கடல் மீனில் பெஸ்ட் கனவா மீன்.. நீரிழிவு, இதய நோயாளி சாப்பிடகூடியது கணவாய் மீன்கள்.. சபாஷ் ஓடு கனவா
சென்னை: Squid Fish என்று சொல்லப்படும் கணவாய் மீன்களின் மருத்துவ குணங்கள் என்னென்ன தெரியுமா? யார் யாரெல்லாம் கணவாய் மீன்களை தாராளமாக சாப்பிடலாம்? மீனவர்களுக்கு லாபம் தரும் ஓடு கனவா என்பது என்ன?
கணவாய் மீன்கள் முதுகெலும்பு இல்லாத ஒருவகையான மீனாகும்.. பார்ப்பதற்கு ஆப்டோபஸ் போலவே இருக்கும்... இதன் கண்களும் வித்தியாசமானது.. கணவாய் மீன்களிலேயே நிறைய வகைகள் உள்ளதாம். ரம்பம் போல பற்களும், உதடுகளும், தலையில் 8 கைகளும், வாலில் 2 துடுப்புகள் கொண்டிருக்கும் இந்த மீன்கள்.

வகைகள்: இந்த 8 கைகளில்தான் தனக்கான உணவை தேடி கொள்கின்றன.. மீன் குஞ்சுகள், இறால்களை உணவாக சாப்பிடுமாம் கணவாய்கள்.. 8 கைகளின் உட்புறங்களிலும் உறிஞ்சு கிண்ணங்கள் போல இருக்கும். இந்த கிண்ணங்களை வைத்துதான், இரையை லபக்கென பிடித்து சாப்பிடும்.
பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், ஒமேகா-3 போன்ற சத்துக்களும், செலினியம் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் இந்த மீனில் நிறைந்துள்ளது.. 100 கிராம் கணவாய் மீனில் 44.8 µg செலினியம் உள்ளது. இந்த செலினியம் என்பது ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது என்பதால், நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகின்றன.
இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்துக்கு கணவாய் மீன்கள் சிறந்தவையாகும். கணவாய் மீன் என்றாலே கொழுப்பு மீன் என்பார்கள். இதிலிருக்கும் நல்ல கொழுப்புகள், இதய ஆபத்தை தடுப்பதுடன், தமனிகளில் படிந்துள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்க உதவுகிறது. இந்த மீனில் வைட்டமின் B12 உள்ளதால், இதய நோயாளிகள் சாப்பிடுவது நல்லது.. புரோட்டீனும் கணிசமாக உள்ளதால், உடல் எடை அதிகரிக்காது.
புற்றுநோய் தொடர்பான செல்களையும் அழிக்கும் சக்தி கணவான் மீன்களுக்கு உள்ளது. ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு கை கொடுத்து உதவக்கூடியது இந்த கணவாய் மீன்கள்.. இதை உணவில் தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது, ரத்த சிவப்பணுக்களும், வெள்ளை அணுக்களும் அதிகமாகும். மூளைக்கு தேவையான ஆக்சிஜனும் கிடைக்கும்.. இதன்காரணமாக மூளை வளர்ச்சியும் அதிகமாகிறது.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடிய மீன் இதுவாகும். இன்சுலின் குறைபாட்டையும் சமன்படுத்துகிறது. பாதரசம் மிகவும் குறைவாக உள்ள மீனாகவே கருதப்படுவதால், பயமின்றி உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளலாம். இதிலிருக்கும் B3 ரத்தத்தின் சர்க்கரை அளவை சமச்சீராக வைப்பதற்கு உதவியாக இருக்கிறது.
ஆண்மை குறைபாடுகளை தடுப்பதிலும் இந்த கணவான் மீன்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. தொடர்ந்து கணவான் மீன்களை சாப்பிட்டு வரும்போது, விந்து அதிகரிக்குமாம்.. தைராய்டு தொந்தரவு உள்ளவர்கள், அலர்ஜி தொந்தரவு உள்ளவர்கள் தாராளமாக கணவாய் மீனை சாப்பிடலாம்.. இதனால், தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெற முடியும்.
ஓடு கணவாய்: இந்த கணவாய் மீனில் இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், சாதாரண கணவாய் மீன்களுக்கு ஓடுகள் இருக்காது. சிலவகை கணவாய் மீன்களுக்கு ஓடு இருக்கும். இவை ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் இரண்டு கிலோ வரை எடை கொண்டதாகும்.
இது மே மாதம் இறுதியில் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரையிலான சீசனில் இது கிடைக்கிறது.. இந்த ரக மீனை பிடிக்க வேண்டுமானால், 800 பாயிண்ட் என்ற ஸ்பெஷல் வலையை மீனவர்கள் பயன்படுத்துவார்களாம்.காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்கடலில் பிரத்யேக வலைகளை பயன்படுத்தி, ஓடு கணவாய் மீன்கள் பிடிக்கப்படுகின்றன.
சிறப்பு: ஓடு கணவாய் மீன்கள் கிலோ 150 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும் விற்கப்படுகின்றன. இந்த ஓடுகள், உள்ளூரில் விலை போகாது என்பதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஓடுகளை பதப்படுத்தப்பட்டு, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், கணிசமான லாபத்தை வியாபாரிகளால் பெற முடிகிறது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications