வெயிட் லாஸூக்கு மூக்குடலை போதுமே.. பெண்களுக்கு ஆச்சரிய நன்மைகள்.. கருப்பு மூக்கடலையின் ஸ்பெஷாலிட்டி
சென்னை: கல்லீரல் நோயை அண்டவிடாமல் செய்வதில் மூக்கடலையின் பங்கு அதிகமாகும்.. கருப்பு மூக்கடலை தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
மூக்கடலையை கொண்டைக்கடலை என்று சொல்வார்கள்.. புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் என அத்தனை சத்துக்களும் அடங்கியதுதான் சென்னா என்ற இந்த மூக்கடலை.

நார்ச்சத்துக்கள்: இத்தனை சத்துக்கள் இருந்தாலும், பிரதானமாக உள்ளது நார்ச்சத்துக்கள்தான்.. அதாவது ஒரு கப் கொண்டைக்கடலையில் 12.5 கிராம் நார்ச்சத்து உள்ளதால்தான், அனைவருக்கும் ஏற்ற உணவாக இந்த மூக்கடலை உள்ளது.
நார்ச்சத்து அதிகம் என்றாலே, உடல் எடையை வெகுவாக குறைத்துவிடும் தன்மை கொண்டது இந்த சென்னா.. அதுவும் சிறிய அளவிலான கறுப்பு கொண்டைக் கடலையில் நிறைய நார்ச்சத்து இருக்கிறதாம். வெறுமனே வேகவைத்து சாப்பிடாமல், இந்த கடலையை முளைக்கட்டி சாப்பிடும்போது, உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பு வெகுவாக கரைந்துவிடும்.
புரோட்டீன்: வெள்ளை மூக்கடலையிலும் கொழுப்பினை குறைக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன.. அதேசமயம், வெள்ளை மூக்கடலையைவிட, கருப்பு மூக்கடலையில் புரோட்டீன் சத்தும் அதிகம் என்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், கருப்பு மூக்கடலயையே தேர்ந்தெடுக்கலாம்.
புரோட்டீன் நிறைய இருக்கிறது என்பதால், தலைமுடி வளர்ச்சியும் அபாரமாக இருக்கும். அத்துடன்முகத்தில் ஏற்படும் சுருக்கத்தையும் நீக்கி, சருமத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த மூக்கடலை, தலைமுடிக்கு மட்டுமல்லாம்ல பளபள சருமத்துக்கும் ஆரோக்கியத்தை தருகிறது.
ரத்தசோகை: அனீமியா பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கைகொடுத்து உதவக்கூடியது இந்த சென்னா.. இதனை வேகவைத்தோ, அல்லது, அரைத்து, பாலில் கலந்தோ சாப்பிட்டு வரும்போது, ஹீமோகுளோபின் தொந்தரவிலிருந்து விடுபடலாம்.. பயிறுகள் பெரும்பாலும் கால்சியம் இருக்கும் என்றாலும், இந்த மூக்கடலையில் கூடுதல் கால்சியம் உள்ளது. எனவே, எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவாகவும் இந்த சென்னா உள்ளது.. கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதுடன், டைப் 1 சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தையும் இந்த மூக்கடலை குறைக்கிறதாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று, குறிப்பிட்ட அளவில் இதனை சாப்பிட்டு வரலாம்.
புற்றுநோய்: ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், குடல் கேன்சரை தடுக்கக்கூடிய தன்மை இந்த மூக்கடலைக்கு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.. அதேபோல, மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராடக்கூடியது இந்த கொண்டைக்கடலை.
இத்தனை மருத்துவ குணங்கள் இருந்தாலும், மூக்கடலையை அதிகமாக சாப்பிடக்கூடாது.. அதேபோல இரவு நேரத்தைவிட, காலையில் சாப்பிடும்போது, எளிதில் ஜீரணமாகும்.. ஆனால், சிறுநீரகக்கோளாறு இருப்பவர்கள், வாத நோய் இருப்பவர்கள், மூல நோயால் அவதிப்படுபவர்கள், மூக்கடலயை தவிர்க்க வேண்டுமாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications