கெட்ட கொழுப்பை கரைக்கும் நுங்கு.. சூப்பர் பனை நுங்கு.. வயிறு புண்கள் முதல் புற்றுநோய் வரை தடுக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெயிலில் தாகத்தை தீர்த்து, குளிர்ச்சியை தரக்கூடியவை நுங்கு.. ஆனால், இந்த ஒரே காரணத்தை வைத்தே பலரும் நுங்குவை ஒதுக்கிவிடுகிறார்கள். உண்மையை சொல்லப்போனால், பெண்களுக்கு நுங்குவை போல அருமருந்து வேறில்லை. எப்படி தெரியுமா?.

கோடை காலத்தில் அம்மை நோய்களை தடுக்க இந்த நுங்கு உதவுகிறது.. நுங்கின் நீரை தடவினாலே வேர்க்குருகள் மறையும். வேர்க்குரு, கொப்புளங்கள், தோல் நோய்களை நுங்கு சரி செய்யக்கூடியது. ஆனால், இளம் நுங்கின் தோல்களை சீவிவிடக்கூடாதாம்.. மேல்தோலை நீக்காமல் சாப்பிடுவது பூரண நலனை தரும்..

Nungu Palm fruit Nungu benefits

சத்துக்கள்: உடல் உஷ்ணத்தை போக்கக்கூடிய நுங்குகளை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இன்னும் அதிகமான ருசியும், குளிர்ச்சியும் உடலுக்கு கிடைக்கும். நுங்குவை பொறுத்தவரை கோடைக்காலம் என்று மட்டுமில்லை, எக்காலமும் தேடி விரும்பி சாப்பிடக்கூடியது. இந்த நுங்கில் B வைட்டமின், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் என சத்துக்கள் நிறைந்துள்ளன.

அதேபோல, கல்லீரல் பிரச்சனை இருந்தாலும், செரிமானம், அசிடிட்டி பிரச்சனை இருந்தாலும், தாராளமாக நுங்குகள் சாப்பிடலாம்.. குறிப்பாக கர்ப்பிணிகள் இந்த நுங்கை எடுத்துக்கொண்டால் செரிமானம் சீராகி, அசிடிட்டி பிரச்சனை தீரும்.

வயிறு புண்கள்: மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற வயிறு கோளாறுகளை இந்த நுங்கு சரிசெய்துவிடும்.. வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்துதுமே, இரண்டு அல்லது மூன்று நுங்கு சாப்பிட்டால், மலச்சிக்கல் தீரும்.. குடல் புண்கள் இருந்தாலும் ஆறிவிடும். வயிறு புண், வாய்ப்புண்களால் அவதிப்படுபவர்கள், நுங்கை அரைத்து, தேங்காய்ப் பால் சேர்த்து குடிக்கும்போது, அல்சர், வயிற்றுப்புண் உபாதைகள் தீரும்.

மிகவும் குறைவான கலோரியும் அதிகமான நீர்ச்சத்தும் நுங்கில் காணப்படுகின்றன. மேலும் நுங்கை சாப்பிட்டதுமே வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கிறது.. இதுபோன்ற பண்புகள்தான், உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பேருதவி புரிகிறது.

கெட்ட கொழுப்புகள்: இதுமட்டுமல்லாமல், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மை இந்த நுங்குக்கு உள்ளது.. இதில், பனை நுங்குகள், உடல் எடையை குறைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. உடற்பயிற்சி செய்பவர்களும், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கு தேவையான அத்தியாவசியமான சத்துக்கள் இந்த நுங்கில் உள்ளது.

ஏராளமான பெண்கள் ஹீமோகுளோபின் பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் நுங்கு ஒரு வரப்பிரசாதமாகும்.. நுங்கு சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்த சோகை வருவதில்லை.

ஊட்டச்சத்து: இந்த நுங்கில் சுக்கு, மிளகு, கருப்பட்டி போன்றவற்றை கலந்து, குழந்தை பெற்ற தாய்மார்கள் சாப்பிடும்போது, தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.. குழந்தைக்கும் இதன்மூலம் ஊட்டச்சத்து கிடைக்கும்.. வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், இந்த நுங்கினை பெண்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்..

அதேபோல, பெண்களை பெருமளவு தாக்கக்கூடிய மார்பக புற்றுநோய் கட்டிகளை இந்த நுங்கு முன்கூட்டியே தடுக்கிறதாம்.. காரணம், நுங்கிலிருக்கும் "அந்த்யூசைன்" என்ற ரசாயனம், மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.. இந்த வகையான புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் ஆன் தோசயனின் என்ற வேதிப்பொருரும் இதே நுங்கில் நிறைந்திருக்கின்றன..

புற்றுநோய் செல்: இந்த ஆன் தோசயனின் என்ற வேதிப்பொருள், புற்றுநோய் செல்கள் மற்றும் அது உருவாக்கும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.. எனவே, நுங்குகளை பெண்கள் அடிக்கடி சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

வெயில் காலத்தில், கண்கள் சிவந்து போய் காணப்பட்டால், இந்த நுங்கு சாற்றில், மெல்லிய பருத்தி துணியை நனைத்து, கண்களில் மேல் பற்றாக வைக்க வேண்டும். இதனால், சிவப்பு தன்மை நீங்குவதுடன், கண் சோர்வு சரியாகும். கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும்..

கர்ப்பிணிகள்: சர்க்கரை நோயாளிகளும் நுங்கு சாப்பிடலாம்... இதனால், உடலில் ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்குமாம்.. ஆனால், யாராக இருந்தாலும், எப்போதுமே நுங்கினை காலை உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டும். நண்பகல் வேளைக்கு பிறகு தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.. இந்த நுங்குகள் பக்கவிளைவுகளை ஏற்படாது என்றாலும், மிதமான அளவு சாப்பிடுவதே ஆராக்கியம்.. ஆனால், டாக்டர்களின் பரிந்துரையுடன் கர்ப்பிணிகள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+