வெற்றிலை.. வெற்றியை மட்டுமே தரும் இலை.. ஆண்மை குறைவுக்கு இந்த 5 உணவு போதுமே.. ஆச்சரியம் தரும் 5 கீரை
சென்னை: ஆண்மை குறைபாடுகளை போக்கக்கூடிய எத்தனையோ மருந்துகள் இருந்தாலும், சில உணவுகளையும் தவிர்க்க கூடாது என்கிறார்கள்.. அந்தவகையில், ஆண்களுக்கு உதவக்கூடிய ஒருசில கீரைகளை பார்ப்போம்.
சமீபகாலமாகவே, தவறான பழக்க வழக்கங்கள், ஷவர்மா உள்ளிட்ட துரித உணவுகள் போன்றவை காரணமாக ஆண்மை குறைவு ஏற்படுவதாக டாக்டர்களும் எச்சரித்துவருகிறார்கள்.
தீர்வு என்ன: இதற்கெல்லாம் ஒருசில கீரைகளை, உணவில் சேர்த்து கொண்டாலே போதும்.. அந்தவகையில், வெற்றிலையை எடுத்து கொண்டால், வெறும் ஜீரணத்துக்கு மட்டுமேயல்லாமல், ஆண்மை குறைபாடுகளையும் போக்கக்கூடியது.. வெற்றிலையை அடிக்கடி மென்று சாப்பிட்டு வந்தாலே, வயாகராவுக்கு இணையான சக்தியை பெற முடியும் என்கிறார்கள். விறைப்பு பிரச்சனைக்கு இந்த வெற்றிலை தீர்வு தருகிறது..

வெற்றிலையை இடித்து, அதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் சாறு எடுத்து. தேனுடன் சாப்பிட்டு வந்தாலே விறைப்பு பிரச்சனை சரியாகும். வெற்றிலையில், துளசி வேர்ப்பொடி சிறிது சேர்த்துச் சாப்பிட்டாலும் ஆண்மை அதிகரிக்கும் என்கிறார்கள்.
கருவேலமரம்: கருவேலமர பிசினை எடுத்து கொண்டால், உடல்சோர்வை நீக்குவதுடன், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது.. இந்த பிசினை காயவைத்து, தூள் செய்து, அதை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தாலே உயிரணுக்கள் ஆற்றம் பெறுமாம்,
முருங்கையை எடுத்துக் கொண்டால், முருங்கைக்காய், முருங்கையிலை போன்றவற்றைவிட, முருங்கை பிசின், முருங்கை விதை போன்றவை அருமருந்தாகிறது... முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.
முருங்கை: முருங்கை பிசினில் ஏராளமான சத்துக்களும், வேதிப்பொருள்களும், அமினோ அமிலங்களும், தாது உப்புகளும் அடங்கி உள்ளன.. இந்த பிசின்கள் உடலை வலுப்படுத்தக்கூடியது.. இரும்புச்சத்து உட்பட கால்சியம், வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம் இப்படி பல சத்துகள் உள்ளன.. விந்தணுக்களை அதிகரிக்க செய்ய பிசின் வெகுவாகவே உபயோகிறது.
கல்யாண முருங்கையை எடுத்து கொண்டால், ஆண்மையை பெருக்கும் சக்தி இந்த இலைக்கு உண்டு.. இந்த இலையை நாலைந்து எடுத்து, மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்க வேண்டும்.. பிறகு மாதுளம் ஜூஸில், கசகசா தூளை சேர்த்து, இந்த இலையின் சாறுடன் கலந்து 21 நாட்கள் குடித்தால் ஆண்மை பெருகுமாம்..
அரைக்கீரை : அரைக்கீரையை சுத்தம் செய்து, நெய்யில், சின்ன வெங்காயம் சேர்த்து, கடைந்து சாப்பிட்டாலே ஆண்மை குறைபாடு நீங்க வாய்ப்புள்ளது..
தாளிக்கீரை என்ற வகை கீரையை சமையலில் சேர்த்து கொள்வதே இல்லை.. உடல் சூட்டை தணித்து, குளிர்ச்சியை தரக்கூடியது இந்த தாளிக்கீரை.. காமம் பெருக்கும் வல்லமை படைத்தது.. அதனால்தான், ஆண்மை குறைபாடுகளை போக்குவதற்கு இக்கீரையை பயன்படுத்துகிறார்கள்.. இதைத்தவிர, உள் உறுப்புகளில் ஏற்படும் புண்களை ஆற்றக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு..
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications