நாவல் பழம் கொட்டைகள்.. ஆயுசை கூட்டும் அமிர்தவல்லி இலைகள்.. சர்க்கரை நோயாளிகளின் அருமருந்து மூலிகை
சென்னை: நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மூலமாகவே, நீரிழிவு நோயினை எளிதாக கட்டுக்குள் கொண்டுவரலாம்.. இதற்கு எத்தனையோ மூலிகைகளே நமக்கு பேருதவி புரிகின்றன.. அதில் முக்கியமான 2 வகையான மூலிகைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறு குறிஞ்சான் எப்படி உபயோகப்படுகிறதோ அதுபோலவே, ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க நாவல் இலை, அமிர்தவல்லி இலைகள் உதவுகின்றன.

இலைகள்: அமிர்தவல்லி இலைகள் நம்முடைய உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்த்து கொள்ள துணை புரிகின்றன.. இந்த இலைகளில் மட்டுமல்லாமல், அதன் காம்பிலும் ஏகப்பட்ட ஆன்டிஆக்சிடன்ட்கள் அடங்கியிருக்கின்றன.. இந்த இலையை சீந்தில் இலை என்பார்கள்.. இது பார்ப்பதற்கு இதய வடிவில் இருக்கும் கொடி வகையாகும்.
உடற்கழிவுகளையும், பாக்டீரியாக்களையும் வெளியேற்றக்கூடியது இந்த இலைகள். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள அமிர்தவல்லி, உடலிலுள்ள ஃப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.. குடல் மட்டுமல்லாமல், ரத்தத்தையும் சுத்திகரிப்பு செய்கிறது. இதய நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதற்காக இந்த அமிர்தவல்லியை பயன்படுத்துகிறார்கள்..
கட்டுக்குள் வரும்: ஒரு ஸ்பூன் அமிர்தவல்லி இலை பொடியை, ஒரு கப் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன்பு ஊற வைத்துவிட்டு, காலை எழுந்ததும் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்குமாம்.
இதனால், மலச்சிக்கல் தீர்கின்றன.. ஞாபகசக்தியும் பெருகுகின்றன.. அல்லது இந்த இலையுடன், காம்புகள் சேர்த்து ஜூஸ் போல தயாரித்து குடிக்கலாம்.. அல்லது டீ தயாரித்தும் குடிக்கலாம்.. உடல் பலவீனமானவர்கள் இதை குடித்து வரும்போது, எதிர்ப்பு சக்திகள் கூடும். சிறுநீரக தொற்றுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.
நீரிழிவு நோயாளி: அமிர்தவல்லி இலை மற்றும் காம்புகளை நன்றாக தண்ணீரில் அலச வேண்டும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, இந்த இலை, காம்புகளுடன், 2 துண்டு இஞ்சி, 3 துளசி இலைகள், 3 நசுக்கிய மிளகு, அமிர்தவல்லி காம்புகள், குச்சிகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு குடிக்கலாம்.
நம்முடைய உறுப்புகளின் சீரான செயல்பாட்டை நிர்வகிக்கவும், பல புரதங்கள், கொழுப்புகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியும் கல்லீரலை பாதுகாக்க இந்த அமிர்தவல்லி இலை பேருதவி புரிகிறது.
இன்சுலின் சுரப்பு: அதேபோல, நாவல் கொட்டைகளும், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கின்றன.. சர்க்கரை நோயாளிகளுக்கு, நாவல் பழங்களைவிட, இந்த கொட்டைகள்தான் நிறைய பலன்களை தருகிறதாம். இதுகுறித்து ஏராளமான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன..
அதாவது, நாவல் கொட்டை பவுடரை, சாப்பிட்டு வருபவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருந்தது தெரியவந்திருக்கிறது.
கொட்டைகள்: சர்க்கரை நோயாளிகள், இந்த கொட்டையை பதப்படுத்தி, பவுடர் செய்து சாப்பிட்டு வரலாம்.. இந்த பழத்தின் கொட்டைகளை ஒரு வாரம் காயவைத்துவிட்டு, அதை இரண்டாக உடைத்து வெயிலில் காயவிட வேண்டும். இந்த கொட்டையினுள் காணப்படும் பச்சை நிறமும் காய்ந்தபிறகு, மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரில் தினமும் 2 வேளை, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுக்குள் வரும் என்கிறார்கள்.
இயற்கையான மூலிகைகள், சர்க்கரை நோய் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டவை என்றாலும், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே, மருந்தாக உட்கொள்ள வேண்டும்.
கற்றாழை: இந்த லிஸ்ட்டில் கற்றாழை இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.. காரணம், அமெரிக்காவில் உள்ள NCBI (National Center for Biotechnology Information ) ஆய்வின்படி கற்றாழையில் ஹைப்போகிளேசமிக் பண்பு இருப்பதாகவும், இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்றும், கண்டறியப்பட்டுள்ளது.. எனவே, கற்றாழை இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை தானாகவே கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications