பச்சை பச்சையா தொங்கும் இலை.. ஒரே கிழங்கில் பல ஆச்சரியம்.. ஜூஸை விடுங்க.. "ஆரஞ்சு கலர் சட்னி" பாருங்க
சென்னை: பொதுவாக, பீட்ரூட், பூசணி, முள்ளங்கி போன்ற காய்களுடன் சேர்ந்தே இருக்கும் கீரைகளில் சத்து அதிகம் இருக்கும்.. இந்த காய்களைவிட, அதன் கீரைகளில்தான் நிறைய சத்துக்கள் உள்ளன. ஆனால், நாம் காய்களை எடுத்துக்கொண்டு, இலைகளை தூக்கி எறிந்துவிடுகிறோம். அதில் ஒன்றுதான் கேரட்.
A, B6, K1, போன்ற அரிய வைட்டமின்களும், பையோடின், பொட்டாசியம் சத்துக்களும் நிறைந்தவையே இந்த கேரட்.. புற்றுநோய் போன்ற பயங்கர நோய்களை முளையிலேயே அழிக்கக்கூடிய சக்தி இந்த கேரட்டுக்கு உண்டு..

அனைத்து வகையான புற்றுநோய் செல்களை இந்த கேரட் அழித்துவிடக்கூடியது.. அதனால்தான், கீமோ தெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சையை எடுத்துக்கொண்டவர்களை, இந்த கேரட் ஜூஸ் தொடர்ந்து சாப்பிட சொல்வார்கள்.
சர்க்கரை: அதேபோல, இனிப்பு சுவை கொண்ட இந்த கேரட், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்பதுதான் ஆச்சரிய உண்மை. சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் உதவுகிறது. ஆனால், கேரட்டை "அளவோடு" சாப்பிட வேண்டும். அதுவும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
குறைவான கலோரிகளே உள்ளதால், உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், நார்ச்சத்து நிறைந்த இந்த கேட்டை தாராளமாக சாப்பிடலாம். கரையக்கூடிய நார்ச் சத்து உள்ளதால், ரத்தத்தில் உள்ள கொழுப்பை, இந்த கேரட் குறைத்துவிடும்.. கேரட்டை ஜூஸ் தயாரித்து குடிக்கும்போது, சருமம் பளபளப்பாகும்.. அழகு கூடிவிடும்.. வயதான தோற்றமும் தள்ளிப்போடப்படும்..
ஆண்மை சக்தி: இதய நோய்கள் வருவது தடுத்து நிறுத்தப்படும்.. பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் + தேன் கலந்து சாப்பிட்டால், ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்பார்கள்..
ஒருமுறை இங்கிலாந்தில் ஆய்வு ஒன்றை நடத்தினார்கள்.. இந்த ஆய்வுக்காகவே, 100 ஆரோக்கியமான கர்ப்பிணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.. அதில் 35 பேருக்கு, கீரையின் சுவை கொண்ட மாத்திரையை சாப்பிட தந்துள்ளனர்.. 35 பேருக்கு கேரட்டின் சுவை கொண்ட மாத்திரையை தந்திருக்கிறார்கள்.. மிச்சமுள்ள 30 பேருக்கு எந்த மாத்திரைகளையும் சாப்பிட தரவில்லையாம். இப்போது 20 நிமிடம் கழித்து இந்த ஆய்வின் ரிசல்ட்டை பார்த்துள்ளனர்.

கேரட் சுவை: அதில், கீரையை சாப்பிட்ட தாய்மார்களின் வயிற்றில் இருந்த கருவானது, முகத்தை வருத்தமாக வைத்திருந்ததாம். ஆனால், கேரட்டின் வாசனையை கொண்ட மாத்திரைகளை சாப்பிட்ட தாய்மார்களின் வயிற்றில் இருந்த குழந்தை, சிரித்துக் கொண்டே கொண்டிருந்ததாம்.
கேரட்டும், வேர்க்கடலையும் கலந்த சத்து நிறைந்த சட்னி செய்யும்போது, சத்துக்கள் இரட்டிப்பாகும். அதாவது, ஒரு வாணலில் எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் வறுத்து எடுத்து கொண்ட, அதே வாணலிஎண்ணெயில் கேரட்டை வதக்கி எடுக்கவும். இப்போது மிக்சியில் வறுத்த வேர்க்கடலையுடன், வறுத்த பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து அரைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால், வேர்க்கடலை + கேரட் சட்னி ரெடி.
சுவையான சட்னி: ஆனால், கேரட்டை பயன்படுத்தும்போது, பெரும்பாலானோர், கேரட் இலைகளை கீழே போட்டுவிட்டு, வெறும் காய்களை மட்டுமே பயன்படுத்துவார்கள்.. இந்த கேரட் இலைகளில்தான், நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்களும், நார்ச்சத்துகளும் உள்ளதாம்.. பீட்ரூட் இலைகளை போலவே, இந்த கேரட் இலைகளை சமைத்து உண்ணலாம் என்கிறார்கள்.
முதலில், இந்த இலைகள் விஷம் என்று சொல்லி ஒதுக்கிவிட்டார்களாம்.. பிறகுதான், அந்த இலைகள் கசப்பாக உள்ளதால், யாராலும் விரும்பப்படுவதில்லை என்கிறார்கள்.. இந்த இலையை சட்னியாக செய்து சாப்பிடலாம்..
சட்னி, அடை: கேரட் இலைகளில் குளோரோபில் உள்ளதால், இது உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறதாம்.. கேரட் இலைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயனுள்ளதாகின்றன.. இந்த கேரட் இலையை பொடிப்பொடியாக நறுக்கி, முட்டை கலந்து பொரியல் செய்யலாம்.. அல்லது அடை போலவும் செய்யலாம்.












Click it and Unblock the Notifications