மிஸ் பண்ணாதீங்க.. மசக்கை முதல் நுரையீரல் வரை காக்கும் சுக்கு.. சுக்குக்கு மிஞ்சிய மருந்து என்றுமில்லை
சென்னை: சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை என்ற பழமொழியை நம் முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு மருத்துவ நன்மைகள் அதில் உண்டு.
நன்றாக காய வைக்கப்பட்ட இஞ்சியைதான், சுக்கு என்று சொல்கிறோம்.. இது எளிதில் கெடாத உணவுப்பொருள்.. சமையலுக்கும், மருத்துவத்துக்கும், பயன்படக்கூடியது.

செரிமானம்: செரிமானத்துக்கு, இஞ்சியை விட சுக்கு மிகவும் நல்லது.. அஜீரண கோளாறு இருப்பவர்கள், சுக்கு + துளசி இலை சேர்த்து மென்று விழுங்கினாலே, அஜீரணம் நீங்கிவிடும்.. வாந்தி, குமட்டலும் நின்றுவிடும். அதனால்தான், மந்தமாக இருக்கும் குழந்தைகளுக்கு சிறிதளவு சுக்கை அரைத்து தருவார்கள்.. இதனால், குழந்தைகளுக்கு பசியும் நன்றாக எடுக்கும்.
பித்த வாந்தி இருந்தாலும், சுக்குத்தூளை தேனுடன் கலந்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். தலைபாரம், தலையில் நீர் கோர்த்திருந்தால், சுக்குடன் பெருங்காய தூளை சேர்த்து தலையில் தடவினால் நிவாரணம் கிடைக்கும். காரணம், தலையிலிருக்கும் நீரை, இந்த சுக்கு உறிஞ்சிவிடும்.
கழிவுகள்: மலச்சிக்கல் இருப்பவர்கள், சுக்குடன், சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டாலே போதும்.. கழிவுகள், நச்சுகள் வெளியேறி, குடல் சுத்தமாகிவிடும்.. அதேபோல, சுக்குடன் சின்ன வெங்காயத்தை அரைத்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள கிருமிகள்அழியும். .
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சுக்கு பயன்படுத்தலாம்.. இந்த ஒரு வாணலில், மல்லி விதை, மிளகை வறுத்து அரைத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி, அதில், இந்த தூளை சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
அல்லது, ஒரு டம்ளர் தண்ணீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து, தேன் சேர்த்து தினமும் குடித்து வந்தால், தேவையற்ற தொப்பை பகுதிகளிலுள்ள கொழுப்புகள் கரைந்து, உடல் எடையை குறையும்.
விஷ ஜூரம்: இந்த சுக்குப்பொடி, விஷக்கடியையும் விரட்டும், விஷஜூரத்தையும் விரட்டும்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை போன்றவற்றை சேர்த்து கஷாயம் போல குடித்து வந்தாலே விஷஜூரம் பறந்துவிடும்.
அதேபோல, சுக்கு தூள், உப்பு தூள் இரண்டையும் சேர்த்து பல் துலக்கி வந்தால், பல் கூச்சம் நீங்குவதுடன், வாய் துர்நாற்றமும் நீங்குமாம். சுக்கை தட்டிப்போட்டு வெந்நீர் வைத்து தலைக்கு குளித்து வந்தால், நீர்க்கோர்வை, தலைவலி வராது..
வெற்றிலை: சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும். வாதம், மூட்டு வீக்கம் போன்றவற்றிற்கு சுக்கு நல்ல தீர்வினை தருகிறது. சிறுநீர் தொற்று ஏற்பட்டுவிட்டால், பசும்பாலில் சுக்கு தூளையும், நாட்டு சர்க்கரையும் சேர்த்து குடித்தாலே, சிறுநீரக நோய் தொற்று நீங்கிவிடும்.
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பது சுக்கிற்கும் பொருந்தும்.. காரணம், அதிக அளவு சுக்கு பயன்படுத்தினால், வயிற்றுப்போக்கு, நெஞ்செரிச்சல் போன்ற தொந்தரவுகள் வரலாம். அதிலும் அல்சர் பிரச்சனை இருப்பவர்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்று சுக்கு சாப்பிட வேண்டும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications