கொழு கொழு கொழுப்பை.. கடகடனு கரைக்கும் "அதிசய பால்".. அடடே, தாய்ப்பாலுக்கு இணையான சத்துக்களாமே.. செம
சென்னை: உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை கரைப்பதில், கழுதைப்பாலுக்கு நிறைய பங்கு உண்டு.. ஏராளமான சத்துக்கள் நிறைந்த இந்த கழுதைப்பால் உடலுக்கு நன்மை தரக்கூடியவை.
கலோரிகள், கார்போஹைட்ரேட்டுகள், புரதம், கொழுப்பு, கால்சியம், ரிபோபிளேவின், வைட்டமின் E, A, C, B1, B6, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், அமினோ அமிலங்கள் இப்படி ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.

கழுதைப்பால்: 100 கிராம் கழுதை பாலில், 68.9 மில்லி கிராம் கால்சியமும், 41 மில்லிகிராம் பாஸ்பரஸும் இருக்கிறதாம். இது மாட்டுப் பாலை விட குறைவானது என்றாலும், உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது. அதேசமயம், மாட்டுப்பாலைவிட, கழுதை பாலில் ஆக்ஸிஜன் திறன் அதிகம் என்கிறர்கள்.
செல்கள் சேதமடைவதைத் தடுப்பதன் மூலமும் நமது வயதைக் குறைக்க உதவுகிறது... மாட்டுப்பாலை விட, இந்த கழுதைப்பாலில், குறைந்த அளவிலான pH உள்ளடக்கம் உள்ளது. இது நம்முடைய சருமத்தை பராமரிக்க உதவக்கூடியது.
கொழுப்புகள்: இந்த கழுதை பால் மிக குறைந்த அளவு கொழுப்பை கொண்டது.. அதாவது, 100 கிராம் கழுதை பாலில் வெறும் 8.6 மில்லிகிராம் கொழுப்பு மட்டுமே இருக்கிறதாம்... மாட்டுப்பாலுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு.. அதனால்தான், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், இந்த கழுதைப்பாலை குடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.. இந்த கழுதைப்பாலில் லினோலிக் என்ற அமிலம் உள்ளதால், உடல் எடை குறைவதில் பேருதவி புரிகிறது. அத்துடன் கொழுப்புகளை கரைக்கிறது.
ஏகப்பட்ட வைட்டமின்கள், ஆன்டி-ஆக்சிடன்டுகள் இந்த கழுதைப்பாலில் உள்ளன. இளமையான தோற்றத்துக்கும், பொலிவான சருமத்துக்கும், இந்த சத்துக்கள் துணை புரிகின்றன. அதனால்தான், உலகப்பேரழகி கிளியோபாட்ரா இந்த கழுதைப்பாலில்தான் தினமும் குளித்ததாக சொல்வார்கள்.. அந்த அளவுக்கு, அழகு பராமரிப்பில் அத்தியாவசிய பொருளாக இந்த கழுதைப்பால் உபயோகப்படுகிறது.
முகச்சுருக்கம்: வயதான தோற்றம், முக சுருக்கத்தை நீக்கி, இளமையை தக்க வைப்பதில் கழுதை பாலின் பங்கு அபரிமிதமானது. இதிலுள்ள வைட்டமின் Dயும், இந்த சரும ஆரோக்கியத்துக்கு உதவி செய்கிறது. ஃபேஸ்பேக் தயாரிப்பிலும் இந்த கழுதைப்பால் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
கழுதைப்பாலை குடித்து வந்தால், ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைவது தடுக்கப்படும்.. இதய ஆரோக்கியம் மேம்படும்.. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்படும்.. புற்றுநோய்களுக்கு எதிராக வினையாற்ற கூடியது. நுரையீரல் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது.. ஒவ்வாமை பிரச்சனைகளை சரி செய்கிறது.. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. கீல்வாத நோயை தடுப்பதுடன், அந்த நோய்க்கான சிகிச்சையும் பயன்படுகிறது.
தாய்ப்பாலுக்கு இணையானது: இந்த கழுதை பாலை காய்ச்சிதான் பயன்படுத்த வேண்டும்.. நன்றாக காய்ச்சிய பாலை, 3 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம். இந்த கழுதைப்பாலில், மாட்டுப்பாலை போலவே, பால் பவுடர், சீஸ் போன்றவைகளும் தயாரிக்கப்படுகின்றன.. தாய்ப்பாலை போலவே இந்த கழுதைப்பால் உள்ளதாக ஆய்வுகளே மெய்ப்பித்திருப்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications