ரத்த கொதிப்பு அடங்க அரைக்கீரை போதும்.. ரத்த அழுத்தத்தை சீராக்கும் 7 சூப்பர் டிப்ஸ் இதை நோட் பண்ணுங்க
சென்னை: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமானால், உணவில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டியுள்ளது.. அந்தவகையில் என்னென்ன உணவுகள், ரத்த அழுத்த பிரச்சனைக்கு உதவுகிறது என்று பார்ப்போம்.
எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்தாலே போதும்.. பாதி பிரச்சனை தீரும் என்கிறார்கள்.. காரணம், எண்ணெய்யில் பொரித்த உணவில், கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவு உள்ளதால், இது இதய ரத்தக்குழாயின் உள்ளே புகுந்து படிந்துவிடும்.

நாளடைவில் இது அதிகரித்துவிட்டால் , ரத்த அழுத்தம் அதிகரிக்க துவங்கிவிடும். அதனால்தான், அசைவ உணவுகளில் எண்ணெய், உப்பு, காரம் இந்த மூன்றையுமே குறைத்து சாப்பிட சொல்கிறார்கள்.
வாழைப்பழங்கள்: தாது உப்புக்கள், நார்ச்சத்துக்களும், புரோட்டீன்களும் நிறைந்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், சிறுதானியங்கள் போன்றவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.. இதில், அவகேடோ, பொட்டாசியம் நிறைந்த ப்ரோக்கோலி, வாழைப்பழங்களை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். பீட்ரூட், பூண்டு, லெட்யூஸ் இலைகள் போன்றவைகளையும் உணவில் நிறைய சேர்த்து கொள்ள வேண்டும்.
ஆனால், ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்களுக்கு கீரைகள் பெரிதும் கைகொடுக்கின்றன.. அந்தவகையில், முதலாவதாக முருங்கைக்கீரை ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது... ரத்த அழுத்தம் குறைந்தாலும்சரி, ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சரி, இரண்டிற்குமே இந்த முருங்கைக்கீரை பயன்படும்.. முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டாலே, உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும் என்கிறார்கள்.
அரைக்கீரை: அடுத்ததாக, அரைக்கீரையும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த கீரையை சுத்தம் செய்து கழுவி, அதிலிருந்து சாறு எடுத்து, அதில் சீரகத்தை ஊற வைத்து, காயவைத்து தூளாக்கி வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரை தினமும் 2 வேளைக்கு, 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். அதேபோல, ரத்த அழுத்த நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது அகத்திக்கீரை . சத்துள்ள கீரைகளில் அகத்திக்கீரை மிக முக்கியமானது.
சுக்கான் கீரை: அடுத்ததாக, சுக்கான் கீரையை சொல்லலாம். ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதம்.. ரத்த அழுத்தம் சீராக இருந்தாலே, இதயம் காக்கப்படும். அந்தவகையில், உணவில் சுக்கான் கீரையை சாப்பிட்டு வருவது, ரத்த அழுத்த பிரச்சனையிலிருந்து காக்கிறது. அத்துடன் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. வயதாவதால் ஏற்படும் எலும்பு தேய்மானத்தையும், மூட்டுவலியையும் இந்த கீரை தடுக்கிறது.












Click it and Unblock the Notifications