வாரந்தோறும் சால்மன் மீன்.. வளரும் பிள்ளைக்கு சால்மன் மீன்கள் நல்லது.. இதய நோயை விரட்டும் பெஸ்ட் மீன்
சென்னை: மீன்கள் என்றாலே மருத்துவ நன்மைகளை தரக்கூடியது என்றாலும், இதில் சால்மன் மீன்கள் மட்டும் சற்று ஸ்பெஷலானது.. ஏன் தெரியுமா?
சால்மன் மீன்கள் எப்போதுமே நன்னீர் ஓடைகளில் குஞ்சுகளை பொரிக்கும்.. இந்த குஞ்சுகள் பெரிதான பிறகு, அவை கடலுக்கு இடம் பெயர்க்கப்பட்டு, மீனாக மாறுகிறது... மறுபடியும் இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிக்கும்போது நன்னீருக்கு கொண்டுவரப்படுகிறது.

சால்மன் மீன்: சால்மன் மீன்களில் எத்தனையோ வகைகள் உண்டு என்றாலும், பசிபிக், அட்லாண்டிக் பகுதியை காணப்படும் மீன்கள் தான் உண்மையான சால்மன் மீன்கள் ஆகும்.. இதற்கு காலா மீன் என்கிறார்கள். கிழங்கான் மீன் என்றும் சொல்வார்கள்.
இந்த சால்மன் மீன்களில் உள்ள சத்துக்களை அளவிட முடியாது.. ஆனால், இதில், புரதம் அதிகமாக உள்ளதால், லீன் மீட் என்று சிறப்பு பெயர் இந்த மீனுக்கு உண்டு.. அதாவது, 100 கிராம் சால்மனில் 22-23 கிராம் அளவுக்கு புரதம் இருக்கிறதாம். இந்த சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B1, B2, B3, B5, B12 வைட்டமின்கள், செலினியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சத்துக்கள்: சால்மன் மீனில் உள்ள வைட்டமின் D சத்துக்கள், எலும்புகள், பற்கள், தலைமுடி ஆரோக்கியத்துக்கு தூண்டுகோலாக இருக்கிறது.. இதனால், சிலவகையான புற்றுநோய்கள் வராமல் தடுக்கக்கூடிய தன்மையும் உள்ளதாம்.
இந்த சால்மனில் உள்ள பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினியம் தாதுக்கள், இதயம், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது. குறிப்பாக, இந்த செலினியம் சத்துக்கள்தான் தைராய்டு நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறதாம்.
சரும பாதுகாப்புக்கும், சரும பளபளப்புக்கும் அடித்தளமாக அமையக்கூடிய கொழுப்பு நிறைந்த மீன்களில் மிக முக்கியமானவை இந்த சால்மன் எனப்படும் கிழங்கான் மீன்கள்.. இதில், ஒமேகா 3 மட்டுமல்லாமல், புரோட்டீனும் அதிகமாக உள்ளது.. அதனால்தான் மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடிய இந்த சால்மன் மீன்களை, வளரும் பிள்ளைகளுக்கு அடிக்கடி உணவில் தர சொல்கிறார்கள்..
நரம்பு மண்டலம்: நரம்பு மண்டலத்தை இந்த சால்மன் மீன் பலப்படுத்துவதுடன், சருமத்தையும் சேதமில்லாமல் காக்கிறது.. தோலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.. மூட்டுகள் பிரச்சனைகளை இந்த சால்மன்மீன் சரிசெய்கிறது.. அத்துடன் உதவுகிறது. நிறைய ஆய்வு முடிவுகளின் படி , ஒமேகா 3 உட்கொள்ளுவதால் இருதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், மனஅழுத்தத்தினால் பாதிக்கப்படுவர்கள் இந்த மீனை அடிக்கடி சாப்பிடலாம்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications