முரல் மீன்கள்.. அடுத்து பெஸ்ட் மத்தி மீன்.. "இந்த" பழம் விட்றாதீங்க.. சூப்பரான கால்சியம் உணவு டிப்ஸ்
சென்னை: நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களில் ஒன்று கால்சியம்.. நாம் உண்ணும் உணவுகளிலேயே இந்த கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. என்னென்ன உணவுகள் தெரியுமா?
இந்த கால்சியம் சத்துக்கள்தான், நம்முடைய எலும்புகளையும், பற்களையும் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்து கொள்ள உதவுகிறது. அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு, இரும்பு சத்துக்களை போலவே, கால்சியம் சத்துக்கள் சற்று அதிகமாகவே தேவைப்படுகிறது.

கால்சியம்: எலும்புகள், பற்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், வலுவாக இருப்பதற்கும் இந்த கால்சியம்தான் உதவுகிறது.. ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, ஹார்மோன் அளவை கட்டுப்படுத்துவதற்கும் உடலுக்கு கால்சியம் மிகவும் அவசியமாகிறது. முதுகுவலி, மூட்டுவலிகளை போக்கவும் இந்த கால்சியம்தான் அதிகம் தேவைப்படுகிறது.
இந்த கால்சியம் நிறைந்த உணவுகள், பால் பொருட்கள், சோயா, பச்சை காய்கறிகளில் அதிகம் உள்ளது.. பால் பொருட்களை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஒருவேளை தயிர், பால் பொருட்களை எடுத்துக்கொள்ள விரும்பாதவர்கள், சோயா அல்லது சோயா பாலை உணவில் சேர்க்கலாம்.
அருகுலா: அதேபோல கீரைகளில் அருகுலா என்ற ஒரு வகை உண்டு. இந்த அருகுலா கீரைகளை பெரும்பாலும் சாலட்களில் பயன்படுத்துவார்கள்.. கால்சியம் அதிகம் தரும் கீரைகளில் இதுவும் ஒன்றாகும். கால்சியத்துடன், வைட்டமின் D நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்...
அத்திப்பழத்தில் நிறைய கால்சியம் சத்தும் உள்ளது, இரும்புச்சத்தும் உள்ளது.. தினமும் 3 துண்டு சாப்பிட்டு வந்தாலே போதும். இதில், கால்சியம் நிறைந்த பழங்களில் ஆரஞ்சு பழத்தை சேர்த்து கொள்ளலாம்.
ஜிலேபி: அதேபோல, இறைச்சி வகைகளில் மீன்களில் கால்சியம் சத்துக்கள் உள்ளன.. குறிப்பாக, நெத்திலி மீன்களில் கால்சியம் நிறைந்து காணப்படுவதால் இதனை அதிகளவில் உணவில் சாப்பிடலாம். இதனால், எலும்புகள் உறுதிப்படும்.,
இதற்கடுத்தபடியாக வைட்டமின், தாதுக்கள், ஒமேகா 3 போன்றவற்றுடன் கால்சியம் சத்தும் இந்த சால்மன் மீனில் அதிகமாக உள்ளதாம்.. இதற்கு அடுத்தபடியாக கெண்டை மீன்கள் எனப்படும் ஜிலேபி மீன்களை சொல்லலாம். எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும், உறுதித்தன்மைக்கும் இந்த ஜிலேபி மீன்கள் உதவுகிறது. அதுமட்டுமல்ல, புற்றுநோய் உருவாவதற்கான அபாயங்களையும் ஜிலேபி மீன்கள் குறைக்கின்றன.
கால்சியம் சத்துக்கள்: சார்டின் வகை மீன்கள் கால்சியம் சத்தில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. அதாவது, 50 கிராம் சார்டின் மீனில் 340 மிகி அளவு கால்சியம் இருக்கிறதாம். 85 கிராம் சால்மன் மீன் உண்பதால் 241 மிகி கால்சியம் சத்து கிடைக்கிறதாம்..
இதில், முரல் மீன்களையும் சேர்த்து கொள்ளலாம்.. ராமநாதபுரம் மாவட்டத்தில், கரைவலையில் முரல் மீன்கள் முட்டிக் கொண்டு வந்தாலே மீனவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்களாம். அந்த அளவுக்கு அரிதான இந்த மீனில் குறிப்பிட்ட அளவு கால்சியம் உள்ளது.
நெத்திலி மீன்கள்: ஆனால், அனைத்து வகையான மீன்களிலுள்ள முட்களில் நிறைய கால்சியம் உள்ளது.. எனவே, சால்மன் மற்றும் சார்டின் வகை மீன்களை, அதன் முட்கள் மற்றும் தென்மையான எலும்புகளுடன் சேர்த்து மென்று விழுங்கினால், கால்சியம் சத்துக்கள் வீணாகாது.. மத்தி, நெத்திலி போன்ற சின்ன சின்ன மீன்களை பொரித்தும் சாப்பிடலாம்.












Click it and Unblock the Notifications