ஒரே ஒரு கொய்யாவில் ஓராயிரம் அற்புதம்.. இந்த "பச்சை சட்னி" ட்ரை பண்ணுங்க.. சர்னு வெயிட் குறையுதாமே
சென்னை: கெட்ட கொழுப்புகளை குறைக்கக்கூடிய கொய்யா இலைகளை, எப்படியெல்லாம் உணவில் பயன்படுத்தலாம் தெரியுமா? கொய்யா இலை சட்னி தெரியுமா?
கலோரிகள் மிகவும் குறைவான கொய்யா பழங்களை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரு கொய்யா மட்டுமே 37 முதல் 55 கலோரிகள் மட்டுமே இருக்கிறதாம். அதனால்தான், உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்கள், இந்த கொய்யாவை தவறாமல் டயட்டில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

கொய்யா இலைகள்: அதுபோலவே, கொய்யா இலைகளை, வெறுமனே தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம்.. அல்லது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில் சிறிது இஞ்சியையும் தட்டி போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால், உடல் எடை இன்னும் வேகமாக குறையும் என்கிறார்கள்.
அல்லது கொய்யா இலையிலிருந்து சாறு எடுத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை குறையுமாம்.. அல்லது கொய்யா இலை + புதினா இலை இரண்டையும் இரவில் நீரில் போட்டுவைத்துவிட்டு, மறுநாள் காலையில் இந்த நீரை மட்டுமே குடித்து வரலாம்.. இந்த இலைகளை சுடுநீரில் சேர்த்து கொதிக்க வைத்து, அதில் தலைக்கு குளித்து வந்தால், தலையிலுள்ள பொடுகு நீங்கும்.
முக சுருக்கங்கள்: கொய்யா இலைகளை காயவைத்து பவுடராக்கி, அதில் சிறிது தண்ணீரும் கலந்து முகத்தில் பேக் போல தடவி கழுவிவந்தால் முகச்சுருக்கங்கள் மறையும்... அல்லது கொய்யா இலைகளுடன் சிறிது ஒரு மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாகும்.. அல்லது, வெறுமனே கொய்யா இலையை அரைத்து முகத்தில் பூசி வந்தாலும் முகம் பொலிவாகும்.
தினமும் 2 கொய்யா இலைகளை மென்று துப்பினாலே, பற்களில் உண்டாகும் கறைகள் நீங்கும். கொய்யாவிலுள்ள ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் ஈறுகளில் உண்டாகும் வீக்கம், பற்களில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்கிறது.
உடல் எடை: உடல் எடை குறைய முயற்சிப்பவர்கள், இந்த கொய்யாவை வைத்து சட்னி போல செய்து சாப்பிடலாம். இதற்கு 4 கொய்யா, ஒரு கொத்து கொத்தமல்லியை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

கொய்யாவை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு மிக்சி ஜாரில், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய கொய்யா காய், கொத்தமல்லி இலைகள், உப்பு என அனைத்தையும் சட்னி பதத்துக்கு அரைத்து எடுக்க வேண்டும். இறுதியில், கடுகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டினால் கொய்யா சட்னி ரெடி.
சர்க்கரை நோயாளி: இந்த சட்னியையே வேறுவிதமாகவும் செய்யலாம்.. கொய்யாக்காயை துண்டுகளாக நறுக்கி வேகவைத்து எடுத்து ஆறவைத்துக்கொள்ள வேண்டும்...
ஒரு கடாயில் எண்ணெய், சீரகம், உளுந்து சேர்த்து, வெங்காயம், பச்சை மிளகாய், புளி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். இப்போது, வேகவைத்துள்ள கொய்யாக்காய், வதக்கி வைத்துள்ள கலவைகளை ஒன்றாக மிக்சியில் அரைத்தால், சட்னி ரெடி. சர்க்கரை நோயாளிகளுக்கும், உடல் எடை குறைப்பவர்களுக்கும் இந்த கொய்யா சட்னி நல்லது.












Click it and Unblock the Notifications