ஓமவள்ளி.. அற்புத கற்பூரவல்லி.. முசுமுசுக்கை இலை ஒன்று போதுமே.. சுவாச கோளாறுகள் ஓடிப்போயிரும்.. அருமை
சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்ட நிலையில், பல்வேறு மழைக்கால நோய்கள் மக்களை தாக்க துவங்கிவிட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் நமக்கு கை கொடுத்து உதவக்கூடியது 2 வகையான இலைகள். ஒன்று, ஓமவள்ளி, மற்றொன்று முசுமுசுக்கை இலைகள்.
முசுமுசுக்கை இலையை எடுத்துக் கொண்டால், இதன் தலையாய பணியே, கப நோய்களிலிருந்து நம்மை காப்பதுதான். நோய் எதிர்ப்பு சக்தியுடன், புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் C போன்ற சத்துக்களை தரக்கூடியது. அதிக சளி, காசநோய், நீர்க்கோவை, போன்ற பிரச்சனை சரி செய்யக்கூடியது இந்த முசுமுசுக்கை இலைகள்.

நெஞ்சு சளி: நெஞ்சிலுள்ள சளியை இலகச்செய்து, அதை கோழையாக்கி வெளியே தள்ளும் திறன் கொண்டது.. அதேபோல, தொண்டையில் உள்ள சளி, சுவாசக்குழாயில் படிந்துள்ள சளியையும் நீக்கக்கூடியது. இந்த முசுமுசுக்கை கீரையைவிட, இந்த கீரையின் வேரை கஷாயமாக்கி குடித்தால் கூடுதல் சிறப்பு கிடைக்கும்.
அதேபோல, இந்த முசுமுசுக்கை இலையையும், தூதுவளை இலையையும் சரிசமமாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். தினமும் அரை டீஸ்பூன் அளவு வெண்ணெய்யில் கலந்து 2 மண்டலங்கள் சாப்பிட்டு வந்தாலே, ஆஸ்துமாவால் வரும் தொந்தரவுகள் நீங்கு.. அல்லது முசுமுசுக்கை இலையை, பொடிப்பொடியாக நறுக்கி, வெங்காயம் சேர்த்து வதக்கி நெய் கலந்தும் சாப்பிடலாம்.
முசுமுசுக்கை: சளி, கோழை, தும்மல், குறட்டை உட்பட சுவாசம் சம்பந்தப்பட்ட அதாவது நுரையீரலுடன் தொடர்புடைய அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வாக உதவுகிறது. ஆஸ்துமா நோயின் ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள், இந்த கீரையை உணவில் சேர்த்துவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.. முழுமையாகவும் குணமடையவும் வாய்ப்புண்டு என்கிறார்கள். சைனஸ் பாதிப்பு இருப்பவர்கள் நோய் தீவிரமாகாமல் தடுக்க உதவுகிறது.
அடுத்ததாக, ஓமவள்ளி இலைகளை எடுத்துக்கொண்டால், நுரையீரலின் நண்பன் என்றே சொல்லலாம்.. இதை கற்பூரவல்லி இலை என்றும் சொல்வார்கள்.. வைட்டமின் C, A, B6 சத்துக்கள் நிறைந்துள்ளன.. இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்றவையும் அடங்கி உள்ளன.
ஓமவள்ளி: நோய் எதிர்ப்பு சக்தி அதிகமான இந்த இலைகள், நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைக்கும், மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது.. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்று போல போட்டால், ஜலதோஷம், தலைவலி நீங்கும். இந்த சாற்றினை சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சளி, இருமல் பிரச்சனை தீரும்.. மார்பு சளி கட்டுக்குள் வரும்.
அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
ரசம் - சூப்: ஓமவள்ளி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும். ஓமவள்ளி இலையில் ரசம் அல்லது சூப் வைத்து சாப்பிடலாம். தொண்டை வலி அதிகமாக இருந்தால், இந்த இலைகளை, எண்ணெய்யில் பொரித்து, அந்த எண்ணெய்யை மட்டும் தொண்டையில் தடவி வந்தால் போதும்.. எளிதில் நிவாரணம் கிடைக்கும்.

இந்த ஓமவள்ளியில் டீ போட்டு குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் டீ தூள், சிறிது இஞ்சித் துருவல், ஓமவல்லி இலைகள் நான்கைந்து சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு வடிகட்டி தேவையான அளவு தேன் விட்டு குடித்தால், சுவாச கோளாறுகள் ஆரம்ப கட்டத்திலேயே மட்டுப்படும்.
லேகியம்: அதேபோல, ஓமவள்ளியில் லேகியம் போல செய்து வைத்து கொண்டாலும், மழைக்காலத்தில் பலன் தரும்.. முதலில், மிளகு, லவங்கத்தை வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு, ஓமவல்லி, துளசி, இஞ்சியை விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலை நெய், அரைத்த விழுது, அரைத்த பொடி போன்றவற்றை நன்றாக கலக்க வேண்டும். இது ஆறியதுமே, தேன் சேர்த்து கொண்டால், லேசியம் தயாராகிவிடும். இந்த லேகியம் ஜீரண கோளாறையும் நீக்கக்கூடியது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications