Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றிலை தரும் வெற்றி.. வெறும் 4 இலை போதுமே.. சட்டென தெரியும் மாற்றம்.. வெயிட் லாஸுக்கு நல்ல டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்றாலும், உடல் எடையை குறைப்பதில் எப்படி செயலாற்றுகின்றன தெரியுமா?

வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற இனத்தைச்சேர்ந்த ஒரு கொடியாகும்.. அதனால்தான் வெற்றிலை கொடி என்கிறார்கள்.. மற்ற நாடுகளைவிட நம்முடைய இந்தியாவில் வெற்றிலை போடும் பழக்கம் அதிகமாம். சாப்பாட்டுக்கு பிறகு, வீட்டில் பெரியவர்கள் வெற்றிலை போடுவதை ஒரு பழக்கமாகவே கடைப்பிடித்து வருகிறார்கள்.. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தையும் போக்குகிறது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது...

Do you know Excellent Benefits in Betel Leaf and Betel Leaves are very helpful in Weight Loss

நரம்பு மண்டலம்: நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்... வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்சனையை நீக்குகிறது ஒரு வெற்றிலையினுள் ஐந்தாறு துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கிப் பிழிய வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.

செரிமான ஆரோக்கியத்தை அதிகப்படுத்துகிறது.. வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியும்கூட.. நமது உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் ஏற்பட்டால், அந்த வலிகளை போக்க இந்த வெற்றிலையை பயன்படுத்தலாம்... இதை அளவோடு சாப்பிட்டுவந்தால் ஆண்மை குறைபாடும் நீங்கும். இந்த வெற்றிலையை வெறுமனே மென்று சாப்பிட்டாலே, வயாகராவுக்கு இணையான சக்தி கிடைக்குமாம்.

கொழுப்புகள்: இன்னும் பலப்பல நன்மைகளை தரக்கூடியது இந்த வெற்றிலை. ஆனால், உடல் எடையை குறைப்பதிலும் மிகப்பெரிய பங்கு இந்த வெற்றிலைக்கு உள்ளது. காரணம், மிகக்குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தை இந்த வெற்றிலை கொண்டிருக்கிறது.. இதைத்தவிர, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, நிகோடினிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வெற்றிலையில் உள்ளன.

உடல் கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச்செய்வதில், வெற்றிலையின் பங்கு மகத்தானது. வியர்த்தல், சிறுநீர் உற்பத்தியையும் இந்த இலைகள் மேம்படுத்துகின்றன.

துவர்ப்பு சுவை: உடல் எடை குறைய வேண்டுமானால், முதலில் குடல் ஆரோக்கியம் காக்கப்பட வேண்டும். வெற்றிலை போடுவதிலேயே சில மாற்றங்களை கையாளலாம்.. அதாவது, காலையில் வெற்றிலை, பாக்கு போடுகிறீர்கள் என்றால், பாக்கு அளவை சற்று கூட்டிக்கொண்டால், துவர்ப்பு சுவையான பாக்கு, மலமிளக்கியாக செயல்பட்டுவிடும். ஒருவேளை, மதியம் வெற்றிலை போடுவதாக இருந்தால், சுண்ணாம்பின் அளவை சற்று அதிகமாக சேர்த்து கொள்ளலாம்.

இளம் கொழுந்து வெற்றிலையுடன் நான்கைந்து மிளகு சேர்த்து, வாயில் போட்டு மென்று தின்றாலே போதும்.. உடல் எடை குறைய துவங்கும்.. அதுவும் வெறும் வயிற்றில், தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகள் நீங்கிவிடும்.. குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் நீங்கும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும்...

Do you know Excellent Benefits in Betel Leaf and Betel Leaves are very helpful in Weight Loss

அல்லது, இரவு தூங்க போகும்போது, 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர்திராட்சை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்றுவருவது, உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும். அதேபோல, இரவு நேரங்களில், வெற்றிலைகளை நசுக்கி, தண்ணீரில் ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை மட்டும் குடித்தாலும், குடல் இயக்கம் எளிதாகும்.

உடல் எடை: நார்ச்சத்து அதிகமுள்ள வெற்றிலையில், மிளகிலுள்ள ஃபைட்டோ நியூட்ரியண்ட்டுகள், பெப்பரின் போன்றவை சேர்வதால், உடலிலுள்ள கொழுப்பை உடைக்க எளிதாக உதவுகின்றன.. மிளகில் உள்ள பெப்பரைன் செரிமானத்திற்கும் சிறப்பாக உதவுகிறது..

ஆக, வெற்றிலை + மிளகு இவை இரண்டும் சேர்ந்து, வாயு தொந்தரவு, செரிமானமின்மை, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அசிடிட்டிகள், நச்சுக்கள், கழிவுகளை நீக்கி, குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது. பெண்களுக்கு வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் சேரும் மிகுதியான கொழுப்புகளும் கரைய துவங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+