பனம்பழத்தின் பயன்கள்.. சிறுநீரக கோளாறு முதல் சரும நோய் வரை தீர்க்கும் பனம்பழம் சாறு.. பவர்ஃபுல் ஜூஸ்
சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குள் உண்டுபண்ணி சரும நோய்களை சரிசெய்யக்கூடிய பழம் உண்டென்றால் , அது பனம்பழம்தான்.
இது ஒரு சீசன் பழமாகும்.. நுங்கு பல நன்மைகளை தருகிறது என்றாலும், அதன் முற்றிய காய் பனம்பழமாக மாறுகிறது... உயிர்ச்சத்துக்கள் நிறைந்தது இந்த பனம்பழம்..

பனம்பழத்தில் பப்பாளி, மாம்பழத்தைவிட கூடுதலாக வைட்டமின் C, கால்சியம் சத்துக்கள் அதிக அளவு உள்ளன.. முக்கியமாக பார்வைத்திறனை அதிகரிக்கும் பீட்டா கரோட்டின் எனும் வைட்டமின் A சத்துக்கள் இந்த பழத்தில் நிறையவே உள்ளன.
உயிர்ச்சத்துக்கள்: கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, சர்க்கரை, நார்ச்சத்து, புரோட்டீன், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், வைட்டமின் B6 போன்றவை நிறைந்திருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பழமாக திகழ்கிறது.. நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய பழமாக உள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியதுடன், மிகக்குறைந்த அளவு கலோரிகளையும் அதிக அளவு பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்களையும், கொண்டுள்ளது இந்த பழம்.. கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்புகள் வளர்ச்சிக்கு தூண்டுகோலாகிறது..
நீர்ச்சத்துக்கள்: நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையை அடியோடு போக்குகிறது. உடலில் உள்ள கழிவுகளையும் நச்சுக்களையும் அகற்றி, குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பனம்பழத்தின் பங்கு அபரிமிதமானது. அதனால்தான், வயிறு தொடர்பான நோய்களை குணப்படுத்தவும், அந்த நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும், பனம்பழங்கள் மருந்தாகின்றன.
சர்க்கரை நோயாளிகளும் இந்த பழத்தை சாப்பிடலாம்.. அஜீரண கோளாறுகள் இருந்தால், பனம்பழத்துடன் சிறிது வெல்லம் வைத்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். பப்பாளியில் உள்ளதைவிட வைட்டமின் C அதிகமாக உள்ளதால், சருமத்துக்கு பளபளப்பையும், பொலிவையும் தருகிறது. ஆண்களின் குறைபாட்டை, பனம்பழங்கள் போக்க உதவுகிறது.. பழுத்த பனம்பழத்தை சாப்பிட்டு வருவதால், விந்து அளவு அதிகமாகும் என்கிறார்கள்.. சிறுநீரகத்திற்கு பனம்பழங்கள் சிறந்தது..
சிறந்த பானம்: பனம்பழத்திலிருந்து எடுக்கப்படும் சாறு, பல்வேறு வகைகளில் நமக்கு உபயோகமாகின்றன.. பனம்பழச்சாறு தயாரித்து ஸ்குவாஷ் போல தயாரித்து வைத்து கொண்டால், வெயில் காலத்துக்கு சிறந்த பானமாக உதவும்.. அல்லது இந்த பழத்தின் சாறுகளை, மாவுகளில் சேர்த்து பிசைந்து பணியாரம் செய்வார்கள்.. அதேபோல, பழத்திலிருந்து சாறு எடுத்து, அதனுடன் தேங்காய், வாழைப்பழம், பால், சர்க்கரை சேர்த்து இனிப்புகள் செய்வார்கள்.
பனம்பழத்திலிருந்து சாறு எடுத்து, அதை வெயிலில் காயவைப்பார்கள். மறுபடியும் அதன்மீது பனம்பழ சாற்றை ஊற்றி, மறுபடியும் நன்றாக காயவைப்பார்கள். இது நன்றாக இறுகி இனிப்பு கட்டியாகிவிடும்.. இலங்கை போன்ற நாடுகளில் இந்த இனிப்பு கட்டிகளுக்கு நிறைய மவுசு உள்ளது.
பழச்சாறு சத்துக்கள்: இந்த பனம்பழ சாற்றில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, உலோக உப்புக்கள், சர்க்கரை, வைட்டமின் C, கரோட்டின் என ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.. சரும நோய்களுக்கு இந்த பழத்தின் சாறு பூசினால், ஆரோக்கியமான முறையிலேயே தீர்வுகிடைக்கும்.
எனினும், பனம்பழத்தில் மாவுச்சத்து அதிகம் என்பதால், நிறைய சாப்பிடக்கூடாது. வயிறு உபாதைகள் வரலாம்.. தசைப் பிடிப்பும் ஏற்படலாம் என்பதால் அளவுடன் சாப்பிடுவது முக்கியம்..
தவிர்க்கலாம்: ஆனால், பலவீனமான செரிமான அமைப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப்பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிடாய் உள்ள பெண்கள், பித்தப்பை பாதிப்பு இருப்பவர்கள், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்கள் அலர்ஜி உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம் அல்லது டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே இந்த பனம்பழத்தை சாப்பிட வேண்டும்..!!
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications