறைகின்றன... சருமத்துக்கு பாதுகாப்பு தரக்கூடியது.. கண்களின் செயல்திறனை அதிகரிக்கக்கூடியது.. ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கக்கூடியது.
மீனின் தலை: இந்த விரால் மீன் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது.. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் மெல்ல குறைகிறதாம்.. அனைத்து வகை மீன்களைவிட, இந்த விரால் மீனில்தான் கூடுதல் ருசி இருக்கும். மற்ற மீன்களை போல, அந்த ருசி இருக்காது. இது தனித்துவமாக தெரியும். அதனால்தான், எப்போதுமே, இந்த மீனுக்கு மட்டும், டிமாண்டு அதிகமாகவே இருந்துவருகிறது.
சில மீன்களை குழம்பு வைத்தால் நல்லா இருக்கும்.. சில மீன்களை வறுத்தால் ருசியாக இருக்கும். ஆனால், இந்த விராலை எப்படி செய்தாலும் ருசியாகவே இருக்கும்.
சுத்தம் செய்வது எப்படி: இந்த மீனை வாங்கியதுமே, நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். வெறும் கத்தியை வைத்து லேசாக சுரண்டி விட்டு, மீனை வெட்டி விடுகிறார்கள்.. இப்படியே, இந்த மீன்களை சுத்தம் செய்தாலும், அதன்மீது வழுவழுப்பு ஒட்டிக்கொண்டே இருப்பதால், கூடுதல் கவனத்துடன் சுத்தம் செய்ய வேண்டும்.. இந்த வழுவழுப்பு மீது ஒருவகையான துர்நாற்றம் இருக்கும்.. இதை அப்படியே விட்டுவிட்டால், மீனின் ருசியையே கெடுத்துவிடும்..
சுத்தம் செய்யும் முறை: மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இந்த விரால் மீன் வாங்கினால், அதை சுத்தம் செய்வதில், அதிக அளவு கவனம் பயன்படுத்தி, சிமெண்ட் தரையில் தேய்த்து தேய்த்து கழுவுவார்கள்.. அப்போதுதான், அந்த வழுவழுப்பு போய்விடும். எப்போதுமே இந்த விரால் மீன் ருசியாக இருக்க வேண்டுமானால், நன்றாக சுத்தம் செய்தாலே போதும்.
வாயு தொந்தரவு: இந்த விரால் மீனை சாப்பிட்டால் வாயு தொந்தரவு என்பார்கள்.. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது.. விலாங்கு மீன் போன்ற மீன்களில் வேண்டுமானால் வாய்வு தொந்திரவு இருக்குமே தவிர, விராலில், அப்படியில்லை.. ஆனால், எந்த மீன்களையும் அதிகமாக சாப்பிட்டால் வாயு தொந்தரவு வரத்தான் செய்யுமாம்.
நிறைய பேர் இந்த மீனை விரும்ப காரணம், நன்னீர் மீன்களிலேயே சுவையான மீன்கள் இது.. மென்மையானவை.. வட்டத் துண்டுகளாக வெட்டி சீராக சமைக்க முடியும்.. இதில் முட்களும் மிகவும் குறைவு... பொதுவாக, விரால் மீன்கள் வெளிக்காற்றையும் சுவாசிக்கக்கூடியவை.. அதனால்தான், மீன் சந்தைகளில் இந்த மீன் உயிருடனேயே காணப்படும்..
விரால் மீன் குழம்பு: புளியை எடுத்து கரைத்து கொள்ள வேண்டும்.. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், வெந்தயம், சீரகம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், நறுக்கிய பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு, மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து புளிக்கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து கொதிக்க வைத்து, மல்லித்தழை போட்டு இறக்கினால், கிராமத்து ஸ்டைலில் ருசியான மீன்குழம்பு தயார்.
விராலை வறுக்க வேண்டுமானால், இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை., கொத்தமல்லி, மஞ்சள்தூள், மிளகாய்தூள், உப்பு, இவை அனைத்தையுமே மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட விரால் மீனில் இவைகளை தடவி, எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான வறுவல் ரெடி.












Click it and Unblock the Notifications