குண்டு குண்டா இருக்கிற உடம்பை.. ஸ்பீடா கரைத்து குறைக்கும் கீரை.. இந்த கீரையை மட்டும் விடவே விடாதீங்க
சென்னை: வெறும் கீரைகளை சாப்பிட்டே உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம் என்கிறார்கள்.. இதற்கு சில கீரைகளின் பண்புகளும் தூண்டுகோலாக இருக்கின்றன.
உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அத்தனை சத்துக்களும் இருப்பதால்தான், தினமும் ஏதாவது ஒரு கீரையை சாப்பிடுவது நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

கீரைகள்: அதேசமயம், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், உடலிலுள்ள கழிவுகளை, நச்சுக்களை அகற்றி, உடல் எடையை குறைக்கவும், இந்த கீரைகள் அருமருந்தாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம், கீரையில் மிக குறைந்த அளவு கொலஸ்ட்ரால் உள்ளன.. இதற்கு மாறாக, நியாசின், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகமாக காணப்படுகின்றன..
பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் A, C, E, K, B6, ஃபோலேட், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இத்தனை சத்துக்களும் தனித்தனி காய்கறி, பழங்கள், தானியங்களில் மட்டுமே கிடைக்குமே. ஆனால், ஒரே ஒரு கீரையில், இத்னை சத்துக்களும் அடங்கியுள்ளன.
கொலஸ்ட்ரால்: இதில் கீரைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைய உள்ளதால், கொலஸ்ட்ரால் அளவும் குறைகிறது.. பெரிய நோய்கள் எதுவுமே உடலை தாக்காமல் தடுக்கின்றன.. முக்கியமாக இதயம் பாதுகாக்கப்படுகிறது.. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், மலச்சிக்கல் தீர்கின்றன.. இதனால் குடலின் ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. அந்தவகையில் குறைவான கொலஸ்ட்ரால், நிறைவான நார்ச்சத்து போன்றவைதான், உடல் எடை குறைக்க பேருதவி புரிகின்றன..
அதேசமயம், சில வகை கீரைகள் உடல் எடையை குறைக்க தூண்டுகோலாக இருக்கின்றன. அதில் முக்கியமானது முருங்கைக்கீரை.. கீரைகளில் தலையானது என்று சொல்லப்படும் முருங்கைக்கீரையை எப்படி சாப்பிட்டாலும் நன்மைகளையே தரும்.. உடல் எடை எளிதாக குறையும்.
கறிவேப்பிலை: அடுத்தபடியாக கறிவேப்பிலைகள் மிகுந்த பலனை தருகின்றன.. வெறும் வயிற்றில் நான்கைந்து கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டாலே, உடலில் தேங்கிக்கிடக்கும் அதிகப்படியாக கொழுப்பை கரைகிறது.. உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
அதேபோல, ஓமவல்லி இலையையும் தவிர்க்க கூடாது. 8 ஓமவல்லி இலை, 8 புதினா இலைகளை நன்றாக கழுவி, நான்கைந்து ஸ்பூன் தயிர், சிறிது எலுமிச்சம் சாறு, ஒரு துண்டு இஞ்சி சேர்த்து, தண்ணீர் ஊற்றி அரைத்து குடித்தாலே உடல் எடையில் மாற்றம் தெரிய துவங்குமாம். பாலக்கீரையை பொறுத்தவரை சிறப்பு என்னவென்றால், மிக குறைவான கலோரிகளே உள்ளதால், உடல் எடையைக் குறைக்க துணை புரிகிறது. அதாவது, 100 கிராம் பசலைக்கீரையில் 26 கலோரிகள் உள்ளதாம்.
வல்லாரை: வல்லாரை கீரைகளில் உள்ள ஊட்டச்சத்துக்களும், பண்புகளும், எடையை குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள கூடுதல் கொழுப்பைக் குறைப்பதில் இந்த கீரைக்கும் பங்குள்ளது. இந்த கீரையின் இலைகளை சுத்தம் செய்து, விழுதாக அரைத்து, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் அல்லது பாலில் கலந்து குடித்தாலே, உடலிலுள்ள கொழுப்புகளும் குறைய ஆரம்பித்து, உடல் எடை குறைய துவங்குமாம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications