முட்டைகோஸ்.. தலை முதல் கால் வரை ஆச்சரியம்.. முட்டைகோஸில் இத்தனை நன்மையா? உடல்எடை அசால்ட்டா குறையும்
சென்னை: எல்லா காய்கறிகளுமே உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், உடல் எடை குறைப்பதில் ஒரு சில காய்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதில் ஒன்றுதான் முட்டைகோஸ்.
முட்டைக்கோஸில் வைட்டமின் B5, B6, B1 பி-5 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன... இதைத்தவிர, ஏகப்பட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.

குடல் ஆரோக்கியம்: குடலுக்கு நன்மை தரக்கூடியது இந்த முட்டைகோஸ்.. குடல்புண்களை ஆற்றக்கூடியது.. அல்சர் இருப்பவர்கள், முட்டைக்கோஸ் ஜூஸ் குடித்து வந்தாலே அல்சர் தீரும்.. கண்களை பேணிகாக்கக்கூடியது இந்த காய்.. கண்புரையிலிருந்து நம்மை காக்கக்கூடியது.. கண் நரம்புகளை பலப்படுத்தக்கூடியது..
எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் இந்த காய், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பலன்தரத்தக்கது. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.. அதுமட்டுமல்ல, முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் செல்களும் அழிந்துவிடுகிடுன்றவாம். வெள்ளை, சிவப்பு, பச்சை, ஊதா என பல நிறங்களில் முட்டைகோஸ் கிடைத்தாலும், அத்தனையும் நன்மை தரக்கூடியது.
காய்கறிகள்: கல்லீரலை காக்கக்கூடிய காய்கறிகளில் முதன்மையானது இந்த முட்டைகோஸ்.. காரணம், அதிகமாக மதுஅருந்துபவர்களுக்கு கல்லீரலில் பாதிப்பு இருக்கவே செய்யும்.. நிறைய விஷத்தன்மைகள் கல்லீரலை சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்டிருக்கும்.
இந்த விஷத்தன்மையை நீக்கும் ஆற்றல், முட்டைக்கோசுக்கு உண்டு.. அதனால், முட்டைகோஸை சமையலில் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும். அல்லது, இந்த முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரையாவது குடித்து வர வேண்டும்.
முட்டைகோஸிலுள்ள வைட்டமின் K, எலும்புகளின் வளர்ச்சிக்கும், எலும்பு தேய்மான பிரச்சனையை தடுப்பதற்கும் உதவுகிறது. முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால், வாய்ப்புண்கள், வாய் துர்நாற்றம், பல் வலி, ஈரல் வலி போன்றவை நீங்கும்.. முட்டைகோஸ் வேகவைத்த தண்ணீரில், நிறைய புரோட்டீனும், கோலாஜினும் உள்ளதால், வெறுமனே இந்த தண்ணீரை குடிக்கலாம்..
சரும பாதுகாப்பு: அதேபோல, தலைமுடிக்கும், சருமத்துக்கும் பயன்படுத்தலாம்.. அரை ஸ்பூன் தேனில், இந்த தண்ணீரையும் சேர்த்து கலந்து முகத்தில் 20 நிமிடம் தேய்த்து கழுவி வந்தால் கரும்புள்ளி, முகப்பருக்கள் மறையும். சருமம் பொலிவுபெறும்.
இவை அத்தனையும் இருந்தாலும், உடல் எடையை குறைப்பதில் முட்டைகோஸ் முதன்மையான காயாக உள்ளது.. காரணம், ஏகப்பட்ட நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் இந்த காயில் அதிகம் உள்ளன.. எனவே, மலச்சிக்கலை தீர்த்து, குடல் இயக்கத்தை சீராக்குகிறது.. கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கிறது..
கொழுப்பு சத்து: கொழுப்பு குறைவாக உள்ளதால், தாராளமாக இந்த காயை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஆனால், சமைக்கும்போது நிறைய தண்ணீரில் சமைக்கக்கூடாது.. அதேபோல, ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் சாப்பிட்டால், உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.












Click it and Unblock the Notifications