ஒரே பழம்.. வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? நிறைய பழம் சாப்பிட்டா என்னாகும்? செம ஆச்சரியம்
சென்னை: வாழைப்பழம் சாப்பிடுவதால் கெடுதல் ஏற்படுமா? சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய வாழைப்பழம் என்ன தெரியுமா? சாப்பிடவே கூடாத வாழைப்பழம் என்ன தெரியுமா?
சர்க்கரை நோயாளிகளை பொறுத்தவரை, சர்க்கரைச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து சற்று அதிகமாகவும் உள்ள ஆப்பிள், கொய்யாக்காய், பேரிக்காய், சாத்துக்குடி போன்றவற்றை ஒரு நாளைக்கு ஒன்று என்று எடுத்து கொள்ளலாம்..

இதுவே பப்பாளியை எடுத்துக்கொண்டால், முற்றிலும் பழுக்காத, செங்காயாக உள்ள பப்பாளியை, 2 அல்லது 3 துண்டுகள் எடுத்துக் கொள்ளலாம்..அதுவும், ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் மட்டுமே மேற்கண்ட பழங்களை எடுத்து கொள்ள முடியுமாம்.
ஆனால், வாழைப்பழங்களை சாப்பிடும்போது, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும்... எனவே, இதை தொடர்ந்து சாப்பிடும்போது, டைப் 2 டயாப்பட்டீஸ் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம் உண்டு.
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன.. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் மட்டும், மனித உடலுக்கு சக்திவாய்ந்த எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்ய, ஒரு நாளைக்குத் தேவைப்படும் பொட்டாசியத்தின் அளவில் 11 சதவிகிதம் உள்ளது என்கிறார்கள்.
ஒரு சாதாரண சைஸ் வாழைப்பழத்தில் 105 கலோரிகள் இருக்கிறதாம்.. அதனால்தான், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பதால், பலரும் வாழைப்பழத்தை தவிர்த்து விடுகிறார்கள்.
நரம்பு பிரச்சனை: மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றைத்தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்ற சுரப்பி காரணமாக உள்ளது.. நிறைய வாழைப்பழம் சாப்பிட்டால் இந்த சுரப்பி சுரக்குமாம்.. வாழைப்பழத்திலுள்ள டைரோசின் அமினோ அமிலம் ஒற்றை தலைவலியை தூண்டக்கூடியது என்பதால், கண் நரம்பு பிரச்சனை இருப்பவர்கள் அதிக பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
அதேபோல, நம்முடைய ரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் இருந்தாலும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.. அலர்ஜி உள்ளிட்ட வயிறு உபாதைகளும் வரலாம்.. வாழைப்பழத்தில் நிறைய ஸ்டார்ச் இருப்பதால் பல் சொத்தைகளும் வந்துவிடும்.
வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோபான் மற்றும் அமினோ ஆசிட்கள், மூளையின் செயல்பாடுகளை மழுங்க செய்துவிடும்.. இதனால் தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளும் வந்துவிடும்.. அதனால்தான், காலை நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடகூடாது என்பார்கள்.
வாயு பிரச்சனை: வாழைப்பழத்திலுள்ள நார்ச்சத்துகள் வாயு பிரச்சனை மற்றும் வயிறு வீக்கத்தை தந்துவிடும்.. இதிலுள்ள அளவுக்கதிகமான மாவுச்சத்து, செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்து கொள்ளும்.. வாழைப்பழத்தில் விட்டமின் B6 நிறைய உள்ளதால், நரம்புகளையும் பாதிக்கக்கூடும். ஏனவே தான், அதிக வாழைப்பழம் சாப்பிடக்கூடாது என்பார்கள்.
அதேபோல, வெறும் வயிற்றிலும் வாழைப்பழம் சாப்பிடக்கூடாதாம்.. காரணம் இதில் அமிலத்தன்மை உள்ளதால், குடல் இயக்கங்களை பாதிப்படைய செய்யக்கூடும்... வேண்டுமானால் மற்ற பழங்களுடன் சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications