தொள தொளன்னு சதைகள் இருக்கா? கடகடன்னு வெயிட் குறையணுமா.. தயிர்கூட "இதை" மட்டும் சேர்த்து சாப்பிடுங்க
சென்னை: உடல் எடை குறைப்பதில் தயிர் மிக முக்கிய பங்காற்றக்கூடியது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த தயிருடன் வேறு ஒரு பொருளையும் சேர்த்தால், உடல் எடை விரைவாக குறையும் என்கிறார்கள்.
உடல் எடை குறைக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றாலும், அந்த தண்ணீரையும், சத்தான தண்ணீராக குடித்தால் இன்னும் உபயோகமாக இருக்கும். குறிப்பாக, இஞ்சி மற்றும் எலுமிச்சம் சாறு கலந்த தண்ணீர் குடிக்கலாம். அல்லது, பட்டையை தூள் செய்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

வெந்தயப்பொடி: அல்லது வெந்தயப் பொடியை எடுத்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சாப்பிடலாம்.. அல்லது வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அல்லது திரிபலா பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து, இரவு உணவுக்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். அல்லது சுக்குப்பொடியை சூடான நீரில் கலந்து குடிக்கலாம்.
வெறும் தண்ணீருக்கு பதிலாக இப்படியெல்லாம் மாற்றி எடுத்து கொள்ளும்போது, ஜீரண சக்தி அதிகரிக்கிறது.. உடல் கழிவுகள் நீங்குகிறது. அதிகப்படியான கொழுப்பை கரைக்க உதவுகிறது.. புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதேசமயம், சில காம்பினேஷன்களும், உடல் எடை குறைப்பதில் ஒர்க் ஆகிவிடும்.. அப்படிப்பட்ட ஒன்றுதான், தயிர் + வெல்லம்.
வழக்கமாக, தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அது லஸ்ஸியாகிவிடும்.. ஆனால், தயிருடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவது பலரும் அறியாதது.. இதன் ருசி அபாரமாக இருக்கும் என்பதைவிட, உடல் எடை குறைவதில், இவை இரண்டுமே முக்கிய பங்காற்றுகிறது என்பது ஆச்சரிய உண்மை.
பெஸ்ட் தயிர்: தயிரை பொறுத்தவரை, தயிரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை உடையவை.. கால்சியம் நிறைந்த உணவு.. தெர்மோஜெனீசிஸின் செயல்முறையை அதிகரிக்க இந்த கால்சியம் பயன்படுகிறது..
வளர்சிதை மாற்றத்தையும் அதிகரித்து, உடலில் இருந்து தேவையற்ற எடையை அகற்றவும் உதவுகிறது.. தயிர் சாப்பிடுபவர்கள் உடல் எடை எப்போதுமே சீராக காணப்படும்.. அத்துடன், தினமும் ஒரு கப் தயிர் அளவோடு எடுத்து கொண்டாலே, உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம் என்கிறார்கள்.
அதேபோல வெல்லத்தை எடுத்துக்கொண்டால், இது ஒரு ஆன்டி அலர்ஜிக் என்பதை பலரும் அறிவதில்லை.. வெல்லத்தில் நிறைய பொட்டாசியம் உள்ளது.. கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் போன்றவை உள்ளன.. வெல்லத்தில் ஒருவித நீர்ப்புத் தன்மை இருப்பதால், இதை தினமும் சாப்பிட்டு வருவதால், உடல் எடை கூடாது, அத்துடன், உடல் சமச்சீர் அடைந்துவிடும்.

நார்ச்சத்து: வெல்லத்தில் நார்ச்சத்து அதிகம்.. இதனால், குடல், நுரையீரல் பகுதியை சுத்தம் செய்வதில் வெல்லத்துக்கு நிறையவே பங்கிருக்கிறது. சர்க்கரையைவிட, வெல்லத்தில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன.. இந்த கலவையை சாப்பிடும்போது, சற்று மிளகையும் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் பலன் தரும்.
ஆக, இந்த வெல்லமும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.. தயிரும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.. அப்படிப்பட்ட இரண்டு பொருட்களையும் ஒன்று சேர்ந்து சாப்பிடும்போது, உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க பெரிதும் உதவு செய்கிறது.. அத்துடன், வயிற்றுப்பகுதியை சுற்றியுள்ள கொழுப்புகளும் கரைகின்றன..
இதனால் சுறுசுறுப்பு கூடும்.. உடல் எடை குறைப்பையும் தாண்டி, சளி, இருமலுக்கு நிவாரணம் தரக்கூடியது இந்த கலவை. பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலிக்கு, இந்த தயிர் + வெல்லம் கலவை மிகவும் நல்லது.. ரத்த சோகை பிரச்சனையும் நீங்கும்..
உடல் எடை: வயிற்றில் வாயு, அமிலத்தன்மை போன்ற தொந்தரவுகளையும் சரி செய்கிறது. அதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அல்லது ஜிம்முக்கு செல்பவர்கள், அல்லது உடல் எடையை சீராக வைத்திருப்பவர்கள் இந்த வெல்லம் + தயிர் காம்பினேஷனை ட்ரை பண்ணலாம்..!!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications