சோற்றுக்கற்றாழை.. தலைமுடி கருகருனு வளர கற்றாழை எண்ணெய் போதும்.. கற்றாழையை இப்படித்தான் யூஸ் பண்ணணும்
சென்னை: கற்றாழை பலவித பயன்களை தருகிறது என்றாலும், சிலர் மட்டும் இந்த கற்றாழையை தொடவே கூடாது.. அதுமட்டுமல்ல, இந்த கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
சோற்றுக்கற்றாழையை பொறுத்தவரை, வைட்டமின் B, C சத்துக்கள் நிறைந்துள்ளன.. அதனால்தான், தினமும், வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸை குடிப்பதால், உடல் எடை குறைவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

உடல் சூடு இருப்பவர்கள், கற்றாழை சாறுடன், எலுமிச்சம் சாறு, சிறிது கல் உப்பு சேர்த்து குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும். குடல்புண்ணும் ஆறும்.. நீர்க்கடுப்பு, வயிறு எரிச்சல்கள் தணியும்.
சரும பாதுகாப்பு: சரும பாதுகாப்புக்கு இந்த கற்றாழை உதவுவதால்தான், ஃபேஸ் கிரீம்கள், சோப்புகள், ஷாம்ப்புகளில், கற்றாழையை மூலப்பொருட்களாக கட்டாயம் சேர்க்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை பிரச்சனையையும் இந்த சோற்றுக்கற்றாழை வெகுவாக தீர்க்கிறது.. அதனால்தான், இதற்கு குமரிகற்றாழை என்ற பெயரே உண்டு.
அதுமட்டுமல்ல, உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் இருப்பதால், சர்வரோக நிவாரணி என்றுகூட சொல்வார்கள். கற்றாழையுடன் தேன் சேர்த்து, மிக்ஸியில் ஜூஸாக அரைத்து வைத்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.. நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மலட்டு பிரச்சனைகளும் தீரும்.. ஆனால், மருத்துவரிடம் முறையான ஆலோசனையை பெற்று இதை செய்தால் முழு பலன் கிடைக்கும்.
பயன்பாடு: எப்படி பயன்படுத்த வேண்டும்: கற்றாழையில் பலவகை உள்ளதால், சோற்றுக்கற்றாழை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்களை நறுக்கி எடுத்துவிட்டு, அதிலுள்ள மஞ்சள் நிறப்பாலையும் வடித்துவிட வேண்டும். இதனுள் இருக்கும் வழவழ சதைப்போன்ற பகுதியை மட்டும் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ள வேண்டும்..
குறைந்தது 7 முறையாவது சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டுமாம். அப்போதுதான், இதிலிருக்கும் "அலோனின்" என்ற வேதிப்பொருள் முழுமையாக நீங்கும்.
நாம் சரியாக கழுவாமல் விட்டுவிட்டால், இந்த ஜெல்லானது, நம்முடைய வயிற்றில் சென்று, வயிற்றுப்போக்கு, வயிற்று எரிச்சல் போன்ற விளைவுகளை தந்துவிடும். இப்படி 7 அல்லது 8 முறை கழுவும்போது, கற்றாழையின் கசப்புச்சுவையும் விலகும்.. அதிலுள்ள நாற்றமும் நீங்கும்.
கற்றாழை நீர்: சதைப்பிடிப்புள்ள பகுதியிலிருந்து, சதைப்பகுதியை சேகரித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதன்மீது படிகாரத்தூளை தூவிவிட வேண்டும். இப்போது சிறிது நேரத்தில், சதைப்பகுதியிலிருந்து நீர் பிரிந்துவரும்.
இந்த தண்ணீருடன் வெண்ணெய், கற்கண்டு, வால்மிளகு சேர்த்து சாப்பிட்டால், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் வலி, உடல் அரிப்பு நீங்குமாம்.. அல்லது இந்த நீருடன் அதே பங்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். இதை அடுப்பில் வைத்து, நீர் வற்றும்வரை சுண்ட காய்ச்சி எடுத்து வைத்து கொண்டு, தினமும் தலையில் தடவிவந்தால், முடிஉதிர்வது நின்றுவிடும்.. அத்துடன், உடலிலுள்ள வெப்பமும் தணியும்.
யார் தவிர்க்கலாம்: இந்த கற்றாழை ஜெல், சிலருக்கு ஒவ்வாமையை தந்துவிடும். இதனால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால்,பயன்படுத்துவதற்கு முன்பு, சிறிய அளவில் கை, அல்லது முகத்தில் தடவி பார்த்துவிட்டு, பயன்படுத்தலாம்.
அதேபோல, கற்றாழையில் ஜூஸ் தயாரித்து குடிப்பதானால், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், இளந்தாய்மார்கள், அலர்ஜி உடையவர்கள் டாக்டரிடம் ஆலோசித்துவிட்டே ஜூஸை பயன்படுத்த வேண்டும்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications